Our 2020 Friendship Report

Today, we released our second global Friendship study, interviewing 30,000 people across sixteen countries, to explore how the COVID-19 pandemic and global issues have impacted friendship. Seventeen experts on friendship from around the world contributed to the report.
இன்று, எங்கள் இரண்டாவது உலகளாவிய நட்பு ஆய்வை வெளியிட்டுள்ளோம், கோவிட்-19 தொற்றுநோயும் உலகளாவிய பிரச்சினைகளும் நட்பை எவ்வாறு பாதித்துள்ளன என்பதை ஆராய பதினாறு நாடுகளில் 30,000 பேரை நேர்காணல் செய்தோம். இந்த அறிக்கைக்கு உலகெங்கிலும் உள்ள நட்பு குறித்த பதினேழு வல்லுநர்கள் பங்களித்தனர்.
எங்கள் மிகைப்படுத்தப்பட்ட மெய்ம்மை லென்ஸஸ், வடிப்பான்கள் மற்றும் தனிப்பட்ட அவதார் Bitmoji போன்ற ஆக்கப்பூர்வக் கருவிகள் பொருத்தப்பட்ட படங்களிலும் வீடியோக்களிலும் பேசுவது, தங்களை வெளிப்படுத்தவும் கட்புலனாகத் தொடர்பு கொள்ளவும் Snap பயனர்களுக்கு உதவுகிறது. நேருக்கு நேர் சந்திக்கும் வாய்ப்பில்லாத போது அத்தியாவசிய இணைப்பாக அவை செயல்படுகின்றன, மேலும் இந்தக் இந்த கடினமான நேரத்தில் Snap பயனர்கள் அல்லாதோர் தூரத்தை அதிகம் உணரும்போது Snap பயனர்கள் தங்கள் சிறந்த நண்பர்களுடன் நெருக்கமாக உணர உதவின.
கோவிட் நட்பை எவ்வாறு பாதிக்கிறது, மேலும் தாக்கமேற்படுத்தும் வாழ்க்கையின் பிற முக்கிய நிகழ்வுகள் என்னென்ன என்பதை நட்பு அறிக்கை விளக்குகிறது, அவற்றில் இவையும் அடங்கும்:
  • கோவிட் சில நண்பர்களை நெருக்கமாகக் கொண்டுவந்துள்ளது, ஆனால் நம்மில் சிலரைத் தனிமையை உணரச் செய்துள்ளது.
  • தனிமைக்கு எதிரான தற்காப்பின் முன்வரிசையாக நண்பர்கள் உள்ளனர், பொதுவாக சிறுவயதிலேயே உற்ற நண்பர்கள் உருவாகி விடுகின்றனர்; நம் நெருங்கிய நண்பர்களை குறைந்தபட்சம் நம் வாழ்வில் பாதிக்காலம் அறிந்திருக்கிறோம்.
  • நம்மில் பலர் சிறு வயது நெருங்கிய நண்பரின் தொடர்பை இழந்திருப்போம், அவர்களில் பெரும்பாலானோர் அந்த நெருக்கத்தை மீண்டும் கண்டறிய விரும்புகிறார்கள்.
  • நம்மில் பலர் டிஜிட்டல் தகவல்தொடர்பு சேனல்கள் மூலம் நன்கு இணைப்பிருந்தாலும், தூரத்தைக் கடந்தும் நட்பை எவ்வாறு பராமரிப்பது மேலும் இழந்த தொடர்பை எவ்வாறு புதுப்பிப்பது என்பவற்றை அறிய நம் நட்பு திறன்களை இன்னும் வளர்த்துக் கொள்ள வேண்டியுள்ளது.
  • இதை செய்வது எப்படி என்பது குறித்த ஆலோசனையையும் உதவிக்குறிப்புகளையும் உலகெங்கிலும் உள்ள வல்லுநர்கள் வழங்கியுள்ளனர், Snap பயனர்கள் தங்கள் நட்புகளைக் கொண்டாட உதவும் வகையில் Snap ஒரு புதிய நட்பு நேர காப்ஸ்யூலையும் உருவாக்கியுள்ளது.
