2014 AXS Partner Summit Keynote

The following keynote was delivered by Evan Spiegel, CEO of Snapchat, at the AXS Partner Summit on January 25, 2014.
நம் வரலாற்றில் இந்தக் காலக்கட்டம் "பிந்தைய தனிநபர் கணினி" சகாப்தம் என்று அழைக்கப்படுவது சற்று வித்தியாசமானது என்று நான் எப்போதுமே நினைத்திருக்கிறேன் – ஆனால் உண்மையிலேயே இது "அதிக தனிநபர் கணினி" சகாப்தம் என்று அழைக்கப்பட வேண்டும்.
மிஸ்டர் மெக்கின்டோஷ் என்பவரைப் பற்றி நேற்று ஒரு பெரிய கதையைப் படித்தேன். நேற்றிலிருந்து 30 ஆண்டுகளுக்கு முன்பு, இது தொடக்கத்தில் மெக்கின்டோஷ் கணினியில் இருக்குமாறு ஸ்டீவ் ஜாப்ஸ் வடிவமைத்த நபராவார். அவர் அவ்வப்போது தோன்றுவார், புல்-டவுன் மெனுவுக்கு பின்னால் மறைந்திருப்பார் அல்லது ஒரு ஐகானுக்கு பின்னாலிருந்து வெளிவருவார் – அவர் உண்மையல்ல என நீங்கள் நினைக்கும் வேளையில் விரைவாகவும், அரிதாகவும் தோன்றுவார்.
ஒரு மனிதனை கணினியுடன் இணைக்கும் ஸ்டீவின் யோசனை அவரது வாழ்வின் ஆரம்பக்கட்டத்திலேயே நிகழ்ந்தது என்பதை என்னால் நேற்று வரை உணர முடியவில்லை. ஆனால், அதே நேரத்தில், மெக்கின்டோஷ் மிஸ்டர் மெக்கின்டோஷ் இல்லாமல் ஷிப் செய்யவேண்டிய கட்டாயம் இருந்தது, ஏனெனில் பொறியாளர்கள் 128 கிலோபைட் என்ற குறுகிய நினைவக அளவுகளை மட்டுமே கொண்டிருந்தனர். ஸ்டீவின் தொழில் வாழ்க்கையின் பிற்பகுதியில் அவர் மனிதனை உண்மையிலேயே இயந்திரத்துடன் இணைத்தார் – ஜூன் 29, 2007 அன்று ஐபோனின் அறிமுகம்.
கடந்த காலங்களில், தொழில்நுட்ப வசதிகள் அதாவது கணினிகள் பெரும்பாலும் இயல்பான இடங்களில் மட்டுமே காணப்பட்டன: கார், வீடு, பள்ளி. ஐபோன் ஒரு கணினியை பிரத்தியேகமாக தொலைபேசி எண்ணுடன் இணைத்தது - உங்களுக்காக.
நீண்ட காலத்திற்கு முன்பு, தகவல்தொடர்பு இருப்பிடத்தை சார்ந்தே இருந்தது. நாம் ஒன்றாக ஒரே அறையில் இருந்தால், அந்த சமயத்தில் நேருக்கு நேர் பேசலாம் அல்லது நாம் உலகில் வெவ்வேறு இடங்களில் இருந்தால், அந்த சமயத்தில் நான் உங்கள் அலுவலகிதிற்கு அழைப்பை மேற்கொள்ளலாம் அல்லது உங்கள் இல்லத்திற்கு ஒரு கடிதத்தை அனுப்பலாம். கணிப்பு மற்றும் தகவல்தொடர்பு நோக்கத்திற்காக நாம் தொலைபேசி எண்களை தனிப்பட்ட அடையாளங்களுடன் இணைக்க தொடங்கியது சமீபத்தில் தான்.
ஸ்மார்ட்போன்கள் சாதாரணமாக மனிதனை இயந்திரத்துடன் அடையாளம் காண ஸ்டீவ் மேற்கொண்ட முயற்சிகளின் உச்சம் என்பதை உறுதிபடுத்தவே இதைச் சொல்கிறேன் – மேலும் இது அதிக-தனிநபர் கணினி காலத்திற்கு கொண்டு வருகிறது.
