For World Mental Health Day, Snapchat Teams With Headspace To Launch New In-App Meditations

Today, ahead of World Mental Health Day, we’re teaming up with Headspace to release two new in-app meditations through our Headspace Mini -- a safe space where friends can practice meditations and mindfulness exercises, and check in on each other through Snapchat.
இன்று, உலக மனநலத் தினத்திற்கு முன்னதாக, எங்கள் Headspace மினி மூலம் இரண்டு புதிய செயலியில் தியானங்களை வெளியிட Headspace உடன் நாங்கள் இணைந்துள்ளோம் - இது நண்பர்கள் தியானம், மனந்தெளிநிலையைப் பயிற்சி செய்யக்கூடிய ஒரு பாதுகாப்பான இடமாகும், மேலும் Snapchat மூலம் ஒருவருக்கொருவர் என்ன செய்கிறார்கள் என்பதையும் பார்க்கலாம்.
பதட்டம், மனச்சோர்வு, பிற மனநலப் பிரச்சனைகளுடன் போராடும் Snapchat பயனர்களுக்குச் சிறப்பாக உதவுவதற்காக Headspace மினி ஐ நாங்கள் உருவாக்கியுள்ளோம், இந்தப் பிரச்சனைகளை எங்கள் சமூகம் எவ்வாறு அனுபவிக்கிறது என்பதைப் பற்றி கடந்த ஆண்டு நடத்தப்பட்ட ஆராய்ச்சி மூலம் தெரிவிக்கப்பட்டது. Snapchat பயனர்களில் பெரும்பான்மையானவர்கள் மன அழுத்தம், பதட்டம் போன்ற உணர்வுகளை அனுபவிப்பதையும், அவர்களுக்கு உதவி தேவைப்படும்போது தொழில்முறை வல்லுநர்களையோ பெற்றோர்களையோ அணுகுவதைக் காட்டிலும், அவர்களது நண்பர்களைத் தான் முதலில் அணுகுகிறார்கள் என்பதையும் நாங்கள் கண்டறிந்தோம். ஏற்கனவே ஒரு நாளைக்குப் பல முறை தொடர்புகொள்ளும் அதே இடத்தில் அவர்களது நண்பர்களுடன் நேரடியாகப் பயன்படுத்துவதற்காகத் தற்காக்கக்கூடிய புதிய நல்வாழ்வுக் கருவிகளை வழங்க விரும்பினோம்.
இப்போது, கோவிட்-19 தொற்றுநோய் தொடங்கிப் பல மாதங்கள் ஆன பின்பு, Snapchat பயனர்கள் பள்ளி ஆண்டின் தொடக்கத்திற்கு மெய்நிகராகச் சென்றுகொண்டிருக்கும் அல்லது வீட்டிலிருந்து தொடர்ந்து வேலை செய்யும் இவ்வேளையில், இந்த நெருக்கடி அவர்களை எவ்வாறு பாதிக்கிறது என்பதைப் பற்றி நன்கு புரிந்துகொள்ள விரும்பினோம்.
அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், பிரான்சிலுள்ள இளைஞர்கள் மன அழுத்தத்தையும் நிச்சயமற்ற தன்மையையும் எவ்வாறு அனுபவிக்கிறார்கள் என்பதைப் பற்றி அறிய GroupSolver இன் மூலம் ஒரு கருத்தாய்வை ஏற்பாடு செய்தோம். அந்த சந்தைகள் ஒவ்வொன்றிலும், Snapchat பயனர்கள் அதிக மன அழுத்தத்தை அனுபவிப்பதாக முடிவுகள் காட்டுகின்றன, இதற்கு முதன்மைக் காரணியாக கோவிட்-19 உள்ளது:
  • Snapchat பயனர்கள் கடந்த ஆண்டைக் காட்டிலும் அதிகமாக, அடிக்கடி மன அழுத்தத்தை உணர்கின்றனர் - அமெரிக்காவில் 73% Snapchat பயனர்களும், அதைத் தொடர்ந்து ஐக்கிய இராச்சியத்தில் 68%, பிரான்சில் 60% Snapchat பயனர்கள் கடந்த வாரத்தில் மன அழுத்தத்தை உணர்ந்ததாகக் கூறினர்.
