A Whole New Way to See Yourself(ie)

We’re thrilled to announce a whole new way to express yourself on Snapchat. When you’re using the camera to take a selfie, just press and hold on your face to activate Lenses. You can play with Lenses before taking a Snap — just select one from the row at the bottom and follow the on-screen instructions!
Snapchat இல் உங்களை வெளிப்படுத்திக்கொள்ள ஒரு புதிய வழியை அறிவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். செல்ஃபி எடுக்க கேமராவைப் பயன்படுத்தும்போது, லென்ஸஸை செயல்படுத்த உங்கள் முகத்தின் மீது அழுத்திப் பிடியுங்கள். ஸ்னாப் எடுப்பதற்கு முன் நீங்கள் லென்ஸஸுடன் விளையாடலாம் — கீழே உள்ள வரிசையில் இருந்து ஒன்றைத் தேர்ந்தெடுத்து, திரையில் உள்ள வழிமுறைகளைப் பின்பற்றுங்கள்!
ஏறக்குறைய இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கூடுதல் சேவைகளில் மறுஇயக்கத்தை அறிமுகப்படுத்தினோம், மறைவதற்கு முன்னர் அந்த அற்புதமான தருணங்களை (அல்லது நாங்கள் கவனிக்காதவற்றை…) இன்னும் ஒரு முறை அனுபவிக்க அதனைப் பயன்படுத்தினோம். ஒரு நாளைக்கு ஒரு Snapchat பயனருக்கு ஒரு மறுஇயக்கத்தை நாங்கள் வழங்கியிருந்தோம், இது சில நேரங்களில் மறுஇயக்கத்திற்குத் தகுதியான பல Snapகளைத் தினமும் பெறும் மில்லியன் கணக்கான Snapchat பயனர்களை மனஉளைச்சலுக்கு ஆளாக்கியது. ஆனால் பின்னர் தான் உணர்ந்துகொண்டோம் — மறுஇயக்கம் என்பது பாராட்டு போன்றது! அதனால் ஒன்றோடு ஏன் நிறுத்த வேண்டும்?
இன்று முதல் $0.99 க்கு 3 என்ற வீதத்தில் தொடங்கி, அமெரிக்க Snapchat பயனர்களால் கூடுதல் மறுஇயக்கங்களை வாங்க முடியும். நீங்கள் பெறும் எந்த Snapஇலும் மறுஇயக்கத்தைப் பயன்படுத்தலாம், ஆனால் எந்தவொரு Snapஐயும் ஒருமுறை மட்டுமே மீண்டும் இயக்க முடியும். அவை கொஞ்சம் விலை அதிகம் தான் — ஆனால் காலம் பொன் போன்றதல்லவா! ;)
நீங்கள் இந்தப் புதுப்பிப்பில் வெற்றிக்கிண்ணங்கள் (கேமராவிற்கு மேலே மடித்து வைக்கப்பட்டுள்ளன) உள்ளிட்ட சில கேளிக்கையூட்டும் ஆச்சர்யங்களையும் பார்ப்பீர்கள்.
Back To News