Snap Partner Summit: New Snap Originals

Made-for-mobile shows began with Snap Originals. Today, we’re excited to reveal our new slate of shows made exclusively for Snapchat! For the first time, Snapchatters can become part of the show.
Snap மூலங்களில் மொபைலுக்காகத் தயாரிக்கப்பட்ட நிகழ்ச்சிகள் தொடங்கப்பட்டுள்ளன. இன்று Snapchat இற்காகத் தனித்துவமாகத் தயாரிக்கப்பட்ட எங்கள் புதிய நிகழ்ச்சிகளை வெளிப்படுத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்!
Snap மூலங்களை அமெரிக்க ஜென் இசட் மக்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் பார்க்கிறார்கள்*. கதைகள் சொல்லப்பட்ட விதம் மட்டுமன்றி, நம் சமூகத்தின் பரந்த அளவிலான உணர்வுகள், அனுபவங்கள், குரல்களைப் பிரதிபலிக்கும் கதைகளின் வகைகளும், Snap மூலங்களை மிகவும் தனித்துவமானதாக்குகிறது.
மேலும் முதல் முறையாக, நிகழ்ச்சியில் Snapchat பயனர்கள் பங்கெடுக்கலாம்!
Snapchat இல் மட்டுமே சாத்தியமாகும் ஆழ்த்துகை (முப்பரிமாண உணர்வு) நிகழ்ச்சிகளை வழங்குவதற்காக எங்கள் தனித்துவமான மிகைப்படுத்தப்பட்ட மெய்மைத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துகிறோம். "மூவ் இட்" -இல் உலகின் சிறந்த நடனக் கலைஞர்கள் சிலரிடமிருந்து சமீபத்திய நடன நகர்வுகளை நீங்கள் இப்போது கற்றுக்கொள்ளலாம், இது உங்கள் ஒவ்வொரு அடியையும் தொடர்வதற்காக Snap-இன் தனிப்பயனாக்கப்பட்ட அசைவு கண்காணிப்பு லென்ஸஸைப் பயன்படுத்துகிறது.
உங்களுக்காக வரவிருக்கும் அற்புதமான புதிய நிகழ்ச்சிகளைப் பாருங்கள்:
கதை எழுத்து வடிவற்றது
  • பயிற்சியாளர் கெவ் - (லாஃப் அவுட் லவுட்) - தனது சொந்த அனுபவங்களால் ஊக்குவிக்கப்பட்ட Kevin Hart, உங்கள் பயிற்சியாளராகவும், சிறந்த நண்பராகவும், வழிகாட்டியாகவும் இருப்பார், ஏனெனில் அவர் சிறந்த வாழ்க்கையை வாழ விரும்பும் எவருக்கும் தினசரி நேர்மறை எண்ணங்களையும் ஞானத்தையும் பகிர்கிறார்.
  • ஃபேக் அப் - (மிஷன் கண்ட்ரோல் மீடியா) - சிறந்த காட்சி மாயை அலங்காரக் கலைஞர்கள் தங்கள் சொந்த முகங்களையே, நேரில் பார்த்தால் மட்டுமே நம்பக்கூடிய அளவிற்கான ஒரு கலைப் படைப்புகளாக மாற்றுவதற்காகப் போராடுகிறார்கள். நிகழ்ச்சியின் மாயைகளுக்கு உயிர்ப்பூட்டும் தனிப்பயன் லென்ஸஸை முயற்சிக்கும்போதும் இயக்கும்போதும் கலைஞர்களின் படைப்பை முன் எப்போதும் இல்லாத வகையில் அனுபவியுங்கள்.
  • மூவ் இட் - (ஸ்டெலர் ஸ்டுடியோஸ் மற்றும் லிட்டில் எஞ்சின் புரொடக்ஷன்ஸ்) - இது மிகப்பெரிய நடனக் கலைஞர்கள், தரவரிசையில் முதலிடம் பிடித்தப் பாடல்கள் மற்றும் Snapchat -இன் AR கேமரா இயங்குதளத்தை ஒன்றாகக் கொண்டுவருகிறது, இதன் வகையிலேயே முதலாவதான அற்புதமான நடன நிகழ்ச்சியான இது, எவ்வாறு நடனமாடுவது என்று எவருக்கும் ஊக்கமளித்துக் கற்பிக்கும்!
ஆவணத் தொடர்
  • ரோட் ட்ரிப்பின்' - (பனிம்/முர்ரே புரொடக்ஷன்ஸ்) - Anthony Anderson தயாரித்த இந்த ஆவணத் தொடர், நெருங்கிய நண்பர்களும் நட்சத்திரப் படைப்பாளர்களுமான Rickey Thompson மற்றும் Denzel Dion ஆகியோர் அவர்களின் சௌகரியமான நிலையிலிருந்து வெளியேறி, சில புதிய சாகசங்களைப் பகிர்ந்து கொள்வதற்காக, அமெரிக்கக் கிராமப்புறம் முழுவதும் ஒரு சாலைப் பயணத்தை மேற்கொள்கின்றனர்.
  • ஃபர்ஸ்ட் பெர்சன் - (ஹாஷ்டாக் அவர் ஸ்டோரீஸ்) - நேர்மறையான மாற்றத்தை உண்டாக்கும் அசாதாரணமான இளம் கண்டுபிடிப்பாளர்கள் நம் கிரகத்தைப் பாதுகாக்கப் போராடுகையில் அவர்களின் கண்களின் வழியே Snapchat Spectacles -ஐப் பயன்படுத்திச் சொல்லப்பட்ட கதைகள்.
