Snap Wraps on its Global AR Creator Celebration, Lens Fest

Lens Fest began as a close gathering of passionate Lens Creators in 2018, and expanded to a larger group of more than 100 Lens Creators in 2019. This year, we opened the festival to everyone through a virtual event in order to include AR creators and developers from around the world!
2018 ஆம் ஆண்டில் உற்சாகமிக்க லென்ஸ் உருவாக்கிகளின் படைப்பாளர்களின் நெருக்கமான கூட்டமாகத் தொடங்கியது, மேலும் 2019 ஆம் ஆண்டில் 100 க்கும் மேற்பட்ட Lens படைப்பாளர்களின் பெரிய குழுவாக விரிவடைந்தது. இந்த ஆண்டு உலகெங்கிலும் உள்ள AR உருவாக்கிகளையும் இணைத்துக் கொள்வதற்காக நாங்கள் மெய்நிகர் நிகழ்வின் மூலம் அனைவருக்குமான விழாவாகத் திறந்துள்ளோம்!
இன்று Snapchat இல் நீங்கள் காணும் பல AR அனுபவங்களை உருவாக்கிய கலைஞர்கள் வடிவமைப்பாளர்களின் இந்தச் சமூகத்தில் உள்ளவர்கள் யார்?
Snapchat இல் லென்ஸஸை உருவாக்கவும் வெளியிடவும் Lens Studioவைப் பயன்படுத்தும் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட லென்ஸ் உருவாக்கிகள் உள்ளனர். லென்ஸ் உருவாக்கி சமூகம் உலகம் முழுவதும் பரவியுள்ளது -- கிட்டத்தட்ட 200 நாடுகள், பிரதேசங்களைச் சேர்ந்த உருவாக்கிகளால் லென்ஸஸ் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. *
லென்ஸ் உருவாக்கிகள் 1.5 மில்லியனுக்கும் அதிகமான லென்ஸஸை உருவாக்கியுள்ளனர், இப்போது, சமூகத்தால் உருவாக்கப்பட்ட லென்ஸஸ் 1 டிரில்லியனுக்கும் அதிகமான முறை Snap பயனர்களால் பார்க்கப்பட்டுள்ளன! **
Lens Fest இல், உருவாக்கிகளின் நேரத்தைச் சேமிக்கக உதவும் சக்திவாய்ந்த புதிய கருவிகளையும் அம்சங்களையும் கொண்டு Lens Studio 3.3 ஐ வெளியிட்டோம். Lens Studioவின் மிக மேம்பட்ட திறன்களின் மூலமாக AR இல் சாத்தியமாகுபவற்றை முன்னெடுத்துச் செல்லும் AR உருவாக்கிகளுக்கும் வடிவமைப்பாளர்களுக்குமான எங்கள் ஆதரவை விரிவுபடுத்துவதற்காக $3.5 மில்லியன் முதலீட்டையும் நாங்கள் அறிவித்தோம். 2021 இன் தொடக்கத்தில் உருவாக்குபவர் நிதி வாய்ப்புகள் குறித்த கூடுதல் விவரங்களை அறிவிப்போம்.
ஆயிரக்கணக்கான லென்ஸ் உருவாக்கிகள் Lens Fest இல் இணைந்து ஆழ்ந்த மெய்நிகர் நிகழ்வு இடத்தை ஆராய்ந்தனர், இதில் இடம்பெற்றவை:
  • 3 நாட்கள் நிகழ்ச்சி
  • 9 முக்கிய அமர்வுகள்
  • 6 Lens Studio செயல்விளக்கங்கள்
  • 12 உருவாக்கியவர் அம்சங்கள்
  • 3 கூட்டாளர் அம்சங்கள்
  • 3 Spectacles திரைப்படத் திரையிடல்கள்
  • ஓர் ஊடாடு காட்சியகத்தில் 50+ லென்ஸ் உருவாக்கிகள்
  • மேலும் பல!
இந்த அமர்வுகள், செயல்விளக்கங்கள் மற்றும் அம்சங்களை Lens Studio YouTube ேனலில் பாருங்கள்.
* Snap Inc. உள் தரவு ஜனவரி 1 2018 - அக்டோபர் 28, 2020
* Snap Inc. உள் தரவு டிசம்பர் 2017 - அக்டோபர் 2020
Back To News