28 ஏப்ரல், 2022
28 ஏப்ரல், 2022

Welcome to SPS 2022

Snapchat has changed a lot over the years, and our camera has become far more powerful – evolving from a way to communicate visually in a Snap into an augmented reality platform.

ஏப்ரல் 28, 2022 அன்று நான்காவது Snap கூட்டாளர் உச்சிமாநாட்டில் Snap Inc. நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி இவான் ஸ்பீகல் கலந்துகொண்டு வழங்கிய சில முக்கிய குறிப்புகள் பின்வருமாறு. நீங்கள் முழு காணொளியையும்இங்கு காணலாம். 

அனைவருக்கும் வணக்கம், 4th Snap கூட்டாளர் உச்சி மாநாட்டிற்கு வரவேற்கிறோம்!

இன்று உங்களுடன் நிறைய அற்புதமான விஷயங்களை பகிர்ந்து கொள்ளவிருக்கிறோம்.

ஆனால் முதலில், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரலில் உள்ள உங்கள் அனைவருடனும் பங்குகொள்வது மிகவும் பெருமையாக உள்ளது என்பதை சொல்லிக் கொள்கிறேன்.

உங்கள் கூட்டாண்மைக்காக அனைவரும் மிகப் பெரிய நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

உங்களுடன் இணைந்து பணியாற்றுவது அளப்பிற்கரிய கொண்டாட்டமாக இருக்கிறது. ஒரு காலத்தில் கம்யூட்டிங்கிற்காக முன்னிறுத்தப்பட்ட தொலைங்க்கு பார்வையாக இருந்த இணைப்பு நிஜமாக்கம், இப்போது இன்றுநம் கேமரா வாயிலாக சாத்தியமாகியுள்ளது.

உலகம் முழுவதும் 300 மில்லியனுக்கும் அதிகமான தினசரி செயலில் உள்ள பயனர்களுடன், 600 மில்லியனுக்கும் அதிகமான எங்கள் சமூகத்திற்கு சேவை செய்வது மகிழ்ச்சி அளிக்கிறது.

நாம் இப்போது 20 நாடுகளில் 13-34 வயதுடையவர்களில் 75% க்கும் அதிகமானோரை சென்றடைந்துள்ளோம். எங்கள் உலகளாவிய சமூகம் தொடர்ந்து வளர்ந்து வருகிறது, தொடர்ந்து மூன்று ஆண்டுகளில் ஆண்டுதோறும் தினசரி பயனர் வளர்ச்சி மேம்பட்டு முன்னேற்றி வளர்ந்து வருகிறது.

பல ஆண்டுகளாக Snapchat மாற்றம் கண்டு வருகிறது, மேலும் நமது கேமரா மிகவும் சக்திவாய்ந்த ஆக உள்ளது - காட்சி ரீதியாக தொடர்பு கொள்ளும் வழியான Snap-லிருந்து இணைப்பு நிஜமாக்க தளமாக உருவாகிறது.

சராசரியாக, கேமரா மூலம் முற்றிலும் புதிய வழிகளில் கம்ப்யூட்டிங் செய்வதன் மூலம், Snapchat இல் இணைப்பு நிஜமாக்கம் லென்ஸுடன் நாள் ஒன்றுக்கு 6 பில்லியன் முறை மக்கள் இடைவினை புரிகின்றனர்.

இன்று, உக்ரைனில் உள்ள எங்கள் குழு உறுப்பினர்களுக்கு Snap கூட்டாளர் உச்சிமாநாட்டை அர்ப்பணிக்கிறோம். Looksery தொடங்கப்பட்ட இடம் உக்ரைன் ஆகும், து இணைப்பு நிஜமாக்கம் நிறைந்த உண்மைத் தளத்திற்கான அடித்தளத்தை உருவாக்கிய நிறுவனமாகும்.

நாங்கள் உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் தயாரிப்புகள் மற்றும் சேவைகள் எங்கள் உக்ரைனியன் குழு உறுப்பினர்களின் படைப்பாற்றல் மற்றும் திறமை இல்லாமல் சாத்தியமடைந்து இருக்காது, ேலும் பல அப்பாவி உயிர்களைக் கைப்பற்றிய போர் நடவடிக்கைகள் எங்கள் இதயங்களை நொறுக்கிவிட்டன.

