A Story for Everything

Since we launched Stories in October 2013, Stories have evolved from singular, personal perspectives to include collective narratives created by our entire community with Snaps submitted to Our Story and curated by our team.
அக்டோபர் 2013 இல் நாங்கள் கதைகளைத் தொடங்கியதிலிருந்து, நம் ஒட்டுமொத்த சமூகத்தினரால் உருவாக்கப்பட்ட கூட்டு விவரிப்புகளை எங்கள் கதைக்கு சமர்ப்பித்த மற்றும் எங்கள் குழுவினரால் நிர்வகிக்கப்பட்ட ஸ்னாப்ஸுடன் சேர்க்க, தனித்துவமான, தனிப்பட்ட கண்ணோட்டத்தில் கதைகள் உருவாகியுள்ளன.
சூப்பர் பவுல் களத்திலிருந்து எவரெஸ்ட் சிகரத்தின் உச்சி வரையில் — உலகெங்கிலுமுள்ள ஆர்வமிக்க நிகழ்வுகளின் பின்னணிக் காட்சிகளின் Snapகளை எங்கள் கதைகள் வழங்கியுள்ளன! காலப்போக்கில், எங்கள் சமூகத்தினால் உருவாக்கப்பட்டு எங்கள் கதையில் சேர்க்கப்பட்ட Snapகளின் எண்ணிக்கை எங்கள் தெரிவுதேர் குழுவினை மூழ்கடித்தது — இது புதிதாக ஒன்றை உருவாக்க எங்களை ஊக்குவித்தது.
எங்கள் கதைக்கு சமர்பிக்கப்பட்ட Snapகளில் என்ன நடக்கிறது என்பதைப் புரிந்துகொள்வதற்கும், மேம்பட்ட இயந்திரக் கற்றலைப் பயன்படுத்தி புதிய கதைகளை உருவாக்குவதற்கும் ஓர் புதிய வழியை உருவாக்கியுள்ளோம். முடிவுகள் அற்புதமாக உள்ளன: நீங்கள் Snapchat இல் ஒரு மில்லியனுக்கும் அதிகமான தனித்துவமான கதைகளைத் தேடலாம்!
எங்கள் வல்லுநர்களால் தெரிவுதேரப்பட்ட கதைகளுடன் கூடுதலாக உள்ளூர் கூடைப்பந்தாட்டத்தைப் பார்க்கலாம், உங்களுக்குப் பிடித்த பாரில் நிலவும் காட்சியைப் பார்க்கலாம், உங்களுக்குப் பிடித்த பேஷன் வார நிகழ்ச்சிகளைப் பார்க்கலாம், தொலைதூர இடத்தினால் ஊக்கம்பெறலாம், அல்லது நாய்க்குட்டிகள் நிறைந்த கதைகளைச் சும்மா தட்டிப் பாருங்கள் — அனைத்திற்கும் ஓர் கதையுள்ளது!
எங்கள் சமூகத்தின் கண்களின் வழியே உலகைப் பார்ப்பது தான் கதைகளின் சிறந்த பகுதியாகும். உங்கள் பார்வையைச் சேர்ப்பது எளிது — எளிமையாக ஒரு Snap எடுத்து எங்கள் கதையில் சேருங்கள்! நீங்கள் Snap செய்வதைப் பொறுத்து தொடர்புடைய கதைகளில் இது சேர்க்கப்பட்டிருப்பதைக் காணலாம்.
இன்று முதல் தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்களில் தேடலில் கதைகளை வெளியிடுகிறோம், எங்களைப் போல் நீங்களும் அதை விரும்புவீர்கள் என நம்புகிறோம்!
Back To News