Introducing LACMA x Snapchat: Monumental Perspectives

Today, we announced a new project we’re working on with The Los Angeles County Museum of Art (LACMA) called Monumental Perspectives.
லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டி கலை அருங்காட்சியத்துடன் (LACMA) நாங்கள் பணியாற்றிக் கொண்டிருக்கும் நினைவுச்சின்னக் கண்ணோட்டங்கள் என்ற ஒரு புதிய திட்டத்தை இன்று நாங்கள் அறிவித்தோம்.
புதிய மிகைப்படுத்தப்பட்ட மெய்ம்மை நினைவுச்சின்னங்களையும் சுவரோவியங்களையும் உருவாக்குவதற்காக லாஸ் ஏஞ்சல்ஸைச் சேர்ந்த கலைஞர்களும் Snap லென்ஸ் உருவாக்கிகளும் ஒன்றிணைந்து, நகரெங்கிலும் உள்ள சமூகங்களின் பன்முக வரலாறுகளையும் கண்ணோட்டங்களையும் கொண்டாடுகின்றனர். அவர்களின் பகிரப்பட்ட தொலைநோக்குகள் பொது ஆதரவு மற்றும் சார்பாண்மையின் வாகனங்களாய் லாஸ் ஏஞ்சல்ஸைச் சுற்றியுள்ள இடங்களில் உயிரோட்டம் பெறும்.
அவர்கள் கடந்த கால, நிகழ் காலத்தின் கவனிக்கத் தவறிய முக்கியமான தருணங்களையும் உருவங்களையும் ஆராய்ந்து, Snapchat பயனர்களுக்குப் புதிய லென்ஸ் அனுபவங்களைக் கொண்டுவருகின்றனர். அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் படைப்புகள் வெளிவரவிருக்கும் முதலாவது கலைஞர்கள்:
  • அடா பிங்க்ஸ்டன்
  • கிளன் கைனோ
  • I.R. பாக்
  • மெர்சிடிஸ் டோரைம்
  • ரூபன் ஒச்சோவா
அமெரிக்காவில் கலை மற்றும் மானுடவியல் செயற்பாடுகளுக்கு அதிகம் நிதி அளிக்கும் ஆண்ட்ரூ W.மெல்லன் அறக்கட்டளை, பொதுத் தளங்களில் நம் நாட்டின் வரலாறுகள் கூறப்படும் விதத்தை மாற்றுவதற்காக, $250 மில்லியன் மதிப்பில் ஐந்தாண்டு "நினைவுச்சின்னங்கள் திட்டத்தைச்" சமீபத்தில் அறிவித்தது. அவர்கள் சமூக ஈடுபாடுகள், தொடர்புடைய பொது நிகழ்ச்சிகள் மற்றும் வரும் ஆண்டுகளில் கூடுதல் கலைஞர்களைச் சேர்ப்பதற்காகத் திட்டத்தை விரிவாக்குதல் ஆகியவற்றிற்கு உதவுவார்கள்.
முன்னர்க் கூறப்படாத கதைகளுக்கு 2021 ஆம் ஆண்டின் தொடக்கத்திலிருந்து AR லென்ஸ் மூலம் உயிரோட்டமளிப்பதற்காக நாங்கள் காத்திருக்கிறோம்.
Back To News