01 மார்ச், 2023
01 மார்ச், 2023

🔥 ஐ தொடர்ந்து வைத்திருங்கள்

2016 முதல், Snapchat பயனர்கள் தினசரி Snap உடன் அருகிலும் தூரத்திலும் இருக்கும் தங்கள் நட்புகளுடன் Snap Streaks ஐ வளர்த்துள்ளனர். ஆனால், வாழ்க்கை பிஸியாக இருக்கும், முகாம் பயணங்கள் மற்றும் தேர்வுகள் வரலாம், மோசமான சேவை அல்லது தொலைபேசி-சேவை முடக்கத்தால் சில நேரங்களில் நீங்கள் ஒரு நாள் முழுக்க எதனையும் பயன்படுத்த முடியாமல் கூட போகலாம்.

Snap Streak தொலைந்தால் உங்கள் நட்பு உறைந்துவிட்டதாக அர்த்தமாகிவிடாது, இன்று தொடங்கி, நாங்கள் பரிசோதித்து வரும் புதிய அம்சத்துடன் ஓர் இடைவெளி காலத்தினை எடுக்கும் வசதியினை எளிமையாக்கவுள்ளோம், இதன் மூலம் மீண்டும் சுவாலையினை நீங்கள் அதே நிலையில் எரிய விடலாம் மற்றும் வெறும் ஒரு தட்டுதலிலேயே ஒரு Streak ஐ இலவசமாக கொண்டு வரலாம்.

ஒரு முறைக்கு மேல் மீட்டமைக்க விரும்பும் Snapchat பயனர்களுக்கு அதிக Streak Restores சேர்க்கும் விருப்ப உரிமை செயலியில் கிடைக்கும், மேலும் விரைவில் Snapchat+ சந்தாதாரர்களுக்கு அவர்களின் Streaks ஐ அப்படியே காத்திருக்க வைக்கும் வசதியினை சேர்க்க உள்ளோம், சில நாட்கள் இதனை பயன்படுத்த முடியாத சூழல் வரும் போது இதன் மூலம் தற்காலிகமாக நிறுத்தி வைத்து பின்னர் தொடங்க முடியும்.

இணைந்திருங்கள்!