Introducing 523

Today, we’re excited to announce 523 - our first content accelerator program.
மக்கள் ஒரு இடத்தை உருவாக்கி அங்கு அவர்களது உண்மையான நண்பர்களுடன் இணைந்து அவர்களை சுற்றியுள்ள உலகை பற்றி மேலும் அறிந்துகொள்வதன் மூலம் தங்களை உண்மையாக வெளிப்படுத்திக்கொள்ள உதவ Snapchat நிறுவியுள்ளோம். வெனிஸில் 523 ஒஷன் பிரண்ட் வாக்-இல் உள்ள ஒரு சிறிய அலுவலகத்தை தொடங்கிய ஒரு பெரிய யோசனையை செயல்படுத்தினோம்.
நாங்கள் எங்கள் தொழிலை நடத்தும் விதத்தில் இருந்து, நாங்கள் வடிவமைக்கும் தயாரிப்புகள், நாங்கள் உருவாக்கும் அனுபவங்கள் மற்றும் உள்ளடக்கம் வரை -- Snap இல் நாங்கள் செய்யும் அனைத்திற்கும் DEI ஐ அடிப்படையாக்க உறுதிபூண்டுள்ளோம். எங்கள் Snapchat சமூகத்தின் பன்முகத்தன்மையைப் பிரதிபலிக்கும் வகையில், நாங்கள் திட்டமிட்டு நிர்வகிக்கும் எங்கள் Discover உள்ளடக்கத் தளமானது, கூட்டாளர்களின் உள்ளடக்கத்தைக் கொண்டிருப்பதை உறுதி செய்வதே எங்கள் லட்சியம். ஒவ்வொரு மாதமும் (2021) Discover-இல் 100 மில்லியனுக்கும் அதிகமான Snapchat பயனர்கள் பொழுதுபோக்கு உள்ளடக்கத்தைப் பார்ப்பதால், அவர்களின் தனித்துவமான அடையாளங்கள் மற்றும் பல்வேறு விருப்பங்களைப் பேசும் உள்ளடக்கத்தை உருவாக்குவது எங்களின் ஒட்டுமொத்தப் பொறுப்பாகும்.
இன்று, எங்கள் முதல் உள்ளடக்க ஆக்ஸிலரேட்டர் திட்டமான - 523-ஐ அறிவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் - குறிப்பாக பெரிய போட்டியாளர்கள் மற்றும் வெளியீட்டாளர்களுடன் ஒப்பிடும்போது, இது பாரம்பரியமாக அணுகல் மற்றும் ஆதாரங்கள் இல்லாத சிறிய, சிறுபான்மையினருக்குச் சொந்தமான உள்ளடக்க நிறுவனங்கள் மற்றும் ஆக்கப்பூர்வப் படைப்புகளை ஆதரிக்கவும் அவை கவனிக்கப்படவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. Discover இல் உள்ளடக்கத்தைப் பகிர்வதன் மூலம் அவர்களின் தொழில்களையும் பார்வையாளர்களையும் அதிகரிக்க அவர்களுக்கு உதவுவதே இலக்காகும்.
இன்றிலிருந்து, பிப்ரவரி 1 ஆம் தேதி வரை இந்தத் திட்டம் விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்கிறது. இந்த இணையதளத்தில் மேலும் தகவலறிந்து விண்ணப்பிக்கவும் https://523.snap.com/ 
ஆறு மாத காலத்தில், 20 சிறந்த விண்ணப்பதாரர்களுக்கு Snap பின்வருவனவற்றை வழங்கும்்
  • நிதியுதவி மற்றும் ஆதாரங்கள் - Discover க்கான உள்ளடக்கத்தை உருவாக்குதல் மற்றும் படமாக்குவதில் விண்ணப்பதாரர்களின் முதலீட்டை ஆதரிக்க மாதத்திற்கு 10,000 அமெரிக்க டாலர்கள் நிதியுதவி அளிக்கிறது.
  • 1:1 வழிகாட்டுதல் -- விண்ணப்பதாரர்களின் ஈடுபாடு மற்றும் வணிக இலக்குகளை அதிகரிக்க Snapchat தளத்தை எவ்வாறு சிறப்பாகப் பயன்படுத்துவது என்பது குறித்த எங்கள் உள்ளடக்கம் + மீடியா கூட்டுக் குழுவின் வழிகாட்டுதல்.
  • கூட்டுக் கல்வி -- ஆக்கப்பூர்வ உக்தி, பணமாக்குதல் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய Snapchat முழுவதும் உள்ள நிபுணர்களின் அமர்வுகளுடன், வெற்றிகரமான சிறந்த நடைமுறைகளைப் பற்றிய நுண்ணறிவை வழங்கும் தனிப்பட்ட பயிற்சிகள்.
  • வெளிப்பாடு மற்றும் சந்தைப்படுத்தல்--- 523 திட்டத்துடன் தொடர்புடைய அறிவிப்புகள் மற்றும் பொது நிகழ்வுகளில் சேர்த்தல். திட்டத்திற்கு நேரத்தையும் வளங்களையும் வழங்கும் ஆதரவாளர்களுடன் தொடர்புகளை உருவாக்குவதற்கான வாய்ப்பையும் பங்கேற்பாளர்கள் பெறுவார்கள். ஆதரவு அளிப்பவர்கள்: AT&T, நிசான், டார்கெட், ஸ்டேட் பார்ம், யூனிலீவர், ஊபர் ஈட்ஸ், மற்றும் மெக்டொனால்ட்ஸ்.
  • சமூக ஈடுபாடு -- 523 திட்டத்தில் உள்ள மற்ற நிறுவனங்களுடன் இணைந்து Snapchat மூலம் வலுவான இணைப்பையும் உருவாக்கும் வாய்ப்பு.
523 இல் தொடங்கிய நாள் முதல் நாங்கள் பெருமளவு முன்னேறியுள்ளோம், ஆனால் இன்னும் அந்த எண் எங்களுக்கு மிகவும் முக்கியமானது. இந்தத் திட்டத்திற்குப் அதன் பெயரை வழங்கினோம், ஏனெனில் அது எவ்வாறு இருக்க வேண்டும் என விரும்புகிறோமோ அவை அனைத்தையும் அது பிரதிநிதித்துவப்படுத்துகிறது: சாத்தியமானதை மறுபரிசீலனை செய்ய மற்றவர்களையும் தூண்டும் நமது கடந்த காலத்தின் ஏற்பு.
உங்களுடைய கருத்துக்களை கேட்க ஆவலுடன் காத்திருக்கிறோம்!`
Back To News