Introducing our First CitizenSnap Report

Today we are releasing our first-ever CitizenSnap report, which explains the way we operate our business and support our team, our community, and our partners – as well as, more broadly, our society and environment.
தொகுப்பாசிரியரின் குறிப்பு: Snap -இன் தலைமைச் செயல் அதிகாரியான Evan Spiegel அனைத்து Snap குழு உறுப்பினர்களுக்கும் ஜூலை 29 அன்று பின்வரும் குறிப்பாணையை அனுப்பினார்.
குழு,
இன்று நாங்கள் எங்கள் முதல் CitizenSnap அறிக்கையை வெளியிடுகிறோம், இது நாங்கள் எங்கள் வணிகத்தை இயக்கும் விதம் மற்றும் எங்கள் குழு, எங்கள் சமூகம் மற்றும் எங்கள் கூட்டாளர்களையும் அத்துடன், இன்னும் பரந்த அளவில் எங்கள் சமுதாயம் மற்றும் சுற்றுச்சூழலையும் ஆதரிக்கும் விதம் ஆகியவற்றை விளக்குகிறது. எங்கள் பன்முகத்தன்மை, ஒப்புரவுப் பண்பு, சேர்க்கும் முயற்சிகள் மற்றும் தொடர்புடைய தரவுகள் ஆகியவற்றையும் விவரிக்கும் இந்த அறிக்கை, ஆரோக்கியமான ஒரு சமூகத்தையும், சுத்தமாகவும் பாதுகாப்பாகவும் இருக்கும் ஒரு சூழலையும் உருவாக்குவதில் நாங்கள் பங்களிப்பது Snap -இன் நலனுக்காக என்ற எங்கள் நம்பிக்கையைப் பிரதிபலிக்கிறது, இதனால் எங்கள் வணிகம் அதன் முழுத் திறனை அடைய முடியும். எங்கள் குழு, சமூகம் மற்றும் கூட்டாளர்களின் வெற்றியின் துணை விளைபொருளாக நாங்கள் லாபம் பெற விரும்புகிறோமே தவிர - அவர்களின் இழப்பில் அல்ல.
எங்கள் உறவுகள் மற்றும் எங்கள் குழு, எங்கள் சமூகம் மற்றும் எங்கள் கூட்டாளர்களை நாங்கள் நடத்தும் முறையில் தான் எங்கள் வெற்றியை நாங்கள் வரையறுக்கிறோம் என்பது இதன் பொருள் ஆகும். பகிர்வு வெற்றியின் மூலம் அனைத்துத் தரப்பினரும் பயனடையக்கூடிய, அனைவரும் வெற்றி பெறும் கூட்டாண்மைகளை உருவாக்க நாங்கள் முயற்சி செய்கிறோம். பெருநிறுவனக் குடியுரிமை என்பது எங்கள் வணிகத்திற்கான துணைக்கூறு அல்ல, இது நாங்கள் வணிகம் செய்யும் முறையைப் பிரதிபலிக்கிறது.
நாங்கள் அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டுள்ளோம், இது பெருநிறுவன ஆளுமையின் தனித்துவமான வரலாற்றைக் கொண்ட நாடு ஆகும், இதன் அரசியலமைப்பின் 14 வது திருத்தச் சட்டத்தால் (உள்நாட்டு போரைத் தொடர்ந்து புனரமைப்பின் போது அங்கீகரிக்கப்பட்டது) உத்தரவாதம் அளிக்கப்பட்ட சமப் பாதுகாப்பைக் கொண்ட நாடு ஆகும். வணிகங்கள் சமூகத்தில் வெறுமனே லாபத்தை அதிகரிக்கும் இயந்திரங்களாக இல்லாமல், மாறாகச் சக குடிமக்களாக - உரிமைகள் மற்றும் பொறுப்புகளுடன் பங்கேற்கின்றன என்பதை அமெரிக்க அரசாங்கமும் நீதிமன்றங்களும் தெளிவுபடுத்தியுள்ளன. எங்கள் பொறுப்புகள், நாங்கள் செயல்படும் நாடுகளின் சட்டங்களுடன் அடிப்படையில் இணங்கிச் செல்வதற்கு அப்பாற்பட்டு, ஒரு நேர்மறையான மாற்றத்தை உருவாக்குவதற்கான உறுதிப்பாட்டை உள்ளடக்கியதாக உள்ளது.
அமெரிக்காவில், நம்முடைய கடந்த காலத்தை ஏற்றுக் கொள்ளாமலும், மற்றவர்களின் இழப்பில் தான் நாம் இன்று இங்கே இருக்கிறோம் என்பதை அங்கீகரிக்காமலும் முன்னேற முடியாது என்பதை நாங்கள் அறிந்திருக்கிறோம். நமது நாட்டின் செல்வம் திருடப்பட்ட நிலத்திலும், திருடப்பட்ட உழைப்பிலும் கட்டப்பட்டது: அடிமைப்படுத்தப்பட்ட மக்கள் நமது நாட்டின் செழிப்புக்கான பொருளாதார அடித்தளத்தை அமைத்தனர், அதேபோல் பழங்குடி மக்களிடமிருந்து விரிவான நிலங்கள் வலுக்கட்டாயமாக எடுக்கப்பட்டது. லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள எங்கள் தலைமையகம் முதலில் சுமாஷ் மற்றும் டோங்வாவுக்கு சொந்தமாக இருந்த நிலத்தில் அமைந்துள்ளது.
