Snap Partner Summit | The Future of Lenses

Today, we’re making it easier to find the right Lenses at the right time. Just press and hold on your camera screen to Scan the world around you.
கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, நாங்கள் லென்ஸை அறிமுகப்படுத்தினோம்: உங்கள் செல்ஃபியைப் பார்க்க ஒரு புதிய வழி!
நாங்கள் உருவாக்கிய முதல் லென்ஸஸ் சுய வெளிப்பாட்டிற்கானவை. அடுத்து உலக லென்ஸஸ் வந்தன: உங்களை சுற்றி உள்ள உலகின் மேல் விரிக்கப்பட்ட 3 D ஸ்டிக்கர்கள், Bitmoji மற்றும் நடனமாடும் ஹாட் டாக்ஸ். மிக சமீபத்தில், நாங்கள் Snappables -ஐ அறிமுகம் செய்தோம் - உங்கள் முகத்துடன் நீங்கள் விளையாடக்கூடிய விளையாட்டுகள்!
ஒரு வருடத்தில், எங்கள் சமூகத்தால் 400,000 -க்கும் மேற்பட்ட லென்ஸஸ் உருவாக்கப்பட்டுள்ளன, மேலும் மக்கள் அந்த லென்ஸ்களை 15 பில்லியன் முறைகளுக்கு மேல் பயன்படுத்தியுள்ளனர்! * லென்ஸ் உருவாக்கிகள் அவர்களது படைப்புகளைக் காட்சிப்படுத்தி, அவர்களது பார்வையாளர்களைப் பற்றி மேலும் அறிந்துகொள்ள உதவுவதற்காக, உருவாக்கியவரின் தகவல்களை நாங்கள் அறிமுகம் செய்கிறோம்.
உங்கள் உலகத்தை வடிகட்டாததால் நாங்கள் அவற்றை லென்ஸஸ் என்று அழைக்கிறோம். அவை உங்களை புதிய விஷயத்தில் மூழ்க அனுமதிக்கின்றன. எதிர்காலத்தில் ஒரு நாள், இந்த வகையான அனுபவங்கள் உங்களைச் சுற்றியுள்ள உலகில் பேசுவதற்கும், உருவாக்குவதற்கும், கற்றுக்கொள்வதற்கும், விளையாடுவதற்கும் புதிய வழிகளைக் கொண்டு வரும் என்று நாங்கள் நம்புகிறோம்.
இன்று, சரியான நேரத்தில் சரியான லென்ஸஸ் கண்டுபிடிப்பதை எளிதாக்குகிறோம்.
AR Bar மற்றும் ஸ்கேன்
தளத்தில் புதிய, ஒருங்கிணைந்த லென்ஸ் அனுபவத்தையும் கூடுதலாக, வலுவான கேமரா தேடல் திறன்களையும் Snap அறிமுகப்படுத்துகிறது. “AR Bar” மற்றும் “ஸ்கேன்” ஆகியவை விரைவில் Snapchat பயனர்களுக்கு வெளிவரத் தொடங்கும்.
Snapchat -இல் லென்ஸ்கள் மற்றும் கேமரா தேடல் அனுபவங்களைக் கண்டுபிடித்துச் செல்வதை Snapchat பயனர்களுக்கு முன்பை விட எளிதாக்குவதற்காக AR Bar வடிவமைக்கப்பட்டுள்ளது. AR Bar உடன், முதன்முறையாக, Snapchat பயனர்களால் அனைத்தையும் ஒரே இடத்தில் உருவாக்க, ஸ்கேன் செய்ய, உலாவித் தேட மற்றும் ஆராய முடியும்.
AR Bar -இல் ஒரு புதிய ஸ்கேன் பொத்தானும் இடம்பெறும், இது சூழல் சம்பந்தப்பட்ட லென்ஸ்கள் மற்றும் கேமரா அடிப்படையிலான அனுபவங்களை ஒரு தட்டிலேயே கொண்டுவர வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஸ்கேனுடன், தொடர்புடைய லென்ஸஸ், Lens Studio மூலம் Snap -இன் பொதுச் சமூகத்தால் உருவாக்கப்பட்டவை உட்பட, கேமரா பார்வையில் உள்ளவற்றின் அடிப்படையில் Snapchat பயனர்களுக்கு மாறும்.