  • குயின் ஆஃப் ஸ்டைல்ஸ் - (க்லாஸ் எண்டர்டெயின்மென்ட் குரூப்) - ஹாலிவுட்டின் மிகப் பெரிய பிரபலங்களின் கவனத்தை ஈர்ப்பது மற்றும் மிகவும் விரும்பப்படும் மற்றும் மிகவும் வேண்டப்படும் வாடிக்கையாளர்களைப் பெறுவதில், டோக்கியோ ஸ்டைல்ஸ் போல வெற்றிபெற்ற சிகை அலங்கார நிபுணர் வேறு யாருமில்லை.
  • லைஃப் பை தி ஹார்ன்ஸ் - (21ஸ்ட் ஸ்ட்ரீட் க்ரியேடிவ்) - ஒரு கௌபாய் ஆக விதிக்கப்பட்ட 22 வயதான Ezekiel Mitchell, உலகின் சிறந்த காளை சவாரி செய்பவராகும் 35 ஆண்டுகளில் அந்தப் பட்டத்தை வென்ற முதல் ஆப்பிரிக்க-அமெரிக்கராகவும் ஆவதற்கான வாழ்வா சாவா என்ற பயணத்தில் அவரைப் பின்தொடருங்கள்.
கதை எழுத்து வடிவில் அமைந்தவை
  • ஃப்ராக்டவுன் - (ஆல்கன் டெலிவிஷன் க்ரூப்) - Catherine Hardwicke (ட்விலைட், தர்டீன்) இயக்கிய இந்தத் தொடரில், தனது காரில் வசித்து வரும் ஒரு உறுதியான ஸ்கேட்டர், கிழக்கு லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள ஃப்ராக்டவுன் ஸ்கேட்பார்க்கில் உள்ள பெண் குழுவினருடன் சேரும்போது, இரண்டாவது குடும்பத்தைப் பெறுகிறார்.
  • ஆக்ஷன் ராயல் - (போர்ட்டல் A) - வயது வந்தவர்களுக்கான இந்தத் த்ரில்லரில், ஒரு டீனேஜர் தனது தந்தையின் கடன்களை அடைப்பதற்காக ஒரு இரகசியமான மின் விளையாட்டு சூதாட்டக் குழுவைத் தொடங்குகிறார், ஆனால் அவரும், விளையாட்டு நிகழ்வின் அவரது நெருங்கிய நண்பரும் விரைவில் ஒரு ஆபத்தான அதிகச் சவால் நிறைந்த உலகைத் தாங்கள் எதிர்கொள்ள இருப்பதை அறிகிறார்கள்.
  • டோடல் பேட்டாஸ் ரெஸ்லிங் - (காமெடி பேங்! பேங்! புரொடக்ஷன்ஸ்) - இந்த நகைச்சுவையில், ஒரு அப்பாவியான ஆனால் கவர்ந்திழுக்கும் தன்மையுடைய இளம் மல்யுத்த வீரர் ஒரே இரவில் பிரபலமடைகிறார், அனைவராலும் மறக்கப்பட்ட ஒரு தொழில்முறை மல்யுத்த வீரர் இவரால் ஈர்க்கப்பட்டுத் தனது வழிகாட்டலை வழங்குகிறார், புத்தம் புதிய குழந்தையைத் தனது மீதான கவனத்தை மீண்டும் பெறுவதற்கான ஒரு வழியாகவும் பயன்படுத்துகிறார்.
கூடுதலாக, நாங்கள் பின்வரும் Snap மூலங்களைப் புதுப்பிப்போம்: ஹூக்டுடன் இணைந்து பஸெலெவ்ஸால் வழங்கப்படும் "டெட் ஆஃப் நைட்", NBCயுனிவர்சலால் வழங்கப்படும் "ஃபேஸ் ஃபார்வர்டு", இதில் பார்வையாளர்களைத் தங்கள் பிரபலங்களின் தயாரிப்புமுறைக்காக எபிசோடில் வைக்கும் முற்றிலும் புதிய AR லென்ஸ் அனுபவம் இடம்பெற்றுள்ளது, ITV அமெரிக்கா’ஸ் சைரென்ஸ் மிடியாவால் வழங்கப்படும் "நிகிதா அன்ஃபில்டர்டு"மற்றும் கெட்ட பெயரெடுத்த MMA ஃபைட்டர் Conor McGregor -இன் கதையைச் சொல்லும் "Vs தி வேர்ல்டு"என்ற Snap -இன் ஆவணப்பட ஃப்ரான்சைஸின் அடுத்த பாகத்தையும் காம்ப்ளக்ஸ் மீண்டும் தயாரிக்கிறது.
நீங்கள் இவற்றுடன் இணைய நாங்கள் காத்திருக்கிறோம்!
*Snap Inc. உள் தரவுகள் டிசம்பர் 2019-பிப்ரவரி 2020. ஜென் இசட் பயனர்களின் வயது 13-24 என வரையறுக்கப்படுகிறது. அமெரிக்க மக்கள் தொகை கணக்கெடுப்பு புள்ளிவிவரங்கள் அமெரிக்க ஜென் இசட் மக்கள் தொகைக்காகப் பயன்படுத்தப்படுகின்றன।
Back To News