“பிளேயிங் பாம்பிடோ": கிறிஸ்டியன் மார்க்லே மற்றும் Snap-இன் AR ஸ்டுடியோ தி சென்டர் பாம்பிட்டோவை ஒரு இசைக்கருவியாக மாற்றுகிறது

இன்று முதல் பிப்ரவரி 27, 2023 வரை காட்சிப்படுத்தப்படும் கிறிஸ்டியன் மார்க்லேயின் “ஆல் டுகெதர்” கண்காட்சியின் போது, பாரிஸில் உள்ள சென்டர் பாம்பிடோ மற்றும் Snapchat புதிய AR அனுபவமான “பிளேயிங் பாம்பிடோ”-ஐ வழங்குகின்றன. இது அருங்காட்சியக பார்வையாளர்களை கிறிஸ்டியன் மார்க்லேயின் ஒலி பிரபஞ்சத்தில் மூழ்கித் திளைக்க அனுமதிக்கிறது.!
இன்று முதல் பிப்ரவரி 27, 2023 வரை காட்சிப்படுத்தப்படும் கிறிஸ்டியன் மார்க்லேயின் “ஆல் டுகெதர்” கண்காட்சியின் போது, பாரிஸில் உள்ள சென்டர் பாம்பிடோ மற்றும் Snapchat புதிய AR அனுபவமான “பிளேயிங் பாம்பிடோ”-ஐ வழங்குகின்றன. இது அருங்காட்சியக பார்வையாளர்களை கிறிஸ்டியன் மார்க்லேயின் ஒலி பிரபஞ்சத்தில் மேலும் மூழ்கித் திளைக்க அனுமதிக்கிறது.!
பிளேயிங் பாம்பிடோ
தி சென்டர் பாம்பிட்டோவின் வெளிப்புறத்தை அனிமேஷன் செய்ய Snap இன் தனியுரிம பரிச்சயமான இடம் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, கிறிஸ்டியன் மார்க்லே மற்றும் பாரிஸில் உள்ள Snap AR ஸ்டுடியோ ஆகியவை கட்டிடத்தின் முகப்பை ஒரு இசைக்கருவியாக மாற்றியுள்ளன.
தங்களின் ஸ்னாப்சாட் கேமரா மூலம், பார்வையாளர்கள் "பிளேயிங் பாம்பிடோ"வை ஒலிக்கச் செய்யலாம், இது தி சென்டர் பாம்பிடோ கட்டிடத்திற்குள் கிறிஸ்டியன் மார்க்லே கண்டறிந்த இயற்கை ஒலிகளைக் கொண்ட ஊடாடும் ஆடியோ மற்றும் காட்சி AR அனுபவமாகும். Snapchat பயனர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளக்கூடிய தனிப்பயனாக்கப்பட்ட இசை சுழற்சியை உருவாக்கு முடியும். தி சென்டர் பான்பிட்டோவின் Snapchat சுயவிவரத்தில் உள்ள லென்ஸஸ் வழியாகவும் அல்லது தி சென்டர் பாம்பிடோவின் கண்காட்சி இணையதளத்தில் QR குறியீட்டை ஸ்கேன் செய்வதன் மூலமாகவும் அனுபவத்தின் பதிப்புகளை தி சென்டர் பாம்பிட்டோவின் முன்பிருந்தும் மற்றும் எங்கிருந்தும் அணுக முடியும்.
"காட்சி சார்ந்த இணைப்பு நிஜமாக்கம் அனுபவத்திற்கு கூடுதலாக, Snapchat பயனர்களுக்கு ஒரு கேட்பொலி அனுபவம் இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அருங்காட்சியகத்தில் நான் பதிவு பதிவுசெய்த ஒலிகளின் கலவையை இசைக்க மற்றும் அவற்றை வைத்து இசையமைக்க அவர்களுக்கு அழைப்புவிடுக்கிறேன். பொதுவில் அவர்கள் இசையுடன் சம்மந்தப்படுத்திப் பார்க்காத ஒலிகள்.' - கிறிஸ்டியன் மார்க்லே
"கிறிஸ்டியன் மார்க்லே மற்றும் பிரான்சின் மிகவும் பிரபலமான நவீன நிறுவனம் தி சென்டர் பாம்பிட்டோவுடன் AR ஸ்டுடியோ இணைவது என்பது பெருமைமிக்கடாகும். ஒவ்வொரு நாளும் 250 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் Snapchat இல் இணைப்பு நிஜமாக்கத்தில் ஈடுபடுகிறார்கள், மேலும் இந்தக் கூட்டணியின் மூலம், ஒரு முன்னோடி கலைஞரின் பார்வையையும், இணைப்பு நிஜமாக்கம் வழங்கும் சாத்தியக்கூறுகளையும் முடிந்தவரை தளத்தில் உள்ளவருக்கும் மற்றும் உலகெங்கும் உள்ள பலருக்கும் வழங்க விரும்புகிறோம்.. " - Snapchat AR ஸ்டுடியோவின் இயக்குனர் டொனேஷியன் போசோன்
செய்திகளுக்குத் திரும்புக