
மார்ச் 8, 8 பெண்கள்
சர்வதேச மகளிர் தினமான மார்ச் 8, 2023 அன்று, பாரிஸில் உள்ள Snap-இன் AR ஸ்டுடியோ, 8 முக்கிய பிரெஞ்சு நகரங்களில் (பாரிஸ், லியோன், மார்சேய், போர்டோக்ஸ், லில்லி, ஸ்ட்ராஸ்பர்க், மெட்ஸ் மற்றும் நாண்டஸ்) 8 அடையாளப் பெண்களை ஒரு தனித்துவமான இணைப்பு நிஜமாக்க நௌபாவம் மூலம் கௌரவிக்கிறது: 8 மார்ச், 8 பெண்கள்.

சர்வதேச மகளிர் தினமான மார்ச் 8, 2023 அன்று, பாரிஸில் உள்ள Snap-இன் AR ஸ்டுடியோ, 8 முக்கிய பிரெஞ்சு நகரங்களில் (பாரிஸ், லியோன், மார்சேய், போர்டோக்ஸ், லில்லி, ஸ்ட்ராஸ்பர்க், மெட்ஸ் மற்றும் நாண்டஸ்) 8 அடையாளப் பெண்களை ஒரு தனித்துவமான இணைப்பு நிஜமாக்க நௌபாவம் மூலம் கௌரவிக்கிறது: 8 மார்ச், 8 பெண்கள்.
ஆண்களைப் போலவே பல பெண்களும் பிரெஞ்சு வரலாற்றின் போக்கை மாற்றியிருந்தாலும், பிரெஞ்சு நகர்ப்புறங்களில் (சதுரங்கள், தோட்டங்கள் மற்றும் தெருக்கள்) உள்ள பெரும்பாலான சிற்பங்கள் ஆண் உருவங்களை மட்டுமே மரியாதைக்கு உட்படுத்துகின்றன. ஆகையால் Snap-இன் AR ஸ்டுடியோ, அரசியல், கலைகள், தத்துவங்கள் மற்றும் இராணுவ துறைகளில் பிரெஞ்சு வரலாறு மீது தங்களது அடையாளத்தை விட்டுச்சென்ற பெண்களின் AR சிலைகளைக் கற்பனை செய்து பார்த்துள்ளது. இந்த AR சிலைகள் எக்ஞல் ஆண் சகாக்களின் சிலைகளுக்கு அடுத்து நிறுவப்பட்டுள்ளன. இவை சிந்த சிறந்த பெண்களின் சாதனைகளைக் கௌரவிப்பதற்கும் பிரெஞ்சு சமூகத்தில் பெண்கள் உரிமைகள் மற்றும் நிலைப்பாட்டிற்கு அவர்களின் பங்களிப்பையும் கொண்டாடுவதற்காகும்.
மார்ச் 8, 8 பெண்கள்
AR அனுபவம் 8 மார்ச் 8 பெண்கள் மார்ச் 8 2023 முதல் கிடைக்கும் மற்றும் அதில் பிரெஞ்சு வரலாற்றில் இருந்து பின்வரும் முக்கியப் பெண் பிரமுகர்கள் இடம்பெருவார்கள்:
சிமோன் வீல்: பெண்களின் உரிமைகளுக்கான சாம்பியன், கருக்கலைப்பை சட்டப்பூர்வமாக்கிய 1975 சட்டத்தின் சின்னம் மற்றும் ஐரோப்பிய பாராளுமன்றத்தின் முதல் பெண் தலைவர். அவரது இணைப்பு நிஜமாக்கம் சிலை பாரிஸில் உள்ள Champs-Elysées ரவுண்ட்அபவுட்டில் உள்ள ஜெனரல் சார்லஸ் டி கோலின் சிலைக்கு அருகில் மைக்கப்படும்.
