Contributing to COVID-19 Relief

Today, to further support the global COVID-19 relief efforts, we're launching a new augmented reality donation experience, using Snapchat Lenses to bring awareness to the COVID-19 Solidarity Response Fund for the World Health Organization.
உலகளாவிய கோவிட்-19 பெருந்தொற்று தொடர்ந்துகொண்டிருக்கும் இவ்வேளையில் Snapchat தொழில்நுட்பம் நண்பர்களுடனான தொடர்பைச் சாத்தியமாக்குகிறது, பொதுச் சுகாதார வழிகாட்டுதல்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது, நம்பகமான ஊடகப் பதிப்பாளர்கள் மூலம் தகவல்களை அறிந்திருக்க உதவுகிறது.
Snapchat அழைப்பு முதல் Snap கேமரா வரையில் குரல் மற்றும் வீடியோ வழியாக நண்பர்களை நெருக்கத்தில் வைக்கிறது. பெரும்பாலும் AR அனுபவத்துடன் பயன்படுத்தப்படும் Snapchat அழைப்பு அம்சத்தின் பயன்பாடு, கடந்த பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிடும் போது கடந்த மார்ச்சில் 50% வளர்ச்சியடைந்துள்ளது. *
புதிய ஆக்கப்பூர்வக் கருவிகள் தொகுப்புடன், Snapchat பயனர்கள் வல்லுநர்கள் ஒப்புதலைப் பெற்ற சிறந்த நடைமுறைகளைத் தங்கள் Snapகளில் நண்பர்களுடன் விரைவாகப் பகிர்ந்துகொண்டனர். உலக சுகாதார நிறுவனத்தின் பாதுகாப்பாக இருப்பதற்கான குறிப்புகளடங்கிய உலகளாவிய லென்ஸ் உள்ளிட்ட மூன்று புதிய கோவிட்-19 லென்ஸ்களை அறிமுகப்படுத்தினோம். இந்த லென்ஸஸ் உலகளவில் கிட்டத்தட்ட 130 மில்லியன் Snapchat பயனர்களைச் சென்றடைந்துள்ளன. **
இன்று உலகளாவிய கோவிட்-19 நிவாரணப் பணிகளுக்கு ஆதரவளிப்பதற்காக, உலக சுகாதார நிறுவனத்தின் கோவிட்-19 கூட்டு பதில்வினை நிதி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த Snapchat லென்ஸஸின் புதிய மிகைப்படுத்தப்பட்ட மெய்ம்மை நன்கொடை அனுபவத்தை அறிமுகப்படுத்துகிறோம்.
Snapchat கேமரா மூலமாக Snapchat பயனர்கள் 33 நாடுகளின் 23 பன்னாட்டு பணத்தாள்களை ஸ்கேன் செய்ய முடியும், மேலும் கோவிட்-19 பரவலைக் கண்டறிதல், நோயாளிகள் தேவையான கவனிப்பைப் பெறுவதை உறுதிசெய்தல், முன்களப் பணியாளர்களின் முக்கியப் பொருட்களை வழங்குதல் போன்ற உலக சுகாதார நிறுவனத்தின் பதில்வினை முயற்சிகளுக்கு நன்கொடைகள் எவ்வாறு உதவுகின்றன என்பதை AR காட்சிகளாகக் கொண்டு வர முடியும். அதன் பின் Snapchat பயனர்கள் எளிதில் நன்கொடையளிக்கலாம், அந்த அனுபவத்தை Snapகளாக அனுப்புவதன் மூலம் நண்பர்களும் நன்கொடையளிக்க ஊக்குவிக்கலாம்.
மேலும் எங்கள் Discover தளத்தில் கோவிட்-19 செய்திகளை வழங்கும் ஊடகப் பதிப்பாளர்கள் மேலே ஸ்வைப் செய்வதன் மூலம் அவர்களின் உள்ளடக்கத்திலிருந்து நேரடியாக நன்கொடை அளிக்கும் வாய்ப்பினை Snapchat பயனர்களுக்கு வழங்குகின்றனர். கோவிட்-19 பற்றி இன்றைய தேதி வரை 445க்கும் அதிகமான Discover கதைகள் அல்லது காட்சிகள் தயாரிக்கப்பட்டுள்ளன, உலகளவில் 68 மில்லியனுக்கும் அதிகமான Snapchat பயனர்கள் Snapchat இல் கோவிட்-19 தொடர்பான உள்ளடக்கங்களைப் பார்த்துள்ளனர். அமெரிக்காவில் உள்ள 40% க்கும் அதிகமான Gen Z இளைஞர்கள் தகவல்பெற இந்த உள்ளடக்கத்தைப் பார்த்துள்ளனர். ***
உலகம் முழுவதுமுள்ள மக்களைக் கோவிட்-19 தொடர்ந்து பாதித்து வரும் இவ்வேளையில் தங்கள் நண்பர்களுடன் நெருக்கமாக இருக்கும் Snapchat பயனர்கள் பாதுகாப்பாய் இருப்பது குறித்த துல்லியமான கதைகளைச் சரியான நேரத்தில் கண்டறிகின்றனர், தாக்கம் ஏற்படுத்தும் நிவாரண முயற்சிகளுக்கு நன்கொடையளித்து விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர்.
__
Snap Inc. உள்ளகத் தரவு பிப்ரவரி 22 - மார்ச் 6, 2020 vs. மார்ச் 16 - மார்ச் 29, 2020.
** Snap Inc. உள்ளகத் தரவு Q1 2020.
***Snap Inc. உள்ளகத் தரவு மார்ச்1 - 29, 2020. Gen Z என்பது 13-24 வயதுடைய Snapchat பயனர்களைக் கொண்டது. வயது, இருப்பிடத் தரவு வரம்பிற்கு உட்பட்டது. விவரங்களுக்கு https://businesshelp.snapchat.com/en-US/a/audience-size-tool ஐப் பார்க்கவும் .
செய்திகளுக்குத் திரும்புக