SPS 2021: New Tools and Monetization Opportunities for Creators

On Snapchat, everyone is a Creator.

Since launching Spotlight late last year, we have been thrilled to see the creativity of our community shared with an audience of millions . Spotlight is rolling out globally, and already reaches more than 125 million monthly active users. We continue to offer millions per month to reward Snapchatters for their creativity. To date, over 5,400 Creators have earned more than $130 million dollars!

Today, we’re announcing new tools and monetization opportunities to bring your creative ideas to life.
Snapchat-இல் அனைவருமே உருவாக்கிகள் தான்.
முழு சமூகத்தினருடனும் பகிர்ந்து கொள்ள ஒரு மகிழ்வான தருணத்தை படம்பிடித்து நீங்கள் ஒரு நண்பருக்கு ஒரு Snap-ஐ அனுப்புகிறீர்களோ அல்லது Snap மூலத்தில் நடித்திருந்தாலும் Snapchat அனைவருக்கும் தங்களை வெளிப்படுத்த வாய்ப்புகளை வழங்குகிறது.
கடந்த ஆண்டின் பிற்பகுதியில் ஸ்பாட்லைட்டை அறிமுகப்படுத்தியதிலிருந்து, எங்கள் சமூகத்தின் ஆக்கத்திறன் மில்லியன் கணக்கான பார்வையாளர்களுடன் பகிரப்படுவதைக் கண்டு நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். ஸ்பாட்லைட் உலகம் முழுவதும் அறிமுகப்படுத்தப்படுகிறது மற்றும் ஏற்கனவே 125 மில்லியன் செயலில் உள்ள பயனர்களை அடைந்துவிட்டது. Snapchat பயனர்களுக்கு அவர்களது ஆக்கத்திறனுக்கான ஒவ்வொரு மாதமும் மில்லயன் கணக்கில் பரிசுகள் வழங்குவதைத் தொடருகிறோம். இன்றைய தேதி வரை 5400 உருவாக்கிகள் $130 மில்லியன் டாலர்களுக்கு மேல் சம்பாதித்துள்ளனர்!
இப்போது நீங்கள் இணையதளத்திலிருந்து ஸ்பாட்லைட்டுக்கு நேரடியாக பதிவேற்றலாம் மற்றும் சிறந்த Snapகள் சிலவற்றைப் பார்க்கலாம்: Snapchat.com/Spotlight
உங்கள் ஆக்கத்திறன்மிக்க யோசனைகளை நனவாக்க நாங்கள் இன்று புதிய கருவிகள் மற்றும் வருமானம் பெறுவதற்கான வாய்ப்புகளை இன்று அறிமுகம் செய்கிறோம்.
Story Studio செயலி
இந்த ஆண்டின் பிற்பகுதியில் நாங்கள்Story Studio செயலியை அறிமுகப்படுத்துவோம். இது கைப்பேசிக்கான தொழில்ரீதியான உள்ளடக்கத்தை கைப்பேசியிலேயே உருவாக்கி திருத்துவதற்கான புதிய செயலியாகும். இது ஆக்கத்திறனை பெற, மேலும் மேம்பட்ட, வசீகரிக்கும் வீடியோக்களை Snapchat மற்றும் வேறு எங்கும்ஸ பகிர்ந்துகொள்ள விரைவான மற்றும் கேளிக்கை மிகுந்த வழியாகும். Story Srudio ios-இல் கிடைக்கும் மற்றும் அனைவருக்கும் இலவசமானது.
