SPS 2021: Partnering to Restore the Wild

At Snap we’re always thinking about new ways that we can use our platform to make a positive impact in the world, and we’re determined to operate our business within Earth’s planetary boundaries.

Today we’re announcing a new partnership with Re:wild to support restoration efforts in areas that have been devastated by California’s wildfires and help revitalize the region’s biodiversity.
Snap-இல், உலகில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்த எங்கள் தளத்தைப் பயன்படுத்தக்கூடிய புதிய வழிகளைப் பற்றி நாங்கள் எப்போதும் சிந்திக்கிறோம், மேலும் இந்த கிரகம் முழுவதிலும் எங்கள் வணிகத்தை இயக்குவதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.
கலிஃபோர்னியாவின் காட்டுத்தீயால் பேரழிவிற்குள்ளான பகுதிகளில் மறுசீரமைப்பு முயற்சிகளை ஆதரிப்பதற்கும் அந்தப் பகுதியின் பல்லுயிர் பெருக்கத்திற்கு புத்துணர்வளிக்க உதவுவதற்கும் இன்று நாங்கள் Re:wild உடன் புதிய கூட்டாண்மையை அறிவிக்கிறோம்.
Re:wild, National Park Service மற்றும் Santa Monica Mountains Fund ஆகியவற்றுடன் இணைந்து, 2018 வூல்ஸி மற்றும் 2013 வசந்தகால காட்டுத்தீக்களால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் 10,000 பூர்வீக மரங்களையும் 100,000 தாவரங்களையும் நடவு செய்ய முதலீடு செய்கிறோம்.
இந்த இலையுதிர் காலத்தில் பயன்பாட்டிசெயலியின் உள் உள்ள விழிப்புணர்வு பிரச்சாரத்துடன் எங்கள் முயற்சிகளை விரிவுபடுத்துகிறோம், இதில் எங்கள் Discover தளத்தின் மூல உள்ளடக்கம் மற்றும் சூழலைப் பற்றி மேலும் அறிய உங்களுக்கு உதவும் AR அனுபவங்கள் மற்றும் மறுசீரமைப்பு முயற்சிகளுக்கு நீங்கள் எவ்வாறு உதவ முடியும் என்பனவை அடங்கும்..
இந்த கூட்டாண்மை மிகவும் நிலையான எதிர்காலத்தை உருவாக்க எங்கள் பங்கைச் செய்கிறோம் என்பதை உறுதி செய்வதற்கான எங்கள் முயற்சிகளை கட்டமைக்கிறது. சமீபத்தில் வெளியிடப்பட்ட எங்கள் வருடாந்திர CitizenSnap அறிக்கையில், வரலாற்று மற்றும் எதிர்கால உமிழ்வுகளுக்கு கார்பன் நடுநிலையாக மாறுதல், அறிவியல் அடிப்படையிலான இலக்குகளை நிர்ணயிப்பதன் மூலம் நமது பசுமைக்குடில் உமிழ்வைக் குறைத்தல் மற்றும் உலகளவில ்Snap-இன்் வசதிகளுக்காக 100 சதவீத புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தை வாங்குவது உள்ளிட்ட எங்கள் காலநிலை உத்தியின் விவரங்களை நாங்கள் பகிர்ந்து கொண்டோம்.
சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கான எங்கள் பொறுப்பானது, நாங்கள் தொடர்ந்துநம் சமூகத்தை ஆதரிப்பதற்கும், நாம் பகிர்ந்து வாழும் இந்த கிரகத்தைப் பராமரிப்பதற்கும் ஒரு வழியாகும். நம் சுற்றுச்சூழலைப் பரமரிப்பது உங்களின் முக்கிய முன்னுரிமை என்பதை நாங்கள் அறிவோம். அதனால் இந்த முயற்சிகள் எங்களுக்கு உற்சாகம் அளிக்கின்றன.
இந்த வருடம் எங்களின் உறுதிப்பாடு எங்கள் வருடாந்திர Snap கூட்டாளர் உச்சி மாநாட்டில் மெய்நிகர் சூழலை உருவாக்க ஊக்கமளித்தது. இந்த மாநாடானது எங்களின் அற்புதமான அனைத்துக் கூட்டாளர்களின் வெற்றியையும் கொண்டாடி மகிழ்வதற்காகும். ஆக்மெண்டட் யதார்த்தத்தின் மூலம், தேசிய காடுகள் மற்றும் மாநில பூங்காக்களால் மூலம் ஊக்கம் பெற்ற ஒரு 3D காட்சியை நாங்கள் உருவாக்கி, நமது கிரகத்தின் வாழ்வின் பன்முகத்தன்மைக்கு பங்களிக்கும் இந்தப் பகுதிகளின் பல்லுயிர்பெருக்கத்தை கௌரவிக்கிறோம். Rewild-உடன் கூட்டம்மைத்ததன் மூலம் Snapchat பயனர்கள் எங்கிருந்தாலும் அங்கிருந்தே காட்டின் காட்சிகளையும் ஒலிகளையும் கண்டறிவதை ஊக்குவிக்க 360 world lens-ஐயும் நாங்கள் உருவாக்கினோம். சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கான எங்கள் பொறுப்பானது, நாங்கள் தொடர்ந்துநம் சமூகத்தை ஆதரிப்பதற்கும், நாம் பகிர்ந்து வாழும் இந்த கிரகத்தைப் பராமரிப்பதற்கும் ஒரு வழியாகும். ஒரு சிறப்பான எதிர்காலத்தை உருவாக்க உங்களுடன் சேர்ந்து பணிபுரிவதற்கு காத்திருக்கிறோம்!
Back To News