01 ஆகஸ்ட், 2023
01 ஆகஸ்ட், 2023

அறிமுகப்படுத்துகிறோம் லென்ஸ் உருவாக்குநர் வெகுமதிகள்: AR படைப்பாளர்களின் படைப்பாற்றலுக்கு வெகுமதி பெறுவதற்கான ஓர் புதிய வழி

AR படைப்பாளர்கள், டெவலப்பர்கள் மற்றும் குழுக்கள் Snapchat இல் சிறப்பாக செயல்படும் லென்ஸஸ்களை உருவாக்குவதற்காக வெகுமதிகளை பெறும் வாய்ப்பினை வழங்குகின்றன

எங்களின் 300,000 க்கும் அதிகமான AR சமூகத்தினை சேர்ந்த AR படைப்பாளர்கள், டெவலப்பர்கள் மற்றும் குழுக்கள் உருவாக்கிய லென்ஸஸ்களை Snapchat பயனர்கள் விரும்புகின்றனர். உண்மையில், AR படைப்பாளர்கள் 3 மில்லியன் லென்ஸஸ்களை உருவாக்கியுள்ளனர், இதனை Snapchat பயனர்கள் 5 டிரில்லியனுக்கும் அதிகமான முறை பார்த்துள்ளனர்!

Snapchat பயனர்களின் ஆழமான ஈடுபாடு மற்றும் நம்பமுடியாத அளவிலான AR உருவாக்கங்களுக்காகவும், நாங்கள் AR படைப்பாளர்கள் தங்கள் திறமைகளை, படைப்பாற்றலை மேம்படுத்துவன் மூலம் தங்கள் வணிகங்களை மேம்படுத்துவதற்காகவும், AR படைப்புகளுக்கு ஆதரவளிப்பதில் உறுதியாக இருக்கிறோம்.

இன்று, அறிமுகப்படுத்துகிறோம்லென்ஸ் உருவாக்குனர் வெகுமதிகள், Snap AR படைப்பாளர்கள், டெவலப்பர்கள் மற்றும் குழுக்கள் Snapchat இல் சிறப்பாக செயல்படும் லென்ஸஸ்களை உருவாக்குவதற்கான ஓர் புதிய வழி. Snapchat பயனர்கள் தங்களை வெளிப்படுத்துவதற்கும், நண்பர்கள் உடன் கொண்டாடவும் உதவும் மிகவும் ஆக்கப்பூர்வமான லென்ஸஸ்களை கொண்டாடும் வகையில் இந்த நிகழ்ச்சி வடிவமைக்கப்பட்டுள்ளது - முயற்சி செய்து பார்ப்பதற்கேற்ற பல புதிய தோற்றங்கள் முதல் ஆராய்ந்து பார்ப்பதற்கேற்ற AR காட்சிகள் வரை.

ஒவ்வொரு மாதமும், அமெரிக்கா, இந்தியா மற்றும் மெக்ஸிகோ நாடுகளில் சிறப்பாக செயலாற்றும் லென்ஸஸ்களுக்கு $7,200 வரை பரிசுத் தொகையாக லென்ஸ் உருவாக்குநர்களுக்கு கிடைக்கும் வாய்ப்புண்டு. இந்த திட்டம் கிட்டத்தட்ட 40 நாடுகளில் உள்ள புதிய மற்றும் ஏற்கனவே இருக்கும் Lens Studio சமூகத்தினர் அனைவருக்குமானதாக இருக்கும். இந்த திட்டத்தில் பங்கு பெற, AR படைப்பாளர்கள் லென்ஸஸ் உருவாக்க வேண்டும் மற்றும் Lens Studio வில் இந்த திட்டத்திற்கான தங்களின் தகுதியை சரிபார்க்கலாம்.

கடந்த ஐந்தாண்டுகளில், பிராண்டுகள் மற்றும் கூட்டாளர்களுக்கான லென்ஸ்களை உருவாக்கவும், டிஜிட்டல் பொருட்களுடன் லென்ஸ்களை உருவாக்கவும், எங்கள் GHOST Innovation Lab மற்றும் எங்களின் Spectacles உருவாக்குபவர் திட்டத்தின் மூலம் AR இன் எதிர்காலத்தை ஆராயவும் எங்கள் AR சமூகத்தை நாங்கள் செயல்படுத்தியுள்ளோம். இன்று, AR படைப்பாளர்களுக்கு புதிய ஆக்கப்பூர்வமான சாத்தியங்களை வழங்குவதன் மூலம் தங்கள் வணிகங்களை வளர்க்கும் புதிய வழியை வழங்குவதில் நாங்கள் பெருமகிழ்ச்சியடைகிறோம்.


செய்திகளுக்குத் திரும்புக