Bullying Prevention Month on Snapchat

We've designed Snapchat to be a place where people feel comfortable expressing themselves with their close friends and family. That's why we've never had public likes or comments, because they can create pressure to feel pretty or perfect when you're just trying to communicate with friends. We've also made it easy to choose who you want to talk to on Snapchat so that you won't be bothered by unwelcome noise.
மக்கள் தங்கள் நெருங்கிய நண்பர்களுடனும் குடும்பத்தினருடனும் தங்களை வெளிப்படுத்திக் கொள்வதற்கு வசதியான இடமாக Snapchat ஐ வடிவமைத்துள்ளோம். எனவே தான் நாங்கள் பொது விருப்பங்களையும் கருத்துக்களையும் கொண்டிருக்கவில்லை, ஏனென்றால் நீங்கள் நண்பர்களுடன் சாதாரணமாகத் தொடர்பு கொள்ளும்போது கூட அது அழகாகவோ சரியானதாகவோ உணர வேண்டுமென்ற அழுத்தத்தை அவை உருவாக்கலாம். Snapchat இல் நீங்கள் யாருடன் பேச விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்ந்தெடுப்பதையும் எளிதாக்கியுள்ளோம், எனவே விரும்பத்தகா பேச்சுகள் குறித்து கவலைப்பட வேண்டியதில்லை.
இவை அனைத்தையும் மீறி சிலநேரங்களில் துன்புறுத்துபவர்கள் நம்மைத் தொல்லை செய்ய வழியைக் கண்டுபிடிப்பார்கள் என்பதை அறிந்துள்ளோம், எனவே தான் Snapchat இல் துன்புறுத்துபவர்களுக்கு இடமில்லை என்ற செய்தியை தெளிவாக உரத்துக் கூற விரும்புகிறோம். துன்புறுத்தல் தடுப்பு மாதத்தினை ஆதரிக்க விளம்பரக் குழுவுடன் கூட்டிணைவதில் பெருமை கொள்கிறோம். இயங்கலையிலோ முடங்கலையிலோ துன்புறுத்தல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வடிகட்டிகள், ஸ்டிக்கர்கள், Snap விளம்பரங்களை உருவாக்கியுள்ளோம்.
துன்புறுத்தல் அல்லது புண்படுத்துகிறது எனக் கருதும் Snap ஐ நீங்கள் எப்போதேனும் பெற்றால், செயலியினுள் எளிதில் எங்களுக்கு புகாரளிக்க முடியும். அந்த Snap ஐ அழுத்திப் பிடியுங்கள், பின் 🏳️ பொத்தானைத் தட்டுங்கள். நடப்பதை எங்களுக்குத் தெரிவியுங்கள் — உதவுவதற்கு எங்களால் முடிந்ததை எப்போதும் செய்வோம்! எங்கள் பாதுகாப்பு மையத்தில் மேலும் அறியலாம்.
ஹேப்பி ஸ்‌னாப்பிங்!
Back To News