Snap Partner Summit | Plug in to Snap Kit

To date, more than 200 apps have integrated with Snap Kit, powering all sorts of unique experiences that bring some of Snapchat’s most popular features to partner applications, and allow Snapchatters to create Snaps using creative tools built by our partners. Today we’re excited to announce new Snap Kit experiences.
இன்றுவரை, 200 க்கும் மேற்பட்ட செயலிகள் Snap கிட்டுடன் ஒருங்கிணைந்துள்ளன, இது Snapchat மிகவும் பிரபலமான சில அம்சங்களை கூட்டாளர் பயன்பாடுகளுக்குக் கொண்டுவரும் அனைத்து வகையான தனிப்பட்ட அனுபவங்களையும் இயக்குகிறது, மேலும் எங்கள் கூட்டாளர்களால் உருவாக்கப்பட்ட ஆக்கபூர்வமான கருவிகளைப் பயன்படுத்தி Snapchat பயனர்களை Snaps உருவாக்க அனுமதிக்கிறது.
இன்று புதிய Snap கிட் அனுபவங்களை அறிமுகம் செய்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்:
செயலி கதைகளை அறிமுகம் செய்கிறோம்
செயலி கதைகள் Snapchat பயனர்களை Snapchat கேமராவிலிருந்து மற்றொரு செயலிக்குள் உள்ள ஒரு கதைக்கு உள்ளடக்கத்தைப் பகிர அனுமதிக்கின்றன.
  • உங்கள் Tinder சுயவிபர பக்கத்தில் உள்ள ஒரு கதையில் உங்களது மறைந்திருக்கும் திறமை குறித்த Snap -ஐப் பகிருங்கள்.
  • Houseparty இல் உள்ள ஒரு கதையில் உங்களது நாளைக் குறித்த Snap -ஐப் பகிருங்கள்.
  • அடுத்தமுறை உங்களுடன் சேர வாடிக்கையாளர்களை ஊக்குவிப்பதற்காக AdventureAide இல் உங்கள் சமீபத்தில் பயணம் குறித்த Snap -ஐப் பகிருங்கள்.
ஆக்கப்பூர்வக் கிட்
உரையாடல் என்பது பெரும்பாலும் உள்ளடக்கம் மற்றும் நீங்கள் அக்கறை கொள்ளும் விஷயங்களைப் பற்றியது. விரைவில் Snap-இல் உங்களுக்குப் பிடித்த சேவைகளிலிருந்து தனிப்பயன் ஸ்டிக்கர்களை ஒரு நொடியில் பகிர்ந்து கொள்ள முடியும் என்பதை அறிவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.
  • நீங்கள் பார்க்கும் நிகழ்ச்சியைப் பகிர்வதற்கு Netflix -ஐப் பயன்படுத்துங்கள்.
  • நீங்கள் கேட்டுக்கொண்டிருக்கும் பாட்காஸ்ட்டைப் பகிர்வதற்கு Breaker அல்லது Anchor -ஐப் பயன்படுத்துங்கள்.
  • நீங்கள் விரும்பும் பாடலைப் பகிர்வதற்கு Anghami (மத்தியக் கிழக்கு நாடுகளில்) அல்லது JioSavvn (இந்தியாவில்) பயன்படுத்துங்கள்.
  • ஒரு அர்த்தமுள்ள நோக்கத்தைப் பகிர்வதற்கு GoFundMe -ஐப் பயன்படுத்துங்கள்.
  • Snapchat -இல் உங்கள் நண்பர்களுடனான அழகான புகைப்படத்தைப் பகிர்வதற்கு VSCO -வைப் பயன்படுத்துங்கள்.
இந்த ஒருங்கிணைப்புகளில் பலவற்றைக் கொண்டு, நண்பர்கள் பார்ப்பதற்கும், கேட்பதற்கும், அவர்களாகவே தானம் செய்வதற்கும் ஸ்வைப் செய்தால் போதும்!
Bitmoji கிட்
Bitmoji கிட் நம் சமூகம் அவர்களின் Bitmoji -ஐ அவர்களுடன் மேலும் பல இடங்களுக்கு கொண்டு வர உதவுகிறது.
  • Venmo -வில் உங்கள் செலுத்துகைகளுக்குச் சூழலைச் சேர்க்க Bitmoji -ஐப் பயன்படுத்துங்கள்.
  • Fitbit உடன் நீங்கள் செல்லும் போது, உங்கள் மணிக்கட்டில்,Bitmoji -இன் எதிர்வினையைப் பாருங்கள். அது தான் சுயச் செயலூக்கம்!
விளம்பர கிட்டை அறிமுகம் செய்கிறோம்
விளம்பர கிட் வடிவமைப்பாளர்கள் எங்கள் புதிய Snap பார்வையாளர்கள் நெட்வொர்க்கை அணுகவும், எங்கள் பிரபலமான மொபைல் விளம்பர வடிவமைப்பான Snap விளம்பரங்களை அவர்களின் செயலிகளுக்கு கொண்டு வரவும் அனுமதிக்கிறது. இது எங்கள் கூட்டாளர்கள் வளர உதவும், மேலும் விளம்பரதாரர்களுக்கு Snapchat சமூகத்தை அடைய புதிய வழிகளை வழங்கும்.
இன்று முதல் SnapKit.com -இல் விளம்பர கிட் மற்றும் செயலி கதைகளுக்கான (கதை கிட்டின் ஒரு பகுதி) விண்ணப்பங்களை நாங்கள் ஏற்கிறோம்.
ஹேப்பி ஸ்‌னாப்பிங்!
Back To News