Recent Additions to Team Snapchat

Snapchatters are sharing over 200 million snaps every day. And thanks to our incredible and hardworking team, we’ve been able to support the growth of Snapchat with minimal overhead. But in order to continue scaling while developing the Snapchat experience, we needed to build a bigger engineering team and figure out how to pay our server bills.
2011 ஆம் ஆண்டு செப்டம்பரில் Snapchat ஐத் தொடங்கிய போது எங்களுக்கு விருப்பமான ஒன்றை உலகுடன் பகிர்ந்து கொள்ளத் தயாராக இருந்தோம். நாங்கள் எங்கள் நண்பர்களுடன் தொடர்பு கொள்ள ஒரு வித்தியாசமான வழியை உருவாக்கியிருந்தோம் - அது மிகவும் தனிப்பட்டதாகவும் வேடிக்கையானதாகவும் இருந்தது. உலகமும் அதனை விரும்பும் என நம்பினோம்.
அதற்கான மறுமொழி மனதைக் கவர்கிறது. இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர், Snapchat பயனர்கள் 200 மில்லியனுக்கும் அதிகமான snapகளை ஒவ்வொரு நாளும் பகிர்கின்றனர். எங்கள் குழுவின் நம்பவியலா கடின உழைப்பிற்குத் தான் நன்றி கூற வேண்டும், குறைந்த மேற்செலவிலேயே Snapchat இன் வளர்ச்சியை எங்களால் ஆதரிக்க முடிந்தது.
Snapchat அனுபவத்தை மேம்படுத்தும் அதேவேளையில் தொடர்ந்து முன்னேறுவதற்காக, நாங்கள் பெரிய பொறியியல் குழுவை உருவாக்க வேண்டும், எங்கள் சேவையகக் கட்டணங்களை எப்படிச் செலுத்துவதென முடிவு செய்ய வேண்டும்.
எங்கள் சமீபத்திய சீரியஸ் பி பைனான்சிங்கில் முதன்மை முதலீட்டாளராக IVP ஐ Snapchat குழுவிற்கு வரவேற்கும் நல்வாய்ப்பைப் பெற்றோம். இச்சுற்றில் General Catalyst, Benchmark Capital, Lightspeed Venture Partners, SV Angel ஆகியனவும் பங்கேற்றன. Snapchat சமூகத்தின்மீது அவர்கள் கொண்ட நம்பிக்கைக்கு நன்றி பாராட்டுகிறோம், எங்கள் தொடர் வளர்ச்சியில் அவர்களுடன் இணைந்து பணியாற்றுவதை எதிர்நோக்குகிறோம்.
மைக்கல் லிண்டனைச் சுதந்திரமான நிர்வாகக் குழு உறுப்பினராகச் சேர்த்துள்ளோம். மைக்கல் சிறந்த திறமைசாலியும் ஆக்கப்பூர்வமான நிர்வாகியும் ஆவார், அவர் Snapchat புகழ்பெறுவதற்கு முன்பே அதன் மீது நம்பிக்கை வைத்திருந்தார். அவர் ஓர் மாபெரும் முன்மாதிரி, அவரின் நேரமும் ஆற்றலும் கிடைத்தமைக்கு நாங்கள் நன்றியுடையவர்களாய் உள்ளோம்.
சுருக்கமாகக் கூறினால் – புதுமையான வேடிக்கையான தயாரிப்பின் மூலம் ஒரு பெரிய நிறுவனத்தைக் கட்டமைக்க நாங்கள் உறுதிபூண்டுள்ளோம். நீங்களில்லாமல் நாங்கள் அதைச் செய்ய முடியாது. Snapchat இற்கான உங்கள் முடிவிலா ஆதரவிற்கும் உற்சாகத்திற்கும் நன்றி. அது எங்களுக்கு முக்கியமானது.
உற்சாகமூட்டும் ஆச்சரியங்கள் வர விருக்கின்றன…
Back To News