கோவிட்-19 இன் தாக்கம்
உலகின் பெரும்பகுதியில் சமூக விலகல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு ஆறு மாதங்கள் கடந்த பின்னர், தொடர்ந்து இணைப்பிலிருக்க நண்பர்கள் புதிய வழிகளைக் கண்டுபிடிக்க வேண்டியிருக்கிறது, இதன் நீண்ட கால விளைவுகள் இப்போதுதான் தெளிவாக வெளிப்படத் தொடங்கியிருக்கின்றன. "இதுவரை நடத்தப்பட்ட மிகப்பெரிய உளவியல் சோதனை இதுவே, மேலும் இது எவ்வாறு முடிவடையப் போகிறது என்று இன்னமும் தெரியவில்லை." லிடியா டென்வொர்த், பத்திரிகையாளர் எழுத்தாளர்.
மூன்றில் இரண்டு பங்கு நண்பர்கள் கோவிட்-19க்கு முன்பு இருந்ததைக் காட்டிலும் அதிகம் தொடர்புகொள்ள இணையச் சேனல்களைப் பயன்படுத்துவதாக (66%) கூறுகிறார்கள், அந்த உரையாடல்களில் பல மேலோட்டமான தலைப்புகளில் கவனம் செலுத்துவதை விட ஆழமானவையாக (49%) உள்ளன. தொலைவில் இருந்தாலும் தொடர்பில் இருப்பதற்கு டிஜிட்டல் தகவல்தொடர்புகள் முக்கியமானவை என்று தெரிகிறது, நண்பர்கள் தங்கள் உறவைத் தக்கவைத்துக் கொள்ள அவை உதவியுள்ளதாக வயது வித்தியாசமின்றி பெரும்பான்மையானவர்கள் (79%) கூறினர்.
நண்பர்களைத் தொடர்புகொள்வது அதிகரித்தாலும், கோவிட்-19 சிலரைத் தனிமைக்கும் இட்டுச் சென்றுள்ளது. நாங்கள் ஆய்வு செய்தவர்களில் மூன்றில் இரண்டு பங்கு பேர் பெருந்தொற்று தொடங்கியதிலிருந்து தனிமையை உணர்ந்ததாகக் கூறினர் (66%) - இது கோவிட்-19க்கு முன்பிருந்ததை விட 8% அதிகமாகும்.
தங்கள் நண்பர்களைப் பார்க்க முடியாமல் போனதால் தனிமையை உணர்ந்ததாக கிட்டத்தட்ட பாதிப் பேர் (49%) கூறுகிறார்கள், அவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் மட்டுமே விரும்பும் அளவுக்கு நண்பர்களைத் தொடர்பு கொள்கிறார்கள் (30%). உண்மையில், மூன்றில் ஒரு பகுதியினர் (31%) நண்பர்களுடனான உறவை சமூக விலகல் பலவீனப்படுத்தியதாக உணர்கின்றனர்.
மொத்தத்தில் கோவிட்-19 அவர்களின் நட்பைப் பாதித்துள்ளதாக நாங்கள் ஆய்வு செய்தவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் கூறினர். அதில் கோவிட்-19 தங்கள் நண்பர்களுடனான நெருக்கத்தைக் குறைத்துவிட்டதாக பாதிக்கும் மேற்பட்டோர் கூறுகின்றனர் (53%). “நண்பர்களுடன் நேரம் செலவிட முடியாததால் நண்பர்களிடமிருந்து அதிக தூரத்தை உணர்ந்தேன்” என்ற கூற்றுடன் ஆய்வு செய்தவர்களில் கிட்டத்தட்ட பாதி பேர் (45%) உடன்பட்டனர்.
நட்பு மற்றும் இடப்பெயர்வு ஆய்வாளர் இலாவண்யா கதிர்வேலு, “செயலிகள், தொலைபேசி அழைப்புகள் மற்றும் பிற ஊடக வழித் தகவல்தொடர்புகள் மூலம் நட்பைத் தொடர முடிந்தாலும், பிரிந்திருக்கும் கூறானது நட்பின் முழு அனுபவத்தைப் பலரிடமிருந்து பறிக்கிறது" என்று கூறுகிறார்.