Snapchat இல் நம் வேலைக்கு மிகவும் பொருத்தமான அதிக-தனிநபர் கணினியின் மூன்று பண்புகள் உள்ளன:
1) எல்லா இடங்களிலும் இணைய வசதி
2) வேகமான + எளிதான மீடியா உருவாக்கம்
3) இடைநிலைத்தன்மை
நாங்கள் முதல் முதலில் 2011இல் Snapchat இல் வேலைசெய்யத் தொடங்கியபோது, அது ஒரு பொம்மையாக மட்டுமே இருந்தது. பல வழிகளில் அது இன்னும் அப்படியே உள்ளது – ஆனால் ஈம்ஸை மேற்கோள் கட்ட "பொம்மைகள் நாம் பார்க்கும் போது தோன்றுவதைப்போல் அப்பாவி தன்மை கொண்டவையல்ல. பொம்மைகளும் விளையாட்டுகளும் தீவிரமான யோசனைகளுக்கு முன்னோடிகளாக உள்ளன."
பொம்மைகளைப் பயன்படுத்துவதற்கான காரணத்தை விவரிக்கத் தேவையில்லை – அது வேடிக்கைக்காக. ஆனால் பொம்மையை பயன்படுத்துவது கற்றுக்கொள்வதற்கான ஒரு சிறந்த வாய்ப்பாகும்.
மற்றும் நண்பர்களே, நாம் கற்றுக்கொண்டிருகிறோம்.
எல்லா இடங்களிலும் இணைய வசதி என்பது ஆன்லைன் மற்றும் ஆப்லைன் இடங்கள் என உலகில் பிரிக்கப்பட்ட பழைய கருத்தாகும், அது இப்போது பொருந்தாது. நாம் ஆஃப்லைன் உலக அனுபவங்களில் வாழ்ந்து, அந்த அனுபவங்களைப் பதிவு செய்து, பிறகு அந்த அனுபவத்தை மறு உருவாக்கம் செய்து அதைக் குறித்துப் பேசுவதற்காக அவற்றை ஆன்லைனில் பதிவிடுவதே பாரம்பரிய சமூக ஊடகங்களின் தேவையாகும். உதாரணத்திற்கு, நான் விடுமுறையில் சென்று, நிறையப் புகைப்படங்கள் எடுத்து, வீடு திரும்பி, நல்ல புகைப்படங்களைத் தேர்ந்தெடுத்து, அவற்றை ஆன்லைனில் பதிவிட்டு, அவற்றைக் குறித்து எனது நண்பர்களிடம் பேசுகிறேன்.
இந்த பாரம்பரிய சமூக ஊடக அடையாளத்தின் பார்வை மிகவும் தீவிரமானது: நீங்கள் பதிவிட்ட அனுபவத்தின் சுருக்கம் நீங்களே. இல்லையெனில் இவ்வாறு அறியப்படுகிறது: படங்கள் அல்லது அவ்வாறு நடக்கவில்லை.
அல்லது இன்ஸ்டாகிராமை எடுத்துக்கொண்டால்: அழகான படங்கள் அல்லது அது நடக்கவில்லை மேலும் நீங்கள் சாதாரணமாக இல்லை.
சுயவிவரத்தின் இந்த எண்ணம் ஆன்லைன் மற்றும் ஆப்லைன் பைனரி அனுபவத்தில் நிறைய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இது ஆன்லைனில் நான் யார் என்பதைக் காட்ட மீண்டும் உருவாக்க வடிவமைக்கப்பட்டுள்ளது, மேலும் அந்த குறிப்பிட்ட தருணத்தில் நான் உள்நுழையாமல் இருந்தாலும் கூட சக நண்பர்கள் என்னைத் தொடர்புகொள்ள முடியும்.
