Putting the Chat into Snapchat

Until today, we felt that Snapchat was missing an important part of conversation: presence. There’s nothing like knowing you have the full attention of your friend while you’re chatting. We could not be more thrilled to announce Chat.
Snapchat-ஐ உருவாக்குவது உரையாடலை எது சிறப்பானதாக்குகிறது என்பது பற்றி எங்களுக்கு நிறைய கற்றுக் கொடுத்துள்ளது. மறைந்து போகும் படங்களைப் பகிர்வதற்கான செயலியில் நாங்கள் முதலில் பணியாற்றத் தொடங்கியபோது, நாங்கள் எவ்வளவு கற்போம் என்று எங்களுக்குத் தெரியாது. எப்போதும் ஸ்க்ரீன்ஷாட் எடுக்க முடியும் என்பதை எங்கள் வகுப்புத் தோழர்கள் விரைவாகச் சுட்டிக் காட்டினர். இது இயல்புநிலையில் நீக்குதல் என்ற சிந்தனைக்கு எங்களை இட்டுச் சென்றது – உங்களுக்குப் பிடித்ததை வைத்துக் கொள்ளுங்கள், மீதமுள்ள அனைத்தையும் நாங்கள் அகற்றுவோம்!
காட்சியாக இருக்கும் உரையாடல் நன்றாக இருப்பதையும் அறிந்துகொண்டோம். எனவே Snapchat ஐத் தொடங்கும் ஒவ்வொரு முறையும் உங்களை நேராக கேமராவிற்கு அழைத்துச் செல்லத் தீர்மானித்தோம். இதுவே உங்கள் ஸ்மார்ட்போனில் தருணத்தைப் பிடிக்கவும் பகிரவும் மிக விரைவான வழி.
எங்கள் கடைசி புதுப்பிப்பில் கதைசொல்லுதலின் உண்மை இயல்பைப் பெருமைப்படுத்தியுள்ளோம் – ஒவ்வொரு கதையும் காலவரிசை முறையாக உள்ளது – தொடக்கம், நடு, இறுதி. விவரிப்புகளை உருவாக்கவும் ஒரே தட்டில் நண்பர்கள் அனைவருடனும் பகிரவும் Snapchat பயனர்களுக்கு உதவுவதற்காக கதைகளை உருவாக்கியுள்ளோம்.
ஆனால் உரையாடலின் ஓர் முக்கியப் பகுதி Snapchat இல் இல்லை என இன்று வரை உணர்ந்தோம்: இருத்தல்தன்மை. அரட்டையடிக்கும்போது உங்கள் நண்பரின் முழுக்கவனமும் உங்கள் மீதுள்ளது என்பதை அறிவதைப் போன்ற எதுவுமில்லை.
அரட்டையை அறிவிப்பதில் மிகுந்த உற்சாகமடைகிறோம்.
அரட்டையைத் தொடங்க உங்கள் Snapchat இன்பாக்சில் உங்கள் நண்பரின் பெயரை வலப்பக்கம் ஸ்வைப் செய்யுங்கள். அரட்டைத் திரையை விட்டு வெளியேறும்போது, உங்களாலும் உங்கள் நண்பராலும் பார்க்கப்பட்ட செய்திகள் நீக்கப்படும் – ஆனால் நீங்கள் வைத்திருக்க விரும்புவற்றை (முகவரிகள், செய்ய வேண்டியன போன்றவை) சேமிக்க எப்போதும் தட்டலாம் அல்லது ஸ்க்ரீன்ஷாட் எடுக்கலாம்!
உங்கள் அரட்டைக்கு நண்பர் ஒருவர் வந்தால் உங்களுக்குத் தெரிவிப்போம் எனவே நீங்கள் ஒருவருக்கொருவர் முழுக்கவனம் கொடுக்க முடியும். நீங்கள் இருவருமே இங்கிருந்தால் நேரலை வீடியோவைப் பகிர அழுத்திப் பிடியுங்கள் – நேருக்கு நேர் உரையாடுங்கள்!
Back To News