Snap Inc.

Today we are changing the name of our company to Snap Inc.
இன்று எங்கள் நிறுவனத்தின் பெயரை Snap Inc. என்று மாற்றுகிறோம்.
பாபியும் நானும் Picabooவில் வேலை செய்யத் தொடங்கி ஐந்தாண்டுகள் ஆகிவிட்டன, அச்சிறு செயலிதான் Snapchat ஆக மாறியது – ஓர் அற்புதமான குழுவை உருவாக்கியதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம், அக்குழு Snapchat ஐத் தொடர்ந்து விரிவுபடுத்தி கதைகள், நினைவுகள், லென்ஸஸ், மற்றும் பல தயாரிப்புகளை உருவாக்கியுள்ளது!
தொடக்கத்தில் எங்கள் நிறுவனத்திற்கு Snapchat Inc. என பெயரிட்டது பொருத்தமாக இருந்தது, ஏனெனில் அப்போது எங்களின் ஓரே தயாரிப்பு Snapchat மட்டுமே! நாங்கள் இப்போது Spectacles போன்ற பிற தயாரிப்புகளையும் உருவாக்கி வருவதால், ஒற்றைத் தயாரிப்பைத் தாண்டிய ஓர் பெயர் தேவைப்படுகிறது – அது எங்கள் குழு, பிராண்டின் பரிச்சியத்தையும் வேடிக்கையையும் இழப்பதாய் இருக்கக் கூடாது.
எனவே “chat” ஐக் கைவிட்டு Snap Inc என பயன்படுத்த முடிவு செய்தோம்!
எங்கள் பெயரை மாற்றியதில் மற்றொரு நன்மையும் உள்ளது: நீங்கள் எங்கள் தயாரிப்புகளைத் தேடும்போது நிறுவன விவரம் அல்லது நிதிப் பகுப்பாய்வு போன்ற சலிப்பூட்டும் விவரங்களுக்குப் பதிலாக தொடர்புடைய தயாரிப்புகளின் தகவல்களை எளிதில் கண்டுபிடிக்கலாம். நீங்கள் வேடிக்கையான விடயங்களுக்காக Snapchat அல்லது Spectacles ஐத் தேடலாம், Snap Inc. ஐ வால் ஸ்டிரீட் முதலீட்டாளர்களுக்காக விட்டு விடலாம் :)
இந்த மாற்றம் Snapchat, Spectacles உடனான உங்கள் அனுபவத்தை மேம்படுத்துவதுடன், உங்களுக்காகவும் உங்கள் நண்பர்களுக்காகவும் சிறந்த புதிய தயாரிப்புகளைத் தொடர்ந்து தயாரிப்பதற்கான கட்டமைப்பையும் உருவாக்கும்!
Back To News