Happy Holidays

The holidays are a great time to hang out with friends and spend time with family – it’s always better together! We couldn’t think of a better time to announce Groups, a new way to communicate with up to 16 friends on Snapchat.
நண்பர்களுடன் உலாத்துவதற்கும் குடும்பத்துடன் நேரம் செலவிடுவதற்கும் விடுமுறைகள் சிறந்த நேரமாகும் – ஒன்றிணைந்திருப்பது எப்போதும் சிறந்தது! Snapchat இல் 16 நண்பர்கள் வரையில் தொடர்பு கொள்வதற்கான புதிய வழியான குழுக்களை அறிவிப்பதற்கு இதைவிடச் சிறந்த நேரத்தை எங்களால் சிந்திக்க முடியவில்லை.
Snap அனுப்பும் போதோ, புதிய அரட்டை செய்யும் போதோ குழுக்களை உருவாக்கலாம். குழு உரையாடலில் உங்கள் நண்பர்கள் இருக்கும்போது அரட்டையின் கீழ்பகுதியில் அவர்களின் பெயர்களைக் காட்டுகிறோம். 1:1 அரட்டையைத் தொடங்க அவர்களின் பெயர்களைத் தட்டினால் போதும், பின்னர் ஒரே ஸ்வைப்பில் எளிதில் குழுவிற்குத் திரும்பலாம்! இதை விரைவு அரட்டை என அழைக்கிறோம், ஒட்டுமொத்த குழுவையும் ஸ்பேம் செய்யாமல் ஒரு நண்பருடன் உரையாடலைத் தொடர்வதற்கான விரைவான வழி.
குழுவிற்கு அனுப்பிய அரட்டைகள் 24 மணிநேரத்திற்குப் பின் இயல்புநிலையில் நீக்கப்படும். குழுவிற்கு அனுப்பிய Snapகளை ஒவ்வொரு பெறுநரும் ஒருமுறை மட்டுமே திறக்கவும் மறுஇயக்கவும் முடியும். ஒரு Snap திறக்கப்படாவிட்டால் அரட்டைகளைப் போல் 24 மணிகளுக்குப் பின் நீக்கப்படும்.
கத்தரிக்கோல், ஓவியத்தூரிகை ஆகிய இரண்டு புதிய ஆக்கப்பூர்வக் கருவிகளையும் அறிமுகப்படுத்தியுள்ளோம். முன்காட்சித் திரையில் Snap இன் ஒரு பகுதியை ஸ்டிக்கராக வெட்டி எடுக்க கத்தரிக்கோலைப் பயன்படுத்துங்கள்! நினைவுகளில் Snapகளுக்கு ஓவியத்தூரிகையைப் பயன்படுத்தலாம், இது Snap ஐ கலைப்படைப்பாக மாற்றுகிறது!
உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றியுள்ளவராக இருக்கிறோம். இன்னுமொரு அற்புதமான ஆண்டுக்கு நன்றி – உங்கள் அனைவருக்குமான தயாரிப்புகளை உருவாக்குவதை விரும்புகிறோம்! அருமையான 2017 ஆம் ஆண்டாக அமைய வாழ்த்துக்கள்.
Back To News