உருவாக்கிகளுக்காக கட்டமைக்கப்பட்டு, Story Studio அதிக சக்தி கொண்ட திருத்தும் கருவிகளை விரும்புவோருக்கு உள்ளடக்க உருவாக்கம் மற்றும் திருத்துவதை எளிதாக்குகிறது மற்றும் எல்லாவற்றையும் அவர்கள் தங்கள் கைப்பேசியிலேயே திருத்துவதற்கான வசதியை வழங்குகிறது Snapchat-இன் #தலைப்புகள், ஒலிகள் மற்றும் லென்ஸஸ்-இல் எவை பிரபலமாகின்றன என்பவை பற்றிய உள்நோக்குகள் ஆக்கத்திறனை தூண்டவும் உள்ளடக்கம் Snapchat சமூகத்துடன் இணக்கமாக இருக்கவும் உதவுகிறது. உங்கள் அடுத்த வீடியோவை உருவாக்க ஃபிரேமுக்கு ஃபிரேம் துல்லியமாக டிரிம் செய்தல், துண்டாக்குதல் மற்றும் வெட்டுதல் ஆகியவற்றுடன் தடையற்ற மாற்றங்களைச் செயற்படுத்தலாம்; சரியான தலைப்பு அல்லது ஸ்டிக்கரை வைக்கலாம்; Snap இன் உரிமம் பெற்ற இசை மற்றும் ஆடியோ கிளிப்களின் விரிவான பட்டியலிலிருந்து ஒலிகளுடன் சரியான பாடலைச் சேர்க்கலாம்; அல்லது அனைவரிடமும் பேசுபொருளாய் இருக்கும் சமீபத்திய Snapchat லென்ஸை பயன்படுத்தலாம்.
நீங்கள் உங்கள் செயல்திட்டங்களை பகிரத் தயாராகும் வரை அவற்றை சேமித்து திருத்துங்கள். பிறகு வெறும் ஒரு தட்டல் மூலம் உங்கள் முடிக்கப்பட்ட வீடியோவை நேரடியாக Snapchat-இல் இடுகையிடுங்கள். - அது உங்கள் கதையாக இருந்தாலும் அல்லது ஸ்பாட்லைட்டாக இருந்தாலும்.- அல்லது அந்த வீடியோவை உங்கள் கேமரா ரோலில் பதிவிறக்கலாம் அல்லது பிற நிறுவப்பட்ட செயலிகளில் திறக்கலாம்
பரிசளித்தல்
எங்கள் சமூகம் அவர்களின் விருப்பமான உருவாக்கிகளுக்கு ஆதரவளிக்க அனுமதிக்கும் புதிய அம்சத்தை நாங்கள் அறிமுகம் செய்கிறோம்: பரிசளித்தல் கதை பதில்கள் மூலம் பரிசுகள் அனுப்பப்படுகின்றன, மேலும் ரசிகர்கள் தங்களுக்குப் பிடித்த உருவாக்கிகளுக்கு ஆதரவைக் காண்பிப்பதையும் உருவாக்கிகள் தங்கள் ரசிகர்களுடன் ஆழ்ந்த தொடர்பை வளர்த்துக்கொள்வதையும் எளிதாக்குகின்றன. ஒரு சந்தாதாரர் தங்களுக்குப் பிடித்த Snap நட்சத்திரத்தி்டம் இருந்து தான் விரும்பும் ஒரு புகைப்படத்தைப் பார்க்கும்போது, பரிசை அனுப்ப மற்றும் உரையாடலைத் தொடங்க Snap டோக்கனைப் பயன்படுத்தலாம் கதை பதில்கள் மூலம் பெறும் பரிசுகளில் இருந்து வரும் வருமானத்தின் ஒரு பங்கை Snap நட்சத்திரங்கள் பெறுகிறார்கள். தனிப்பயனாகிக்கப்பட்ட வடிக்கட்டுதல்கள் மூலம் அவர்களுக்கு வரும் செய்தி வகைகளை Snap நட்சத்திரங்கள் கட்டுப்படுத்தலாம். இதனால் உரையாடகள் மரியாதைக்குரியவையாகவும் மகிழ்ச்சி மிகுந்ததாகவும் இருக்கும். கதைகள் மூலம் பரிசளிப்பது Snap நட்சத்திரங்களுக்கு Android மற்றும் iOS-இல் இந்த வருட இறுதியில் அறிமுகப்படுத்தப்படும்.
நாம் ஒன்றிணைந்து உருவாக்கிகள் வளர்ச்சியடையக் கூடிய சமூகத்தை கட்டமைக்கிறோம். நீங்கள் அடுத்து என்ன உருவாக்கப்போகிறீர்கள் என்பதைப் பார்க்க ஆவலாக உள்ளோம்!
Back To News