Harmony Korine's Debut Short Film Shot on Spectacles 3 Explores Storytelling in 3D

Today, we unveiled Duck Duck by Harmony Korine, an experimental short film shot using Spectacles 3 to explore storytelling in 3D.
இன்று,3D இல் கதைசொல்லலை பரிசோதிக்க Spectacles 3 ஐப் பயன்படுத்தி படம்பிடிக்கப்பட்ட ஒரு சோதனை குறும்படமான ஹார்மனி கோரின் எழுதிய Duck Duck ஐ வெளியிட்டோம். 3D விளைவுகளுடன் கூடிய Snap களை உருமாற்றும் திறனை அன்லாக் செய்ய முப்பரிமாண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைப் படம்பிடிக்க Spectacles 3 இல் இரட்டை எச்டி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
கிட்ஸ், ஸ்பிரிங் பிரேக்கர்ஸ் மற்றும் மிக சமீபத்தில், பீச் பம்-இற்காக நன்கு அறியப்பட்ட, கல்ட் திரைப்படத் தயாரிப்பாளர் ஹார்மனி கோரின் அதிவேக கதைசொல்லலுக்கான முப்பரிமாண காட்சிகளில் மிகைப்படுத்தப்பட்ட மெய்ம்மையை ஒன்றுடன் ஒன்று இணைப்பதன் மூலம் ஒரு திரைப்படக் கருவியாக Spectacles 3 உடன் பரிசோதனைகள் மேற்கொள்கிறார்.
Spectacles 3 ஐப் பயன்படுத்தி, ஹார்மனி கோரின் மியாமியை Duck Duck இல் ஒலி மற்றும் வண்ணத்தின் தடையற்ற கனவுக் காட்சியாக மாற்றுகிறார் - அணியக்கூடிய சினிமா, மிகைப்படுத்தப்பட்ட மெய்மை மற்றும் அதிவேக, தன்னிச்சையான கதைசொல்லல் ஆகியவற்றின் வளர்ந்து வரும் துறைகளை இதன்மூலம் பரிசோதிக்கிறார். படத்திற்காக உருவாக்கப்பட்ட 3D விளைவுகள் மூலம் படத்தின் கலப்பின யதார்த்தம் உயிர்ப்பிக்கப்படுகிறது, இது Snapchat இல் Spectacles 3 பயனர்களுக்கு கிடைக்கும்.
"Spectacles 3 என்பது முற்றிலும் தனித்துவமான வடிவமாகும், இது திரைப்படம், கதை, எது அனிமேஷன் செய்யப்பட்டுள்ளது மற்றும் எது உண்மையானது என்பது பற்றிய எனது பார்வையை மாற்றியது" என்று ஹார்மனி கோரின் கூறினார். "முதல் நபரின் பார்வை மற்றும் 3D விளைவுகளை இணைப்பதன் மூலம், சன்கிளாஸ்கள் அவற்றின் சொந்த ஹைப்பர்பெர்சனல் யூனிவர்சைப் பயன்படுத்தி Duck Duck இன் பல புலனுணர்வு அனுபவத்தை ஊக்குவிக்க உதவியது - அதாவது நீங்கள் அதைப் பார்க்கும்போது இந்த உலகத்தில் நடக்கமுடிவது போல் தோன்றும்".
"ஹார்மனி கோரின் மற்றும் Spectacles அதிசயமான கதைசொல்லலின் எல்லைகளை விரிவாக்க உதவுகின்றனர்" என்று Hardware, Spectacles இயக்குனர் ஸ்டீன் ஸ்ட்ராண்ட் கூறினார். "இந்த புதிய தொழில்நுட்பம் ஆக்கபூர்வமான கதைசொல்லலின் எதிர்காலத்தை எவ்வாறு தெரிவிக்கும் என்பதைக் காட்டுவதன் மூலம் உங்கள் சொந்த இரண்டு கண்களைப் போன்றே காட்சியின் ஆழத்தைக் கைப்பற்றும் திறனுடன், Spectacles 3 ஹார்மனி கோரினின் Duck Duck இற்கான தனித்துவமான பார்வைக்கு உயிரூட்டுகிறது,
கூச்சியின் ஆதரவுடன் மியாமி கடற்கரையில் ஆர்ட் பாசலில் டிசம்பர் 4 மாலை திரையிடப்பட்ட Duck Duck உடன் ஹார்மனி கோரினின் கூச்சியுடனான நீண்ட கால உறவில் 2019 விடுமுறை "பரிசு கொடுத்தல்" பிரச்சாரம், குரூஸ் 2020 விளம்பரப் பிரச்சாரம், ப்ரீ-ஃபால் 2019 கலெக்ஷன் லுக்புக் மற்றும் மென்ஸ் டெய்லரிங் விளம்பரப் பிரச்சாரம் ஆகியவற்றில் புகைப்படம் எடுத்தது மற்றும் ஹார்மனி கோரினின் லிமிடெட் எடிஷன் ஆர்ட்புக் ஆகியவை அடங்கும். 2019 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் ஆண்கள் ஃபேஷன் வாரத்தின் போது மிலானின் கூச்சி ஹப்பில் ஒரு திரைப்படம் சார்ந்த கண்காட்சியை கூச்சி அவருக்கு அர்பணித்தது, ஹார்மனி கோரின் – தி கிராக் அப்.
இந்த கூட்டின் ஒரு பகுதியாக, ஹார்மனி கோரின் மற்றும் கூச்சி ஒரு லிமிடெட் பதிப்பு உருவாக்க Spectacles x கூச்சி ஹார்மனி கோரின் Spectacles உடன் கூட்டமைத்தனர். ஆர்ட் பாசல் மியாமி பீச் 2019 க்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட லிமிடெட் பதிப்பு Spectacles 3, ஹார்மனி கோரினால் ஊக்குவிக்கப்பட்டு, படைப்பாளர்களுக்காக கூச்சியுடன் வடிவமைக்கப்பட்டது. உலகெங்கிலும் உள்ள Snapchat பயனர்கள் இங்கே Spectacles x கூச்சி ஹார்மனி கோரின் ஐ மெய்நிகராக முயன்று பார்க்கலாம்.
Duck Duck ஐ www.spectacles.com.இல் பார்க்கமுடியும். அந்தத் திரைப்படம் மற்றும் லிமிடெட் பதிப்பு Spectacles x கூச்சி ஹார்மனி கோரின் மியாமி பீச்சில் ஆர்ட் பாசலின் போது திரையிடப்படும். இது மியாமி ஆர்ட் டிஸ்ட்ரிக்ட், 3930 NE, 2வது அவென்யூ,Ste 200, மியாமி, FL 33137. இல் உள்ள தி மெலின் பில்டிங்கில் டிசம்பர் 5 முதல் 8 ஆம் தேதி வரை நடைபெறும். தகவல் மற்றும் கண்காட்சி நடைபெறும் நேரத்தினை இங்கே பார்க்கலாம்.
Back To News