19 ஏப்ரல், 2023
19 ஏப்ரல், 2023
SPS 2023: உங்கள் நட்பை வளர்ப்பதற்கேற்ற புதிய Snapchat அம்சங்கள்
SPS 2023: உங்கள் நட்பை வளர்ப்பதற்கேற்ற புதிய Snapchat அம்சங்கள்
உங்களின் நெருக்கமானவர்களுடன் எப்போதும் இணைந்திருக்க உதவுகிறோம்
Snapchat இல் தொடர்பில் இருக்க பல வழிகள் உள்ளன, உங்களை வெளிப்படுத்திடுங்கள் மற்றும் உங்கள் தனித்துவமான நட்பை கொண்டாடுங்கள். இன்று, உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பம் — உங்களுக்கு நெருக்கமானவர்களுடன் எப்போதும் தொடர்பில் இருக்கும் வகையில் உதவிட நாங்கள் புதிய புதுப்பிப்புகளை பகிர்ந்துள்ளோம்.
அழைப்பு
ஒவ்வொரு மாதமும் 100 மில்லியனுக்கும் அதிகமான Snapchat பயனர்கள் குரல் வீடியோ மற்றும் வீடியோ அழைப்பின் மூலம் தொடர்பில் இருக்கிறார்கள்.1இப்போது, அழைப்புகள் மூலம் உங்கள் நண்பர்களிடம் இன்னும் நெருக்கமாகலாம்... புதிய அழைப்பு லென்ஸஸ் மூலம் நீங்கள் கிரிட்-இல் இருந்து விலகி இனி ஒரே ஃப்ரேமில் தோன்றலாம், விரைவில் விளையாட்டுகள் கூட விளையாடலாம் மற்றும் மெய்நிகரில் நேருக்கு நேர் பார்த்து கொண்டே புதிர்களுக்கு பதிலளிக்கலாம்.
கதைகள்
2013 முதல், நீங்கள் கதைகள் மூலம் உங்கள் வாழ்க்கையை நண்பர்களிடம் பகிர்ந்துள்ளீர்கள் மற்றும் இப்போது நீங்கள் இதனை இரண்டு புது வழிகளில் வெளிப்படுத்திடலாம். முதலாவது புதிய வகை கதை 'நள்ளிரவு' என்று அழைக்கப்படுகிறது. அடுத்த முறை இரவில் தாமதமாக படிக்கும் போது அல்லது வெளியில் செல்லும்போது, நள்ளிரவு கதைகளில் வெளிப்படுத்திடுங்கள் காலையில் வந்து இரவு கதையின் விளக்கத்தினை விரிவாக காணுங்கள். இரண்டாவது, சமூகங்கள் என்று அழைக்கப்படுகிறது. வகுப்பறை தோழர்களுடன் உங்கள் கண்ணோட்டத்தினை பகிர்ந்து கொள்ள அனுமதிக்கும் அம்சம். மாதம் முழுவதும், சமூகங்கள் கூடுதல் பள்ளிகளுக்கு விரிவாக்கம் செய்யப்படும்.
Snaps மற்றும் அரட்டைகள் இயல்பாக அழிந்திடும் வகையில் வடிவமைக்கப்பட்டாலும், சில Snaps-களை சேமிப்பதும் நல்லதுதான். உண்மையில், Snapchat நினைவுகள் மூலம் உருவாக்கப்பட்ட ஃப்ளாஸ்பேக்ஸ் ஒவ்வொரு நாளும் பல மில்லியன் கணக்கில் பார்வையிடப்படுகின்றன, இப்போது இந்த நினைவலைகளை உங்கள் நண்பர்களுடனான உரையாடல்களிலும் கொண்டு வருகிறோம், எனவே நீங்கள் ஒன்றாகச் சேமித்த உங்களுக்குப் பிடித்தமான ஸ்னாப்களின் தருணங்களை மீண்டும் பெறலாம். *
Snap வரைபடம்
Snap வரைபடம் பற்றி பேசும்போது, இடம் பகிர்வதற்கான புதிய விருப்பத்தை நாங்கள் சேர்த்துள்ளோம், இதனால் ஒவ்வொருவரும் இருக்கும் இடத்தினை எளிதாக அறிந்திடலாம். கூடுதலாக, 3D இல், புதிய அடையாளங்களை கண்டறிந்து பாருங்கள் மற்றும் நண்பர்கள் மற்றும் Snapchat சமூகத்தில் இடங்கள் பற்றி முந்தைய நாள் இரவில் வெளிவந்த புதிய குறிச்சொற்களை காணுங்கள்.
Snap வரைபடம் மற்றும் அதற்கு அப்பால் 1.7 பில்லியன் Snapchat பயனர்கள் Bitmoji ஆக தங்களை வெளிப்படுத்துகிறார்கள். * இந்த ஆண்டு, ஷாப்பிங் செய்யக்கூடிய பேஷன்களை சேர்த்துள்ளோம் இதன் மூலம் Bitmoji பார்ப்பதற்கு மட்டுமல்லாமல் உங்களைப் போன்றே ஆடை கூட அணிந்து கொள்ள செய்ய முடியும். விரைவில், எங்களிடமிருந்து தேர்வு செய்ய இன்னும் நிறைய ஸ்டைல்களை சேர்க்கவுள்ளோம் மற்றும் அவதார் பாணி புதிய பரிமாணத்தில் வாழ்வில் பரிணாமிப்பதோடு பெருமளவில் வெளிப்படுத்தும் மற்றும் தனித்துவம் வாய்ந்த அம்சங்களாகவும் இது இருக்கும்.
கூட்டத்திலிருந்து தனித்து நிறக Bitmoji Fashion மட்டுமே ஒரு வழி அல்ல. இன்று, Snapchat+ மூலம் கிடைக்கும் பிரத்யேக அம்சங்களின் மூலம் 3 மில்லியனுக்கும் அதிகமான Snapchat பயனர்கள் தங்கள் Snapchat ஐ தனிப்பயனாக்குகின்றனர், மற்றும் விரைவில், மேம்படுத்த விரும்பும் Verizon வாடிக்கையாளர்கள் தங்கள் + play தளத்தின் மூலம் சந்தா வாங்கி கொள்ளலாம்.4
ஹேப்பி ஸ்னாபிங்!
1Snap Inc. internal data April - May 2022
2Snap Inc. internal data February 14 - March 13, 2023
3Snap Inc. internal data July 16, 2014 - February 21, 2023
4Snap Inc. internal data as of Mar 31, 2023