  • மன அழுத்தத்திற்கான முக்கியக் காரணியாக கோவிட்-19 உள்ளது (அமெரிக்காவில் 85%, ஐக்கிய இராச்சியத்தில் 87%, பிரான்சில் 80% Snapchat பயனர்கள்), அதைத் தொடர்ந்து நிதி சார்ந்த பிரச்சனைகளும் (அமெரிக்காவில் 81%, ஐக்கிய இராச்சியத்தில் 77%, பிரான்சில் 76%) வேலை/தொழிற்சார் அழுத்தங்களும் (அமெரிக்காவில் 80%, ஐக்கிய இராச்சியத்திலும் பிரான்சிலும் 77%) முக்கியக் காரணிகளாக உள்ளன. அமெரிக்க Snapchat பயனர்களுக்கான மன அழுத்தத்தின் குறிப்பிடத்தக்க காரணியாக தேர்தல்/அரசியல் உள்ளது - அது தங்கள் மன அழுத்த நிலைகளுக்குப் பங்களிப்பதாக 60% பேர் குறிப்பிட்டனர்.
  • அமெரிக்காவில் உள்ள ஜென் ஸி Snapchat பயனர்களுக்கான (13-24) மன அழுத்தத்தின் ஒரு முக்கியக் காரணியாகப் பள்ளி உள்ளது (13-24 வயதிற்குட்பட்டவர்களில் 75%, 13-17 வயதிற்குட்பட்டவர்களில் 91%), அவர்களுடைய சகாக்களுடன் போதிய சமூகத் தொடர்பின்மை, கோவிட்-19 இடையூறுகள் காரணமாகக் கல்வியில் பின்தங்குதல் ஆகியன முக்கியக் கவலைகளாக உள்ளன.
  • இந்த மன அழுத்தம் அவர்களின் உணர்வு, உடல் நலத்தில் பாதிப்பை ஏற்படுத்துவதாக அமெரிக்க Snapchat பயனர்கள் தெரிவிக்கின்றனர் - இதில் 60% பேர் பதட்டமாக உணர்வதாகவும், 60% பேர் சோர்வாக உணர்வதாகவும், 59% பேர் மூழ்கடிக்கப்பட்டதாக உணர்வதாகவும் தெரிவிக்கின்றனர். கிட்டத்தட்ட 50% பேர் அமைதியின்மையை உணர்வதாகவும் 43% பேர் அதிகரித்த தலைவலியை அனுபவிப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.
மன அழுத்தத்தைச் சமாளிப்பதற்காக அமெரிக்காவில் சுமார் மூன்றில் ஒரு பங்கு Snapchat பயனர்களும், ஐக்கிய இராச்சியம் மற்றும் பிரான்சில் ஐந்தில் ஒரு பங்கு பயனர்களும் தியானத்தைப் பயன்படுத்துகிறார்கள் என்பதைக் கருத்தில் கொண்டு, இந்தப் பிரச்சனைகளில் சிலவற்றை நேரடியாகத் தீர்ப்பதற்காக Headspace ஆல் வழிகாட்டப்படும் புதிய தியானங்களை வெளியிடுகிறோம்:
  • "சூஸ் கயிண்ட்னஸ்" - இரக்கத்தைப் பயிற்சி செய்வதில் கவனம் செலுத்தும் ஒரு சிறிய தியானம், இது உலகில் நாம் எவ்வாறு காண்பிக்கப்படுகிறோம், மற்றவர்களை எப்படி நடத்துகிறோம் என்பதை மாற்றும். ஒழுங்கின்மை, குழப்பம், சச்சரவுகளுக்கு மத்தியில் நம் மனநிலையை மாற்றி, பரிவு நிறைந்த இடத்திற்குச் செல்வதற்காக இந்தத் தியானம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • "டேக் ஆன் தி ஸ்கூல் இயர்" - பள்ளியில் நிச்சயமற்ற தன்மையில் பயணம் செய்வதில் கவனம் செலுத்தும் ஒரு சிறிய தியானம். மாணவர்கள் வகுப்பறைக்குத் திரும்பினாலும் அல்லது வீட்டிலிருந்தாலும், கவலை, பதட்டம் அல்லது நண்பர்களிடமிருந்து பிரிந்திருப்பது போன்ற உணர்வுகள் கூட அவர்களுக்கு இருக்கலாம். உங்கள் சுவாசத்துடன் இணையவும், நிச்சயமற்ற தன்மையைக் குறைக்க ஓய்வெடுக்கக்கூடிய ஓர் இடத்தைக் கண்டறியவும் இந்தத் தியானம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
எங்கள் சமூகத்தின் நல்வாழ்விற்கும் மகிழ்ச்சிக்கும் உதவுவதில் Snapchat முக்கியப் பங்கு வகிக்க முடியும் என்று நம்புகிறோம். ஹியர் ஃபார் யூ போன்ற எங்கள் மனநல வளங்களுடன் கூடுதலாக, இந்த முயற்சிகளை உருவாக்குவதற்கும், ஆதரவை நாடி நண்பர்களுடன் இணைவதற்கான திறன்களை Snapchat பயனர்களுக்குத் தொடர்ந்து வழங்குவதற்கும் நாங்கள் எதிர்நோக்குகிறோம்.
Back To News