சிமோன் த பொவார்: இருத்தலியல் இயக்கத்தின் புகழ்பெற்ற எழுத்தாளர் மற்றும் தத்துவவாதி. மரபு எதிர்ப்பாளராக, அவர் 1949 ஆம் ஆண்டு வெளியான தி செகண்ட் செக்ஸ் புத்தகம் போன்ற அவரது எழுத்துக்களில் பெண்களின் விடுதலைக்காக வாதிட்டார், மேலும் 20 ஆம் நூற்றாண்டில் பிரெஞ்சு பெண்ணியத்தின் முன்னோடிகளில் ஒருவராக ஆனார். அவரது இணைப்பு நிஜமாக்கம் சிலை லியோனில் உள்ள ப்ளேஸ் பெல்கோரில் உள்ள அன்டோயின் டி செயிண்ட்-எக்ஸ்புரியின் சிலைக்கு அடுத்ததாக வைக்கப்படும்.
எலிசபெத் விகி லே ப்ரான்: 1783 ஆம் வருடம் ராயல் அகாடமி ஆஃப் பெயிண்டிங் அண்ட் ஸ்கல்ப்ச்சரில் அனுமதிக்கப்பட்ட இவர் மேரி அன்டோனெடடின் அதிகாரப்பூர்வ ஓவியர் ஆவார், அவர் தனது காலத்தில் பெண் கலைஞர்கள் எதிர்கொள்ளும் பல தடைகளை மீறி கலை உலகில் முக்கிய மற்றும் பிரபலமான வெற்றியை அடைந்தார். அவரது இணைப்பு நிஜமாக்கம் சிலை மார்சேயில் உள்ள பார்க் பொரேலியில் பியர் புகெட்டின்.சிலைக்கு அடுத்து வைக்கப்படும்.
Françoise de Graffigny: 18 ஆம் நூற்றாண்டின் பிரெஞ்சு இலக்கியத்தின் மிகவும் பிரபலமான பெண் பிரமுகர்களில் ஒருவர், 1747 இல் வெளியிடப்பட்ட ஒரு பெருவியன் பெண்ணின் கடிதங்கள் என்ற தத்துவக் கட்டுரைக்காக மிகவும் பிரபலமானவர். இவரது இணைப்பு நிஜமாக்கம் சிலை போர்டியாக்ஸில் உள்ள ப்ளேஸ் டெஸ் குயின்கான்செஸில் உள்ள மான்டெஸ்கியூவின் சிலைக்கு அடுத்து வைக்கப்படும்.
மனோன் டார்டன்: பிரெஞ்சு எதிர்ப்பு மற்றும் சுதந்திர பிரான்சின் பிரமுகர், நாஜி ஜெர்மனியின் சரணடைவு மே 8 1945 அன்று கையொப்பமிடப்பட்ட போது இவர் இருந்தார். இவரது இணைப்பு நிஜமாக்கம் சிலை நான்டெஸில் உள்ள அமிரல் ஹல்கன் சதுக்கத்தில் பிலிப் லெக்லெர்க் டி ஹாட்கிலோக்கின் சிலைக்கு அடுத்து வைக்கப்படும்.
ஜோஸ்பீன் பேக்கர்: அமெரிக்காவில் பிறந்த பாடகர், நடிகை, பெண்ணியவாதி, அனிநடிகை மற்றும் பிரெஞ்சு எதிர்ப்புப் போராளி, ஜோசபின் பேக்கர் சுதந்திர பிரெஞ்சுப் படைகளின் உளவாளியாகவும், பாரீஸ் ஆஃப் தி ரோரிங் ட்வென்டீஸின் சின்னமாகவும், இனப் பிரிவினைக்கு எதிரான போராட்டத்தில் செல்வாக்கு மிக்க நபராகவும் இருந்தார். இவரது இணைப்பு நிஜமாக்கம் சிலை மெட்ஸ் நகரில் உள்ள கேர் சென்டரலில் ஜீன் மோலின் சிலைக்கு அருகில் வைக்கப்படும்.
ஒலிம்பே டி கௌஜஸ்: 1791 இல் வெளியிடப்பட்ட டிக்ளரேஷன் ஆஃப் வுமன் அண்ட் தி சிட்டிசன்-இன் முதன்மை எழுத்தாளர், அவர் பெண்ணியத்தின் பிரெஞ்சு முன்னோடிகளில் ஒருவராகக் கருதப்படுகிறார். இவரது இணைப்பு நிஜமாக்கம் சிலை ஸ்ட்ராஸ்பேர்க்கில் உள்ள ப்ளேஸ் க்ளெபரில் ஜீன்-பாப்டிஸ்ட் க்ளெபரின் சிலைக்கு அடுத்து வைக்கப்படும்.
