Snap Partner Summit | New Snap Originals

Today we’re excited to announce our new slate of Snap Originals programming! These Shows span docuseries and scripted, comedies, and teen dramas — but they all have one thing in common. It’s not just the Shows that are original, it’s the way the stories are told.
Snap மூலங்கள் நிரலாக்கத்தின் புதிய ஸ்லேட்டை இன்று அறிவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்!
இந்த நிகழ்சிகள் ஆவணங்கள், கதைகள், நகைச்சுவைகள் மற்றும் பதின்ம வயது நாடகங்களை கொண்டுள்ளன — ஆனால் அவை அனைத்தும் பொதுவான ஒன்றைக் கொண்டுள்ளது. இதில் நிகழ்ச்சிகள் மட்டும் மூலமல்ல, கதைகள் சொல்லப்பட்ட விதம்.
அவை தனிப்பட்டவை, நெருக்கமானவை, மேலும் இன்று நீங்கள் உங்களுடைய தொலைபேசியை பயன்படுத்தும் விதத்தில் உருவாக்கப்பட்டவை.
  • நியூ ஃபார்மால் வழங்கப்படும் டூ சைட்ஸ் -இல், ஒரு இளம் ஜோடி பிரிந்து செல்கிறது - ஒரே நேரத்தில் இரண்டு கதாபாத்திரங்களின் கண்ணோட்டத்திலிருந்தும் கூறப்படுகிறது.
  • நியூ ஃபார்மால் வழங்கப்படும் காண்'ட் டாக் நவ், உயர்நிலை பள்ளியின் சில மாணவர்களில் நெருங்கிய நண்பர்களின் தொலைபேசிகளுக்குள் நடைபெறும் இளம் பருவத்தினருக்கான ஒரு தொடர் ஆகும்.
  • இண்டிகோவால் வழங்கப்படும் ஸ்னீக்கர்ஹெட்ஸ் -இல், லாஸ் ஏஞ்சல்ஸ் ஸ்னீக்கர் கலாச்சாரத்தின் வெறி கொண்ட, நிழல் நிறைந்த, கணிக்க இயலாத உலகிற்குச் செல்லும் புதிய கல்லூரி மாணவர்கள் மூவரின் தவறான முயற்சிகளை நாம் பின்தொடர்வோம்.
  • டகோட்டா பிக்சர்ஸால் வழங்கப்படும் கமாண்டர்ஸ் -இல், நிஜ வாழ்க்கையை மாற்றக்கூடிய ஒரு மர்மமான குறியீட்டைக் கொண்ட ரெட்ரோ கணினியை, உயர்நிலை பள்ளியிலிருந்து வெளியேற்றப்பட்ட இருவர் கண்டுபிடிக்கின்றனர்.
  • ஒரு வாரத்தில் இறக்கவிருக்கும் ஒரு உயர்நிலை பள்ளி ஜூனியரான டென்டன் லிட்டிலைக் குறித்து இன்சரெக்ஷன் மீடியா செண்டரால் வழங்கப்படும் டென்டன்'ஸ் டெத் டேட்.
  • இண்டிகோவால் வழங்கப்படும் வைல் ப்ளாக், ஆசிரியர், திரைப்படத் தயாரிப்பாளர், ரிக்கார்டிங் ஆர்ட்டிஸ்ட் மற்றும் கல்வியாளர் MK Asante தலைமையிலான முன்தயாரிப்பில்லாத உரையாடல்கள் மூலம் இன ரீதியான சமூகப் பிரச்சனைகளை ஆராயும் ஒரு ஆவணத் தொடர் ஆகும்.
  • பஸ்ஃபீடின் வரவிருக்கும் தினசரிப் பிற்பகல் நிகழ்ச்சியானது சமீபத்திய பிரபலங்கள், பொழுதுபோக்கு மற்றும் இணையத்தைத் திக்குமுக்காடச் செய்யும் முற்றிலும் ஆச்சரியமான தருணங்கள் ஆகியவற்றை பார்வையாளர்களுக்குக் கொண்டுவருகிறது.
  • பஸெலெவ்ஸால் வழங்கப்படும் டெட் ஆஃப் நைட் -இல், ஒரு டீனேஜ் பெண் தனது தொலைபேசியை மட்டும் வைத்துக்கொண்டு, ஜோம்பிகள் நிறைந்த தனிமைப்படுத்தப்பட்ட நகரத்திலிருந்து தப்பிக்க வேண்டும்.
  • அக்டோபர் ஃபிலிம்ஸால் வழங்கப்படும் காம்ப்டன் ட்ரீம்ஸ், காம்ப்டனிலிருந்து வளர்ந்து வரும் மூன்று கலைஞர்களின் ஏற்றத் தாழ்வுகளைப் பின்தொடரும் ஒரு ஆவணத் தொடர் ஆகும்.
  • பனிம்/முர்ரேவால் வழங்கப்படும் ஸ்ட்ராண்டட் வித் சாம் அண்டு கோல்பி -இல், இரண்டு அமானுஷ்ய ஆய்வாளர்கள் யாராலும் கண்டுபிடிக்க முடியாத வகையில் சபிக்கப்பட்ட பென்சில்வேனியா நகரத்திற்குச் செல்கிறார்கள்.
தொலைபேசி வழி கதை சொல்லலின் எதிர்காலத்தை கட்டமைப்பதற்காக எங்களுடன் இணைந்த எங்களின் கூட்டாளர்களுக்கு நாங்கள் மிகவும் நன்றிக்கடன்பட்டவர்களாக இருக்கிறோம். நாங்கள் ஒன்றாக இணைந்து கட்டமைத்து வரும் புதிய வடிவம் வேலை செய்வதை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறோம்!
கடந்த ஆண்டில் மட்டும், Snapchat பயனர்கள் காட்சிகளைப் பார்ப்பதில் செலவிடும் நேரம் மூன்று மடங்காகியுள்ளது*. எண்ட்லெஸ் சம்மர் அதன் முதல் சீசனில் 28 மில்லியனுக்கும் அதிகமான தனிப்பட்ட பார்வையாளர்களைச் சென்றடைந்து வெற்றிபெற்றது**. மேலும் தி டெட் கேர்ள்ஸ் டிடெக்டிவ் ஏஜென்சி -ஐப் பொறுத்தவரை, அதன் முதல் எபிசோடைப் பார்த்துமுடித்த 40% -க்கும் மேலான பார்வையாளர்கள் முதல் சீசன் முழுவதையும் பார்த்தார்கள்***. இந்த இரண்டு Snap மூலங்களும், டீப் க்ரீக் -உம் புதுப்பிக்கப்பட்டுள்ளன, அவை இந்தக் கோடையில் திரும்பி வரும்!
ஸ்னாப் மூலங்களைக் கொண்டு, கிட்டத்தட்ட எங்கிருந்து வேண்டுமானாலும் பார்த்து அனுபவிக்கும் வகையில் அற்புதமான நிகழ்ச்சிகளை உருவாக்குகிறோம். வரவிருக்கும் மாதங்களில் புதிய தொடர்களையும் மேலும் பலவற்றையும் வெளியிட எங்களால் காத்திருக்க முடியாது! வரவிருக்கும் ஸ்னாப் மூலங்கள் பற்றி மேலும் இங்கே அறிக
நிகழ்ச்சிகளை ரசிக்கவும்!
Snap குழு
*Snap Inc. உள் தரவுகள். Q4 2017 சராசரி vs. Q4 2018 சராசரி
**Snap Inc. உள் தரவுகள். 10/1/18–3/22/19
*** Snap Inc. உள் தரவுகள் Q4 2018
Back To News