கட்புலனாக அடிக்கடி தொடர்பு கொள்ளும் Snap பயனர்களுக்கும் - Snap பயனர் அல்லாதவர்களுக்கும் இடையே ஏன் குறிப்பிடத்தக்க வேறுபாடு இருந்தது என்பதை இது விளக்கக்கூடும் - பெருந்தொற்றுக் காலத்தில் Snap பயனர்கள் நண்பர்களுடன் நெருக்கமாகின்றனர்.
காட்சி தகவல்தொடர்புகள் "இணை இருப்பை" உருவாக்குவதாகவும், இதன் விளைவாக "நீங்கள் உண்மையில் உடல் ரீதியாக தொலைவில் இருக்கும்போதும் ஒன்றாக இருக்கும் உணர்வு" ஏற்படுகிறது என காட்சி தகவல்தொடர்புகளின் முக்கியத்தை நட்பு ஆராய்ச்சியார் டோனியா அலினெஜாத் விவரிக்கிறார். குறிப்பாக “ஓர் வகையான உணர்வுப்பூர்வ ஆதரவைத் தேடுவோருக்கு அல்லது தேவைப்படுபவர்களுக்கு, உண்மையில் ஒன்றாக இருப்பதைப் போல உணருவது 'பல்வேறு காரணங்களால்' முக்கியமானதாக உள்ளது” என்று அலினெஜாத் கூறுகிறார்.
இதில் நல்லது என்னவென்றால், பெருந்தொற்றினால் ஏற்படும் தனிமை காரணமாக, மக்கள் அக்கறை கொண்டிருக்கும் நபர்களை உண்மையிலேயே தொடர்பு கொண்டு பார்க்க விரும்புகின்றனர்.
மக்களில் மூன்றில் ஒரு பகுதியினர் (39%) அவர்களின் நட்பு இப்போது மிகவும் முக்கியமானதாக உள்ளதாகக் கூறுகிறார்கள், சில காலம் பேசியிராத நண்பர்களைத் தொடர்பு கொள்ள தெரிந்தே தேர்ந்தெடுப்பதாக நம்மில் கிட்டத்தட்ட பாதிப்பேர் கூறுகின்றனர்(48%).
ஊரடங்கு ஒரு வகையான புனல் விளைவைக் கொண்டுள்ளது. நீங்கள் குறிப்பிட்ட உறவுகளை வலுப்படுத்துகிறீர்கள், மற்றவர்களைத் தொலைவில் வைக்கிறீர்கள். எனவே, இந்த காலகட்டம் உண்மையில் சில உறவுகளைப் பலப்படுத்தியுள்ளது” என்று சமூகவியலாளர் குய்லூம் பாவ்ரே குறிப்பிட்டார்.
பிரிவிற்குப் பின் மீண்டும் இணைப்பு
நட்பு, குறிப்பாக சிறு வயதிலிருந்திருக்கும் நட்பு, மகிழ்ச்சி மற்றும் நல்வாழ்வில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவதாக கடந்த ஆண்டு Snap இன் நட்பு அறிக்கை கண்டறிந்தது. எனவே, இந்த ஆண்டு உலகளவில் நம்மில் 79% பேர் நெருங்கிய நண்பரின் தொடர்பை இழந்துவிட்டோம் என்பது ஆச்சரியமாக இருந்தது, ஆனால் 66% பேர் தங்கள் உறவை மீண்டும் புதுப்பிக்க விரும்புவதாக கூறியிருப்பது நம்பிக்கையளிப்பதாக உள்ளது. அமெரிக்காவில், அந்த எண்ணிக்கை முறையே 88% மற்றும் 71% என அதிகமாக உள்ளது.
சிறந்த நண்பர்கள் மீண்டும் தொடர்பை ஏற்படுத்த முயற்சிக்கும்போது பொதுவாக நாம் நேர்மறையாகவே பதிலளிப்போம், மகிழ்ச்சியடைவேன் (36%), அல்லது உற்சாகமடைவேன் (29%) என்பது பெரும்பாலானோரின் பதிலாகவும், அதே நேரத்தில் மோசமாக உணர்வேன் (14%) அல்லது சந்தேகமாக உணர்வேன் (6%) என்பது குறைவானோரின் பதிலாகவும் உள்ளது.