நாங்கள் உக்ரைனில் அமைதி நிலவ பிரார்த்திக்கிறோம்.

இணைப்பு நிஜமாக்கம் மிகவும் முக்கியம் ஏனென்றால் இது உலகில் எங்கள் கண் முன்னே நாங்கள் பார்க்கும் மற்றும் அனுபவித்துணருபவற்றை கொண்டு கம்ப்யூட்டிங் ஆற்றலை ஒருங்கிணைக்கிறது. இது நன்கு அறியப்பட்ட சூழலில் கம்ப்யூட்டிங் செய்ய அனுமதிக்கிறது, தொழில்நுட்பத்தினை நம் வாழ்வுடன் ஒன்றோடு ஒன்று பிணையச் செய்கிறது.

இணைப்பு நிஜமாக்கம் எங்கள் சுய-வெளிப்பாட்டிற்கான விளையாட்டு கருவியாகவே தோன்றியது, ஆனால் இது எங்கள் கூட்டாளர்களின் புதுமைகள் மூலம் மிகவும் முன்னேறி உள்ளது. படைப்பாளர்கள் மற்றும் உருவாக்குநர்கள் எங்கள் சமூகத்திற்கு புதிய மொழிகளைப் கற்றுக்கொள்வதை உறுதி செய்ய, இது முன்பு ஒருபோதும் இல்லாத வகையில் நேரடி நிகழ்வுகளை அனுபவித்தல், முன்பு சொல்லப்படாத கதைகளை கூறும் நினைவுச்சின்னங்களை உருவாக்குதல், மற்றும் புத்தம் புதிய ஸ்னீக்கர்களை அணிந்து பார்த்து முயற்சித்தல் போன்ற பல AR அனுபவங்களை உருவாக்கி வருகின்றனர்.

இணைப்பு நிஜமாக்கத்தில் எங்கள் முதலீடுகள், மனிதகுலத்திற்கு சேவை செய்யும் மற்றும் உள்ளுணர்வுடன் இயைந்த மற்றும் பயன்படுத்த நன்கு தெரிந்த தொழில்நுட்பத்தை உருவாக்குவதற்கான எங்கள் தொடர்ச்சியான முயற்சிகளை பிரதிபலிக்கிறது.

நாங்கள் சுய-வெளிப்பாட்டை மேம்படுத்த, Snapchat இல் கேமாரவை தொடங்கியது முதல் ஆரம்பித்தோம். பின்னர், நாங்கள் தனிப்பட்ட முறையில் ஒருவருடன் தொடர்பு கொள்வது போல மற்றும் நண்பர்கள் இணைப்பதில் கவனம் செலுத்துவதைப் போலவே டிஜிட்டல் தகவல்தொடர்பு ஒளிபரப்பாக மாறியுள்ளோம். மக்கள் தங்கள் முழு அளவிலான மனித உணர்வுகளை வெளிப்படுத்த வசதியாக உணர வேண்டும் என்று நாங்கள் எப்போதும் விரும்புகிறோம்.

இதன் விளைவாக, 90%க்கும் அதிகமான Snap பயன்பாட்டாளர்கள் தாங்கள் வசதியாகவும், மகிழ்ச்சியாகவும் Snap பயன்படுத்தும் போது தொடர்பில் இருப்பது போன்றும் உணர்வதாக கூறுகின்றனர். (1)

Snapchat என்பது மற்ற செயலிகளுடன் ஒப்பிடும்போது, #1 மகிழ்ச்சிகரமா தளமாகும். (2)

