LACMA x Snapchat: Unveiling Monumental Perspectives

In celebration of the upcoming International Day for Monuments and Sites, we’re sharing the first wave of projects from our multi-year LACMA x Snapchat initiative, Monumental Perspectives. Artists and Snap Lens Creators have come together to create five new augmented reality monuments that explore history and representation for communities across Los Angeles.
நினைவுச்சின்னங்கள் மற்றும் இடங்களுக்கான பன்னாட்டு தினத்தைக் கொண்டாடும் வகையில், எங்கள் பல்லாண்டு LACMA x Snapchat, நினைவுச்சின்னக் கண்ணோட்டங்கள் முன்னெடுப்பிலிருந்து திட்டங்களின் முதல் அலையைப் பகிர்ந்து கொள்கிறோம்.
லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள சமூகங்களின் வரலாறு மற்றும் பிரதிநிதித்துவத்தை ஆராயும் ஐந்து புதிய மிகைப்படுத்தப்பட்ட மெய்மை நினைவுச்சின்னங்களை உருவாக்குவதற்காக கலைஞர்களும் Snap லென்ஸ் உருவாக்கிகளும் ஒன்றிணைந்துள்ளனர். Snapchat கேமராவின் வழியே நகரத்திலுள்ள இடங்களில் அனுபவிப்பதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது, LACMA, மெக் ஆர்தர் பூங்கா, எர்வின் "மேஜிக்" ஜான்சன் பூங்கா, லாஸ் ஏஞ்சல்ஸ் மெமோரியல் கொலிசியம் உள்ளிட்ட இடங்களில் நீங்கள் அவற்றைக் காணலாம். இப்பகுதியில் உள்ளவர்கள் Snap வரைபடத்தில் அவற்றிற்கான மார்க்கர்களைத் தேடுவதன் மூலம் மெய்நிகர் நினைவுச்சின்னங்களைக் கண்டறியலாம். உலகெங்கிலும் உள்ள எவரும், அவர்கள் எங்கிருந்தாலும் தங்கள் கைபேசியில் lacma.org/monumental என்னும் இணையதளத்தைப் பார்வையிடுவதன் மூலம் இந்நினைவுச்சின்னங்களைக் காண முடியும்.
திட்டங்கள் பின்வருமாறு:
  • மெர்சிடிஸ் டோரைமின் ஆழ்த்துகை டோவாஞ்சர் போர்ட்டல், இது சமகால டோவாஞ்சரில் (லாஸ் ஏஞ்சல்ஸ்) பூர்வகுடிகள் இருந்த கடந்தகால, நிகழ்கால, எதிர்கால உலகங்களை ஆராய்கிறது, இது Snap லென்ஸ் உருவாக்கி சுடூவினால் உருவாக்கப்பட்டதாகும்.
  • சுய-பிரதிபலிப்புகளை ஊக்குவிப்பதற்காக வடிவமைக்கப்பட்ட ஐ.ஆர். பாக்கின் திங்க் பிக் அனிமேஷன்கள், இவை Snap லென்ஸ் உருவாக்கி ஜேம்ஸ் அர்ல்பட்டால் உருவாக்கப்பட்டதாகும்.
  • 1932 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் மாரத்தான் பாதையெங்கும் இணைந்திருக்கும் கிளன் கைனோவின் தலைமுறைக் கதைகளின் பாதை, Snap லென்ஸ் உருவாக்கி மைக்கேல் பிரெஞ்சினால் உருவாக்கப்பட்ட இது நோ பினிஷ் லைன் என அழைக்கப்படுகிறது.
  • லாஸ் ஏஞ்சல்ஸின் தெருவோர வியாபாரிகளின் பகிரப்பட்ட வரலாறு குறித்த ரூபன் ஒச்சோவாவின் புகழுரை, Snap லென்ஸ் உருவாக்கி சால்லியா கோல்டுஸ்டைனால் உருவாக்கப்பட்ட இது ¡Vendedores, Presente! என அழைக்கப்படுகிறது.
  • பிட்டி மேசன் புகழ்பாடும் அடா பிங்க்ஸ்டனின் மொமோரியல் தொடர், Snap லென்ஸ் உருவாக்கிகள் சார்லஸ் ஹம்பிலன் மற்றும் சுடூவினால் உருவாக்கப்பட்ட இது தி ஓபன் ஹேண்ட் இஸ் பிளஸ்ட் என அழைக்கப்படுகிறது.
அமெரிக்காவில் கலை மற்றும் மானுடவியல் செயற்பாடுகளுக்கு அதிகம் நிதியளிக்கும் ஆண்ட்ரூ டபிள்யூ. மெல்லன் அறக்கட்டளையால் இந்தத் திட்டத்தின் தற்போதைய விரிவாக்கம் ஆதரிக்கப்படுகிறது.
LACMA உடனான இந்தக் கூட்டு முயற்சியின் மூலமாக, எங்கள் மிகைப்படுத்தப்பட்ட மெய்மை தொழில்நுட்பம் பரப்புரை மற்றும் பிரதிநிதித்துவத்திற்கான ஆழ்த்துகை ஊடகமாக மாறியுள்ளது என்பதில் நாங்கள் உற்சாகமடைகிறோம். கலைஞர்களுக்கும் லென்ஸ் உருவாக்கிகளுக்கும் தொடர்ந்து அதிகாரமளிக்கவும், புதிய லென்ஸ் வழியாகச் சொல்லப்படாத கதைகளைப் பகிர்வதற்கான அவர்களின் ஆசைக்குத் தொடர்ந்து ஆதரவளிக்கவும் நாங்கள் எதிர்நோக்குகிறோம்.
Assets செய்திகளுக்குத் திரும்புக