ஆப்பிரிக்க அமெரிக்கக் குடும்பங்கள் வெள்ளையின அமெரிக்கக் குடும்பங்களின் செல்வத்தில் சராசரியாகப் பத்தில் ஒரு பங்கைக் கொண்டுள்ளன என்பதைப் புரிந்துகொள்வது, நமது நடத்தையின் மீதுள்ள ஒரு குற்றச்சாட்டாகும். 2018 -ஆம் ஆண்டில் பூர்வீக அமெரிக்கர்களின் வறுமை விகிதம் என்பது வெள்ளையின அமெரிக்கர்களை விட இரண்டரை மடங்கு அதிகமாக இருந்தது. இந்த உண்மைகள் நாம் உணர முற்படும் மதிப்புகளைப் பிரதிபலிக்காது.
ஒன்றைத் தேர்வு செய்வதற்கான வாய்ப்பு எங்களுக்கு உள்ளது என்பது தெளிவாகிறது: இந்த ஏற்றத்தாழ்வுகளை அமெரிக்காவில் நிலைத்திருக்க அனுமதிப்பது - அல்லது ஒரே சமூகமாக நாம் நிலைநிறுத்த முற்படும் பகிரப்பட்ட மதிப்புகளைச் சிறப்பாக நிறைவேற்ற எங்கள் பங்கை ஆற்றுவது. அமெரிக்காவில் நமது குடிமக்களிடம் சீரற்ற முறையில் முதலீடு செய்யும் பெரிய மற்றும் தொடர்ச்சியான கட்டமைப்பு ஏற்றத்தாழ்வுகள் மற்றும் கொள்கைகளைக் கருத்தில் கொண்டு, ஒரு வணிகமாக எங்களது மிகக் கடுமையான முயற்சிகள் கூடப் பரந்த சமூக மாற்றத்தை உருவாக்க வல்லவை என்று கூறுவது தவறானதாக இருக்கும், ஆனால் நாங்கள் எதுவும் செய்யாமல் சும்மா நிற்க மாட்டோம். எங்களால் அதை தனியாக செய்ய முடியாது, ஆனால் நாங்கள் எங்கள் பங்கை ஆற்றுவோம்.
வறுமையைப் போக்க, கல்வி வாய்ப்பை வழங்க, தேவையான டிஜிட்டல் உள்கட்டமைப்பை உருவாக்குவதற்காக, நாம் இழைத்த அநீதியின் வரலாற்றை எதிர்கொள்வதற்காக நமது நாட்டின் எதிர்காலத்தில் நாம் செய்ய வேண்டிய முதலீடுகள் குறித்து வாதாட நாங்கள் எங்கள் குரலை, எங்கள் பெருநிறுவன ஆளுமையைப் பயன்படுத்துவோம். இந்த முயற்சிகள் எங்கள் வணிகத்திற்குள் தொடங்குகின்றன, அதாவது எங்கள் ஊதிய நடைமுறைகள், பணியமர்த்தல் மற்றும் ஆள் சேர்ப்பு திட்டங்கள், வரி யுக்திகள், விநியோகச் சங்கிலி மற்றும் ஆற்றல் நுகர்வு போன்ற, எங்களால் நேரடியாகத் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய விஷயங்களிலிருந்து தொடங்குகின்றன. எங்கள் குழு, எங்கள் சமூகம் மற்றும் எங்கள் கூட்டாளர்களில் உள்ள அனைத்து உறுப்பினர்களும், அவர்கள் யார் என்பதற்காகப் புரிந்துகொள்ளப்பட்டதாகவும், பாராட்டப்பட்டதாகவும் - கொண்டாடப்பட்டதாகவும் - உணர்வதை உறுதிப்படுத்த நாங்கள் விரும்புகிறோம்: ஒவ்வொரு நபருக்கிடையே வேறுபாடுகள் இருந்தாலும் அவர்கள் சமமானவர்கள்.
எங்கள் முதல் CitizenSnap அறிக்கையை ஒரு “செப்பமில்லா வரைவு” என்று கருதுங்கள், இது இந்த முயற்சிகளைப் பற்றி நாங்கள் எவ்வாறு செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம் என்பதற்கான விளக்கம் ஆகும், மற்றும் கற்றுக்கொள்ள, வளர, மற்றும் மீண்டும் செயல்படுவதற்கான எங்கள் விருப்பத்தின் பிரதிபலிப்பாகும். இன்று நாங்கள் எங்கள் உயர்ந்த லட்சியத்தை அடைவதில் பின்தங்கி இருக்கிறோம் என்பதில் சந்தேகமில்லை. நாங்கள் செய்ய வேண்டிய வேலைகள் அதிக அளவில் உள்ளன, மேலும் வெளிப்படையாக நாங்கள் பொறுப்பேற்றுக்கொள்வது முக்கியம் என்று எங்கள் குழு வலுவாக உணர்கிறது. Snap -இன் வளர்ச்சியின் மிகப் பெரிய நீண்டகால வரையறை எங்கள் பரந்த சமூகத்தின் வெற்றியாகும் என்று நாங்கள் நம்புகிறோம், மேலும் நாங்கள் அதன்படி முதலீடு செய்வோம்.
Evan
Back To News