Protecting your Privacy

There’s been some confusion about the updated Privacy Policy and Terms of Service we rolled out last week. We never want to create any misunderstanding over our commitment to protecting your privacy.
கடந்த வாரம் அறிமுகப்படுத்திய புதுப்பிக்கப்பட்ட தனியுரிமைக் கொள்கை மற்றும் சேவை நிபந்தனைகள் பற்றி சில குழப்பங்கள் நிலவுகின்றன. உங்கள் தனியுரிமையைப் பாதுகாக்கும் எங்கள் உறுதிப்பாடு குறித்து எவ்வித தவறான புரிதல்களையும் உருவாக்க நாங்கள் ஒருபோதும் விரும்பியதில்லை.
முதலில் தெளிவுபடுத்த விரும்புவது: நீங்கள் உங்கள் நண்பர்களுக்கு அனுப்பும் Snapகளும் அரட்டைகளும் புதுப்பிப்பிற்கு முன்பு இருந்ததைப் போலவே இப்போதும் தனிப்பட்டதாக இருக்கின்றன. அந்தச் செய்திகள் "பார்க்கப்பட்டன அல்லது காலாவதியாகின என்பதை நாங்கள் கண்டறிந்ததும், அவை தானாகவே எங்கள் சேவையகங்களிலிருந்து நீக்கப்படுகின்றன" என்று முன்பு கூறியதைப் போன்றே எங்கள் தனியுரிமைக் கொள்கை தொடர்ந்து கூறுகிறது. பெறுநரால் உங்கள் Snapகள் அல்லது அரட்டைகள் எப்போதும் போல் ஸ்க்ரீன்ஷாட் எடுக்கவோ சேமிக்கவோ முடியும். முக்கியமான விடயம் என்னவெனில் Snapchat உங்கள் தனிப்பட்ட Snapகள் அல்லது அரட்டைகளைச் சேமிக்காது — ஒருபோதும் சேமித்துவைத்திருக்கவில்லை. படிக்கப்பட்டவுடன் எங்கள் சேவையகங்களிலிருந்து அவற்றைத் தொடர்ந்து நீக்குவதால், அவற்றை விளம்பரதாரர்களுடனோ வணிகக்கூட்டாளர்களுடனோ எங்களால் பகிர முடியாது — நாங்கள் பகிர்வதும் இல்லை.
எங்கள் சேவை நிபந்தனைகள் நீங்கள் உருவாக்கும் உள்ளடக்கத்தைப் பயன்படுத்த எங்களுக்கு விரிவான உரிமத்தை வழங்குகின்றன—எங்களைப் போன்ற சேவைகளுக்கு இதுபோன்ற உரிமம் வழக்கமானது தான். இதுபோன்ற நிகழ்வுகளுக்காக எங்களுக்கு அந்த உரிமம் தேவைப்படுகிறது, உதாரணமாக நேரலைக் கதைகளுக்கு சமர்ப்பிக்கப்பட்ட கதைகளை, உலகம் முழுவதும் காண்பிக்க வேண்டியுள்ளது —அவற்றை மறுஇயக்க அல்லது ஒருங்கிணைக்க வேண்டியுள்ளது (எங்கள் விதிமுறைகள் மற்றும் தனியுரிமைக் கொள்கைகளின் முந்தைய பதிப்புகளில் இதைக் கூறியுள்ளோம்). ஆனால் தனியுரிமைக் கொள்கையும் செயலியிலுள்ள உங்கள் சொந்தத் தனியுரிமை அமைப்புகளும் அந்த உரிமத்தின் நோக்கத்தைக் கட்டுப்படுத்த முடியும் என்பதில் தெளிவாக உள்ளோம் எனவே உங்கள் தனிப்பட்ட தகவல்தொடர்புகள் தொடர்ந்து தனிப்பட்டதாகவே இருக்கும்.
தனியுரிமைக் கொள்கையையும் பயன்பாட்டு நிபந்தனைகளையும் நாங்கள் திருத்தியது ஏன் என்று நீங்கள் வியப்படையலாம். சில முக்கியக் காரணங்கள் இதோ:
  • நிபந்தனைகள் மற்றும் தனியுரிமைக் கொள்கையை மீண்டும் எழுதுவதே நாங்கள் செய்த முக்கிய விஷயம், இதனால் மக்கள் உண்மையில் பேசும் விதத்திலேயே படிப்பார்கள். நாங்கள் எப்போதும் எங்கள் சமூகத்துடன் வெளிப்படையாகவும் தெளிவாகவும் இருக்க முயற்சிக்கிறோம்.
  • செயலி கொள்முதல் தொடர்பான சேவை விதிமுறைகளில் மொழியைச் சேர்த்துள்ளோம். நாங்கள் இதை இப்போதே செய்ய வேண்டும் ரீப்ளேக்களை விற்பனை செய்கிறோம் - மேலும் வேறு சில சிறந்த தயாரிப்புகள் மற்றும் சேவைகளை விரைவில் உங்களிடம் கொண்டு வர எதிர்நோக்கியிருக்கிறோம்.
  • நண்பர்கள் உங்களை Snapchatஇல் கண்டுபிடிப்பதை சற்று எளிதாக்குவதற்கு, பிற Snap பயனர்களுக்கு உங்கள் தகவகளில் — பெயர் போன்றவை —என்ன தெரியும் என்பதையும், அந்த தகவலை நீங்கள் எவ்வாறு மாற்றலாம் என்பதை நாங்கள் தெளிவுபடுத்தியுள்ளோம்.
சேவை நிபந்தனைகள், தனியுரிமைக் கொள்கை இரண்டுமே முக்கியமான ஆவணங்களாகும், எனவே அனைத்து Snapchat பயனர்களையும் அவற்றைப் படிக்க ஊக்குவிக்கிறோம். கூடுதல் தகவலுக்கு Snapகளும் அரட்டைகளும் எப்போது நீக்கப்படுகின்றன? போன்ற கட்டுரைகள் உள்ளிட்ட, Snapchat வாடிக்கையாளர் சேவை மற்றும் எங்கள் சமூக வழிகாட்டுதல்களைப் பாருங்கள்.
Back To News