29 ஜூன், 2023
29 ஜூன், 2023

Snapchat+: 4 மில்லியன் சந்தாதாரர்களுடன் 1 ஆண்டு கொண்டாட்டம்

ஓர் ஆண்டிற்கு முன்னால் இன்றைய நாளில் நாங்கள் பிரத்தியேகமான, சோதனையிலுள்ள மற்றும் வெளியீட்டிற்கு முந்தைய அம்சங்களுக்கான அணுகலை வழங்கும் எங்கள் சந்தா சேவையான Snapchat+ ஐ நாங்கள் அறிமுகப்படுத்தினோம். அப்போதிலிருந்து எங்கள் சந்தாதாரர் சமூகமானது நான்கு மில்லியனுக்கும் அதிகமான எண்ணிக்கையில் வளர்ச்சியடைந்துள்ளது.

Snapchat+ சந்தாதாரர்கள் தங்களின் நெருங்கிய நண்பர்கள், பிடித்தமான கிரியேட்டர்களுடனான தகவல் தொடர்பை மேம்படுத்தும் குறித்த கால இடைவெளியிலான பியூச்சர் டிராப்புகள் மற்றும் தங்கள் செயலியின் தோற்றத்தையும் உணர்வையும் தனிப்பயனாக்க அவர்களை அனுமதிப்பதையும் விரும்புகின்றனர்.

கடந்த பன்னிரண்டு மாதங்களில், இணையத்திற்கான Snapchat மற்றும் எங்கள் AI இயக்கும் சாட்பாட்டான My AI போன்ற புத்தம் புதிய வழங்கல்களின் முதல் தோற்றத்தை சந்தாதாரர்கள் பெற்றனர். இன்று, தனிப்பயன் செயலி தீம்கள், தனித்துவமான செயலி ஐகான்கள், உங்கள் #1 நெருங்கிய நண்பரை (#1 BFF) பின் செய்வதற்கான திறன் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட அம்சங்களுக்கான அணுகலை சந்தாதாரர்கள் கொண்டுள்ளனர் - இன்னும் பல விரைவில் வரவிருக்கின்றன, அவற்றில் பின்வருவன அடங்கும்:

  • எக்ஸ்பிரசிவ் அரட்டை செய்திகள்: பெரிய உணர்ச்சிகள் அல்லது சிறிய குறிப்புகளைப் பகிர்வதன் மூலம் உங்களை நீங்களே வெளிப்படுத்துங்கள். இப்போது, எக்ஸ்பிரசிவ் எழுத்துரு அளவுகளுடன் உங்கள் மனநிலைக்குப் பொருத்தமாக உங்கள் செய்திகளை உருவாக்கலாம்.

  • தனிப்பயன் அரட்டை வண்ணங்கள்: நண்பர்களுடனான உங்கள் செய்திகளுக்கு உங்களைப் போன்ற சாயல் கொண்ட வண்ணங்களைத் தேர்ந்தெடுங்கள்.

வரும் வாரங்களில் வரவிருக்கும் இந்தப் புதிய அம்சங்களைப் பாருங்கள். ஹேப்பி ஸ்னாபிங்!

செய்திகளுக்குத் திரும்புக