முற்றிலும் மாறுபட்ட அனுபவத்தை வழங்க Snapchat எல்லா இடங்களிலும் இணைய வசதி என்பதை நம்பியுள்ளது. Snapchat நாங்கள் சொன்ன அல்லது செய்த அல்லது அனுபவித்த அல்லது வெளியிட்ட அனைத்தின் சுருக்கமல்ல என்று கூறுகிறார் – நாங்கள் அதன் முடிவாகவே இருக்கிறோம். நாங்கள் இன்று இருப்பதைப் போலவே, எப்போதும் இருப்போம்.
நாம் இனி "உண்மையான உலகை" படமெடுத்து ஆன்லைனில் அதை மீண்டும் உருவாக்கத் தேவையில்லை – ஒரே நேரத்தில் சாதாரணமாக நேரலையில் தொடர்புகொள்கிறோம்.
தகவல்தொடர்பு என்பது ஊடகத்தை உருவாக்குவதை நம்பியுள்ளது மேலும் அது ஊடகம் உருவாக்கப்பட்டு பகிரப்படும் வேகத்தைக் கொண்டு கட்டுப்படுத்தப்படுகிறது. உங்கள் உணர்சிகள், உணர்வுகள் மற்றும் எண்ணங்களை பேச்சு, எழுத்து அல்லது புகைப்பட உள்ளடக்கமாக மாற்றி ஊடகத்தில் தொகுக்க நேரமெடுக்கும்.
உண்மையிலேயே, மனிதர்கள் தாங்களாகவே புரிந்துகொள்வதற்கும் மற்றவர்களுடன் பகிர்வதற்கும் எப்போதும் ஊடகங்களையே பயன்படுத்துகின்றார்கள். ராபர்ட் பர்ன்ஸின் மொழிபெயர்ப்பான இந்த கேலிக்கை உங்களிடம் முன்வைக்கிறேன், "ஓ சக்தி நமக்கு கொடுக்கும் பரிசு, மற்றவர்கள் நம்மை பார்ப்பது போலவே நம்மைப் பார்க்க வேண்டும்."
நான் அந்த மேற்கோளை கேட்டவுடன், எனக்கு உதவவில்லை ஆனால் சுய உருவப்படத்தைப் பற்றி யோசித்தேன். அல்லது நம்மில் மில்லியன்களில்: செல்பி! சுய உருவப்படம் மற்றவர்கள் நம்மை பார்க்கும் விதத்தை புரிந்துகொள்ள உதவுகின்றன – அவை நாம் எப்படி உணர்கிறோம், எங்கு இருக்கிறோம் மற்றும் என்ன செய்கிறோம் என்பதை குறிக்கின்றன. அவை சுய வெளிப்பாட்டின் மிக பிரபலமான வடிவமாகும்
கடந்த காலங்களில், சுய உருவப்படங்களை முடிக்க வாரங்கள் மற்றும் மில்லியன் கணக்கான பிரஷ் ஸ்ட்ரோக்குகள் தேவைப்பட்டன. வேகமான + எளிதான மீடியா உருவாக்க உலகில், செல்பி உடனடியானது. இது நாம் யார் மற்றும் எப்படி உணர்கிறோம் என்பதைக் குறிக்கிறது – இப்போதே.
மேலும் இப்போது வரை, புகைப்பட செயல்முறையானது உரையாடலுக்கு மிகவும் மெதுவாகவே உள்ளது. ஆனால் வேகமான மற்றும் எளிதான மீடியா உருவாக்கம் மூலம் புகைப்படங்கள் கொண்டு நாம் உரையாட முடியும், சமூக ஊடகத்தில் அவர்களுடன் தொடர்புகொள்வதைப் போல அல்ல. மீடியா மூலம் தொடர்புகொள்ள ஆரம்பித்த பிறகு நாங்கள் வெளிச்சத்திற்கு வந்தோம். இது வேடிக்கையானது.