புதிய ஸ்கேன் கூட்டாளர்களையும் Snap அறிமுகப்படுத்துகிறது.
Photomath உடன் இணைந்து, Snapchat பயனர்களால் ஒரு கணிதச் சமன்பாட்டில் Snapchat கேமராவைச் சுட்டிக்காட்டி அதற்கான தீர்வு கேமராவிலேயே தோன்றுவதைக் காண முடியும். கூடுதலாக, கூட்டாளர் GIPHY உடனான ஒரு புதிய ஒருங்கிணைப்பானது Snapchat கேமரா பார்வையில் உள்ளவற்றின் அடிப்படையில் சூழ்நிலைக்குப் பொருத்தமான, மாறும் வகையில் உருவாக்கப்பட்ட GIF லென்ஸஸ் மூலம் தங்கள் Snap -களை அலங்கரிக்க எந்தவொரு Snapchat பயனரையும் அழைக்கும்.
Lens Studio மற்றும் “Landmarkers”
Snap -இன் Lens Studio என்பது, Snapchat -இல் லென்ஸஸைக் கட்டமைத்துப் பகிர்வதற்காக எவருக்கும் இலவசமாகவும், வெளிப்படையாகவும் கிடைக்கும் ஒரு டெஸ்க்டாப் செயலி ஆகும். Snap -இன் அதிநவீனக் கணினி சார்ந்த பார்வை மற்றும் கிராபிக்ஸ் தொழில்நுட்பத்தைப் படைப்பாளர்களுக்கான எளிய வார்ப்புருக்களாக Lens Studio தொகுக்கிறது. Lens Studio மூலம் எங்கள் சமூகத்தால் 400,000 -க்கும் மேற்பட்ட லென்ஸஸ் உருவாக்கப்பட்டுள்ளன, மேலும் மக்கள் அந்த லென்ஸஸை 15 பில்லியன் முறைகளுக்கு மேல் பயன்படுத்தியுள்ளனர்.
இன்று, லென்ஸ் உருவாக்கத்திற்கான கூடுதல் திறன்களைச் சேர்ப்பதற்காக Lens Studio -வை Snap மேம்படுத்துகிறது, இதில் கை கண்காணிப்பு, உடல் கண்காணிப்பு மற்றும் செல்லப்பிராணி கண்காணிப்புக்கான வார்ப்புருக்கள் அடங்கும்.
முதல் முறையாக, Snap -இன் முற்றிலும் புதிய Landmarker லென்ஸ் அனுபவங்களுக்கான வார்ப்புருக்களையும் Lens Studio உள்ளடக்கும். இந்த லென்ஸஸ் உலகின் மிகச் சிறந்த அடையாளங்களை நிகழ்நேரத்திற்கு மாற்றக்கூடிய மிகைப்படுத்தப்பட்ட மெய்மை அனுபவங்களைச் செயல்படுத்துகின்றன.
பக்கிங்ஹாம் அரண்மனை (லண்டன்), யுனைடெட் ஸ்டேட்ஸ் கேபிடல் பில்டிங் (வாஷிங்டன், D.C.), ஈஃபிள் டவர் (பாரிஸ்), ஃப்ளாடிரான் பில்டிங் (நியூயார்க் நகரம்) மற்றும் TCL சைனீஸ் தியேட்டர் (லாஸ் ஏஞ்சல்ஸ்) உள்ளிட்ட ஐந்து இடங்களுக்கான வார்ப்புருக்கள் இன்று படைப்பாளர்களுக்குக் கிடைக்கின்றன, அதைத் தொடர்ந்து இன்னும் பல கிடைக்கவிருக்கின்றன.
இந்த இடங்களை நேரடியாகப் பார்வையிடும் Snapchat பயனர்களால் இன்று முதல் இந்த Landmarker-செயல்படுத்தப்பட்ட லென்ஸஸை அனுபவிக்க முடியும்.
Back To News