19 ஏப்ரல், 2023
19 ஏப்ரல், 2023

SPS 2023: My AI -இல் அடுத்தது என்ன

உலகம் முழுவதும் My AI ஐ Snapchat பயனர்களுக்கு கொண்டு வருதல்

Snapchat + சந்தாதாரர்கள் My AI ஐ விரும்புகிறார்கள். எங்கள் AI மூலம் இயங்கும் சாட் பாட், திரைப்படங்கள், விளையாட்டு, செல்லப்பிராணிகள் பற்றி மேலும் அறிந்திட தினமும் 2 மில்லியன் சாட் செய்திகளுக்கும் மேல் உலகெங்கும் அனுப்பி வருகின்றனர். இன்று, உலகெங்கிலும் உள்ள Snapchat பயனர்களுக்கு புதிய அம்சங்களுடன் My AI-ஐ பயன்படுத்த அறிமுகப்படுத்துகிறோம்:

1. My AI ஐ தனிப்பயனாக்கலாம்: உங்கள் AI ஆயிரக்கணக்கான Bitmoji வேறுபாடுகளுடனும் மற்றும் அதனை உங்களின் அசல் வெளிப்பாடாக தனிப்பயனாக்க்கிடும் வகையிலும் வெளி வருகிறது. உங்கள் AI க்காக ஒரு Bitmoji தனிப்பயனாக்கி வடிவமைத்திடுங்கள், அதற்கு பெயரிடுங்கள் மற்றும் அதனுடன் அரட்டை அடித்திடுங்கள்.

2. நண்பர்கள் உடனான உரையாடல்களில் My AI ஐ கொண்டு வாருங்கள்: நண்பர்களுடனான உங்களின் எந்தவொரு உரையாடல்களிலும் My AI ஐ கொண்டு வருவது எளிது. @My AI எனக் குறிப்பிட்டு குழு சார்பில் கேள்விகளை கேட்கத் தொடங்குங்கள். AI அரட்டையில் நுழைந்தததும் அதன் பெயரின் அருகில் ஒரு பிரகாசத்தினை கொண்டிருக்கும்.

3. Snapchat பரிந்துரைகள்: My AI, Snap வரைபடத்திலிருந்து இடங்கள் பற்றிய பரிந்துரைகளையும் மற்றும் பொருந்தும் லென்ஸஸ் பரிந்துரைகளையும் வழங்கிடும். உதாரணமாக, உங்கள் குடும்பம் வார இறுதியில் மேற்கொள்ள கூடிய நடவடிக்கைகளை பரிந்துரைக்க கேட்கலாம் அல்லது உங்கள் நண்பருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்க பொருத்தமான லென்ஸ் பரிந்துரைக்குமாறு My AI ஐ கேட்கலாம்.

4. My AI உடன் Snaps-பகிர்ந்திடுங்கள்: எங்கள் சமூகம் My AI இல் Snaps-ஐ அனுப்பி அதற்கு பதிலை பெறலாம்.

5. Snap You Back காணுங்கள்: சராசரியாக ஒவ்வொரு நொடியும் 55,000 Snap-கள் Snapchat இல் உருவாக்கப்பட்டு வருகின்றன, ஸ்னாப்பிங் என்பது எங்கள் சமூகம் தொடர்பில் இருப்பதற்கான இயற்கையான இயல்பாக உள்ளது. விரைவில் Snapchat + சந்தாதாரர்கள் My AI இல் Snap எடுக்கலாம் மற்றும் தனித்துவமான காட்சி வழி உரையாடல்கள் போன்ற Snapகளை பதில்களாக தொடர்ந்து பெறலாம்!

My AI துல்லியத்தன்மையுடன் இருக்கிறது என சொல்ல முடியாது, ஆனால் நாங்கள் பல முன்னேற்றங்களை மேற்கொண்டுள்ளோம். உதாரணமாக, 99.5% My AI இன் பதில்கள் எங்கள் சமூக வழிகாட்டுதல்களுக்கு இணங்க உள்ளன. பின்வருபவை மூலம் முன்னேற்ற செய்ய முயற்சித்துள்ளோம்:

  • பொருத்தமற்ற அல்லது தீங்குவிளைவிக்கக்கூடிய பதில்களிலிருந்து பாதுகாப்பளித்து உதவுவதற்காக எங்கள் சமூக வழிகாட்டுதல்களை பின்பற்றும் வகையில் My AI ஐ நிரலாக்கம் செய்து வருகிறோம்.

  • Snapchat பயன்பாட்டாளர்களின் பிறந்த தேதிகளைப் பயன்படுத்தி அண்மை காலத்திற்கேற்ற சமிக்ஞை செயல்படுத்துவதால், சாட் பாட் தொடர்ந்து அவர்களின் வயதை கருத்தில் கொண்டே பரிசீலிக்கும்.

  • கூடுதல் மதிப்பீட்டு தொழில்நுட்பத்தை சேர்த்துள்ளோம், இது தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கங்களின் தீவிரத்தை மதிப்பீடு செய்யவும் மற்றும் Snapchat பயனர்கள் சேவையினை தவறாக பயன்படுத்தினால் My AI அணுகலை தற்காலிகமாக முடக்கி கட்டுப்படுத்தவும் அனுமதிக்கும்.

  • எங்கள் செயலியில் உள்ள பெற்றோர்களுக்கான கருவிகள், குடும்ப மையம் இல் My AI ஐ இணைக்க தயாராகி வருகிறோம், இதனால் பராமரிப்பாளர்கள் தங்கள் பதின்வயதினர் My AI உடன் உரையாடுகின்றனரா மற்றும் எவ்வளவு நேரம் உரையாடுகின்றனர் என்பது போன்றவற்றை தெரிந்து கொள்ள முடியும்.

AI ஐ பாதுகாப்பான, வேடிக்கையான மற்றும் பயனுள்ள அனுபவமாக உருவாக்க இந்த ஆரம்ப கற்றல்களை தொடர்ந்து பயன்படுத்தவிருக்கிறோம், மேலும் உங்கள் கருத்துகள் குறித்து அறியவும் நாங்கள் ஆர்வமாக இருக்கிறோம். எந்தவொரு My AI பதில் மீது அழுத்திப் பிடித்து எங்கள் குழுவிற்கு விரிவான கருத்துகளை வழங்கிடலாம்.

ஹேப்பி ஸ்னாபிங்!

செய்திகளுக்குத் திரும்புக