செல்பி Snapchat இல் தகவல்தொடர்புக்கான அடிப்படை அலகு என்று அறியப்பட்டது, ஏனெனில் இது டிஜிட்டல் மீடியா சுயவெளிப்பாடு மற்றும் டிஜிட்டல் மீடியா தகவல்தொடர்பு ஆகியவற்றிக்கும் இடையேயான மாற்றத்தைக் குறிக்கிறது.
இது உரையாடலின் மையத்தில் உள்ள இடைநிலைத் தன்மையின் முக்கியத்துவத்திற்கு கொண்டு செல்கிறது.
உள்ளடக்கம் உங்களுக்கு ஏற்படுத்தும் உணர்வில் கவனம் செலுத்துவதற்காக Snapchat உள்ளடக்கத்தை நிராகரிக்கிறது, ஆனால் உள்ளடக்கம் தோற்றமளிக்கும் விதத்தில் அல்ல. இது ஒரு பழைமையான யோசனை, உரையாடலுக்கான ஒருமைப்பாட்டையும் சூழலையும் மீட்டெடுக்கும் தீவிர வெளிப்படைத்தன்மைக்கான இயல்பான பதிலாகும்.
Snapchat உரையாடலைச் சுற்றியுள்ள எதிர்பார்ப்புகளை அமைக்கிறது, இது நாம் நேரில் பேசும்போது இருக்கும் எதிர்பார்புகளை ஒரு பிம்பமாக பிரதிபலிக்கறது.
Snapchat என்பது இதுதான். உள்ளடக்கத்தைக் குறித்து பேசுகிறோம், அதைச்சுற்றி அல்ல. நண்பர்களிடம் பேசுகிறோம், அந்நியர்களுடன் அல்ல. அடையாளம் இப்போது இணைக்கப்பட்டுள்ளது, இன்று. வளர்ச்சி, உணர்ச்சி ஆபத்து, வெளிப்பாடு மற்றும் தவறுகளுக்கான ரூம் , உங்களுக்கான ரூம்.
அதிக தனிநபர் கம்பியுட்டிங் சகாப்தம் அதிக தனிநபர் தகவல்தொடர்புக்கான தொழில்நுட்ப உள்கட்டமைப்பை வழங்கியுள்ளது. இந்த நம்ப முடியாத மாற்றத்தில் ஒரு அங்கமாக இருப்பதற்கு நாங்கள் மிகுந்த அதிர்ஷ்டசாலிகளாக உணருகிறோம்.
Snapchat என்பது இதயத்திலிருந்து கட்டமைக்கப்பட்ட ஒரு தயாரிப்பு – இதன் காரணமாகவே நாங்கள் லாஸ் ஏஞ்செல்ஸில் இருக்கிறோம். தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் உள்ளடக்கம் சார்ந்த நிறுவனங்களுக்கும் இடைய உள்ள முரண்களைப் பற்றி அடிக்கடி பலருடன் பேசுவேன் – திரைப்படங்கள், இசை மற்றும் தொலைக்காட்சியை பெரும்பாலும் தொழினுட்ப நிறுவனங்கள் தகவல்களாக பார்ப்பது மிகப்பெரிய சிக்கல்களில் ஒன்றாகும் என்பதை நான் கண்டறிந்தேன். இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், இசைக்கலைஞர்கள் மற்றும் நடிகர்கள் தங்களை உணர்சிகளின் வெளிப்பாடாகவே பார்க்கிறார்கள். தேடவோ, வரிசப்படுத்தவோ மற்றும் பார்க்கவோ கூடாது – ஆனால் அனுபவிக்க வேண்டும்.
Snapchat உரையாடல் அனுபவத்தில் கவனம் செலுத்துகிறது – தகவல் பரிமாற்றத்தில் அல்ல. இந்த சமூகத்தின் ஒரு பகுதியாக இருப்பதற்கு நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.
இன்று என்னை அழைத்ததற்கும் மற்றும் எங்கள் பயணத்தின் ஒரு பகுதியாக இருப்பதற்கும் நன்றி. உங்கள் அனைவரையும் பற்றி அறிந்துகொள்ள எங்கள் குழு எதிர்நோக்கி இருக்கிறது.
Back To News