நம் நெருங்கிய நண்பர்களிடம் திரும்பிச் செல்வது எப்படி? டிஜிட்டல் முறையில் மீண்டும் இணைவதை மூன்றில் இரண்டு பங்கு மக்கள் (67%) விரும்புகிறார்கள், ஆனால் அதில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் மட்டுமே (54%) அதனை எவ்வாறு செய்வது என்பதை அறிந்திருக்கிறார்கள். மக்கள் தங்கள் நண்பர்களுக்கு அனுப்ப விரும்பும் முதல் விடயம், அவர்கள் ஒன்றாக இருக்கும் புகைப்படம் (42%), இரண்டாவது விடயம் பகிரப்பட்ட நினைவினை நினைவூட்டுகின்ற புகைப்படமாகும் (40%). நகைச்சுவையும் உயர்ந்த இடத்தைப் பெறுகிறது, மூன்றில் ஒரு பகுதியினர் ஒரு வேடிக்கையான மீம் அல்லது GIF ஐ அனுப்புவது உரையாடலைத் தொடங்க சிறந்த வழியாகும் என எண்ணுகின்றனர் (31%).
தொடர்பு கொள்ள உதவும் கருவிகளைப் பயன்படுத்த மூன்றில் ஒரு பகுதியினர் (35%) விரும்புகிறார்கள், குறிப்பாக மீண்டும் தொடர்புகொள்வவது போன்ற கடினமான சூழ்நிலைகளில்.
சிறந்த நண்பராக இருப்பது எப்படி
குடும்பம் அல்லது திருமணம் போன்ற உறவுகளுடன் திண்டாடுபவர்களுக்கு ஏராளமான வளங்கள் உள்ளன, ஆனால் நட்பு அதே முக்கியத்துவத்தைப் பெறவில்லை. இது நட்பின் ஏற்ற இறக்கங்களைக் கடந்து வரவும் மேம்படுத்தவும் தேவையான கருவிகளோ நம்பிக்கையோ இல்லாதவர்களாய் பலரை விட்டுச் சென்றுள்ளது.
சமூக உளவியலை ஆராயும் பிரித்தானிய விரிவுரையாளர் கில்லியன் சாண்ட்ஸ்ட்ரோம், "விருப்ப இடைவெளியைப்" பற்றி பேசுகிறார், அதாவது மக்கள் நம்மை விரும்புவதை விட அவர்கள் நம்மைக் குறைவாகவே விரும்புகின்றனர் என்று நாம் நினைக்க அதிக வாய்ப்புள்ளது. இந்தச் சார்புநிலை உரையாடல்களில் ஈடுபடுவதைப் பற்றிய பாதுகாப்பின்மையை வளர்க்கிறது. தடுமாற்றமான இடைநிறுத்தங்களையும் தோல்வியுற்ற தொடர்புகளையும் நாம் அஞ்சுகிறோம், எந்த அளவிற்கெனில் நட்பைத் தொடங்க அல்லது உறவை ஆழமாக்குவதற்கான வாய்ப்பை கைவிடுவதை பாதுகாப்பான தேர்வாக எண்ணுகிறோம். நீங்கள் நினைப்பதை விட மக்கள் உங்களை விரும்புவதற்கான வாய்ப்புகள் அதிகம், எனவே துணிச்சலுடன் தொடருங்கள்.
கேட்டல், நிகழ்வில் இருத்தல் மற்றும் பொறுப்பை ஏற்றுக்கொள்ளுதல் ஆகியன முக்கிய நட்புத் திறன்களாகும்.. இந்தத் திறன்களை மெருகேற்றுவது சற்று கடினமாக இருக்கலாம், ஆனால் சில படிப்பினைகள் பயிற்சிகள் மூலம், நம் நட்பை மேம்படுத்த முடியும் என்று எங்கள் வல்லுநர்கள் ஒப்புக்கொள்கிறார்கள்.
Back To News