ஹுபர்டைன் ஆக்லெர்ட்: பத்திரிகையாளர், பெண்ணிய ஆர்வலர் மற்றும் 1876 இல், e droit des femmes சமூகத்தின் நிறுவனர் L(அதாவது: பெண்கள் உரிமைகள் சமூகம்) அவர் பெண்களின் பொருளாதார சுதந்திரம், கல்விக்கான உரிமை மற்றும் திருமணம் மற்றும் விவாகரத்தில் சமத்துவம் ஆகியவற்றிற்காக வாதிட்டார். இவரது இணைப்பு நிஜமாக்கம் சிலை லில்லி ஓபராவிக்கு மிக அருகில் உள்ள ப்ளேஸ் டு தியேட்டரில் உள்ள லியோன் ட்ரூலின் சிலைக்கு அடுத்ததாக.வைக்கப்படும்.
இந்த இணைப்பு நிஜமாக்க அனுபவத்தை வடிவமைக்க, AR ஸ்டுடியோ பாரிஸில் உள்ள ஒரு பெண் 3D கலைஞர் மற்றும் ஒரு பெண் AR இன்ஜினியர் உட்பட, திட்டத்திற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு அணி கருத்துருவாக்கி, சிலைகளை செதுக்கி, இந்த இணைப்பு நிஜமாக்க அனுபவங்களுக்கு உயிர் கொடுத்து இந்த பெண்களின் பிரதிநிதித்துவங்களை முடிந்தவரை யதார்த்தத்திற்கு நெருக்கமாக வழங்க ஊடாடும் தன்மையை உருவாக்கினர்
. பிரான்சின் 8 நகரங்களில் நிறுவப்பட்ட இந்தப் புதுமையான அனுபவத்தின் மூலம், பிரெஞ்சு வரலாறு மற்றும் சமூகத்தை தங்கள் செயல்கள், தங்கள் எழுத்டுக்கள் அல்லது தங்களின் நிலை மூலம் மாற்றியுள்ள 8 பெண்களுக்கு மரியாதை செலுத்த விரும்புகிறோம். Snap-இன் இணைப்பு நிஜமாக்கம் தொழில்நுட்பங்களுக்கு நன்றி, அந்த 8 பெண்களின் சிலைகளை பொது இடத்தில் உருவாக்கி ஆண்களின் சிலைகளுக்கு அருகில் வைத்தும் நம்மால கொண்டாட முடிந்தது. இந்த வரலாற்று உருவாங்குகளுக்கு ஈடேயே பேச்சில்லா உரையாடலை ஏற்படுத்துவதன் மூலம், பெண்களின் உரிமைகளுக்கான போராட்டம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எங்கள் விருப்பம்." — டொனாட்டியன் போஜோன், AR ஸ்டூடியோ இயக்குனர்.
லென்ஸஸை எவ்வாறு செயல்படுத்துவது: :
Snapchat பயனர்கள் மற்றும் தளத்தில் பார்வையாளர்கள் கீழே உள்ள செயற்படிகளைப் பின்பற்றுவதன் மூலம் 8 மார்ச் 2023 முதல் லென்ஸைத் தூண்ட முடியும்:
நீங்கள் விரும்பும் இடத்திற்குச் சென்று சிலைக்கு எதிரே நிற்கவும்.
Snapchat செயலியைத் திறக்கவும்.
கரோசலில் இருக்கும் 8 மார்ச், 8 பெண்கள் லென்ஸஸை தொடங்கவும்.
உங்கள் ஸ்மார்ட்போனை சிலையை நோக்கி வைக்கவும்.
இணைப்பு நிஜமாக்கம் சிலை அசல் சிலைக்கு அடுத்து நிஜ அளவில் தோன்றும்.
உங்கள் நெருங்கிய நண்பர்களுடன் Snap வழியாகப் பகிருங்கள், உங்கள் கதையில் அல்லது ஸ்பாட்லைட்டில் பதிவுடுங்கள்.
Snapchat பயனர்கள் கீழே உள்ள QR குறியீடுகளை ஸ்கேன் செய்வதன் மூலமும் சிலைகளின் சிறிய பதிப்பைப் பார்க்கலாம்.