பல ஆண்டுகளாக, எங்கள் கூட்டாளர்கள் Snapchat-ற்கு உருவாக்கி வழங்கக் கூடிய வழிகளை மேம்படுத்தி உருவாக்கி வருகிறோம் மற்றும் இணைப்பு நிஜமாக்கம் அனுபவங்கள், உள்ளடக்கம், விளையாட்டுகள் மற்றும் பலவற்றுடன் பார்வையாளர்களை சென்றடைந்து வருகிறோம். கூடுதலாக, எங்கள் கூட்டாளர்கள் Snap தொழில்நுட்பத்தினை தங்கள் சொந்த செயலிகள் மற்றும் சேவைகளில் Snap கிட், கேமரா கிட் Bitmoji ஒருங்கிணைப்புகள் பயன்படுத்தி கொண்டு வருகின்றனர். இப்போது நாங்கள் எங்கள் சமூகத்திற்கு புதுமையான தயாரிப்புகள் மற்றும் சேவைகளை வழங்க அரை மில்லியன் கூட்டாளர்கள், படைப்பாளிகள் மற்றும் உருவாக்குநர்களை இணைத்து பணியாற்றி வருகிறோம்.

ஏற்கனவே, 250,000 க்கும் மேற்பட்ட படைப்பாளர்கள் 5 டிரில்லியன் முறை பார்க்கப்பட்ட 2.5 மில்லியனுக்கும் அதிகமான லென்ஸ்களை உருவாக்கியுள்ளனர்.

இப்போது 21 நாடுகளில் 700 Discover கூட்டாளர்கள் உள்ளனர், கடந்த ஆண்டில், அரை பில்லியன் Snapchat பயனர்கள் Discover இல் ஷோக்களைப் பார்த்துள்ளனர்.

ஸ்பாட்லைட் பார்க்க செலவிட்ட நேரம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது, மேலும் கடந்த வருடத்தை காட்டிலும் மக்கள் இப்போது சராசரியாக ஒரு வாரத்தில் ஸ்பாட்லைட்டிற்கு 5 மடங்கிற்கு மேல் முடிந்த வரை Snapகளை சமர்ப்பிக்கின்றனர்.

வெளியீடு முதல், 340 மில்லியனுக்கும் அதிகமான Snapchat பயனர்கள் விளையாட்டுகள் மற்றும் மினிஸ் பயன்படுத்தியுள்ளனர்.

Snap வரைபடத்தில் எங்கள் முதல் இரண்டு லேயர்களான நினைவுகள் மற்றும் எக்ஸ்ப்ளோர் ஆகியவை அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து 100 மில்லியனுக்கும் அதிகமான முறை பயன்படுத்தப்பட்டுள்ளன.

Snap கிட் உருவாக்குநர்கள் மற்றும் கூட்டாளர்கள் Snapchat பயனர்கள் தங்களை வெளிப்படுத்துவதற்கு உதவுகின்றனர். கடந்த ஆண்டில், Snapchat பயனர்கள் எங்கள் கூட்டாளர்களின் செயலிகளிலிருந்து உள்ளடக்கத்தை பகிர்ந்து கொண்டுள்ளனர், Snapchat-இல் 6 பில்லியன் முறைக்கும் மேல் Spotify இல் இருந்து பாடல்கள் அல்லது ட்விட்டரிலிருந்து கீச்சுகள் போன்றவற்றை பகிர்ந்துள்ளனர்.

நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்த முயற்சி செய்யும் அடுத்த தலைமுறை இளம் தலைவர்களை ஆதரிக்க கூட்டாளர்களுடன் நாங்கள் பணியாற்றி வருகிறோம்.

கடந்த அக்டோபர் மாதம், பொது அலுவலகத்தினை உள்ளூர் சமூகங்களில் இயக்குவதன் மூலம் எவ்வாறு மாற்றத்தினை உருவாக்குவது என்பது பற்றி Snapchat பயனர்கள் மேலும் அறிய 10 இலாப நோக்கம்மற்றவற்ற நிறுவனங்களுடன் கூட்டாளர்களாக நாங்கள் இணைத்துள்ளோம்.

நண்பர்கள் மற்றும் எங்கள் கூட்டாளர் அமைப்புகளின் ஆதரவுடன், ரன் ஃபார் ஆஃபிஸ் மினி என்பது Snapchat பயனர்கள் உள்ளூர் தலைமைத்துவத்தை பற்றி மேலும் அறிந்துகொள்ள ஒரு வேடிக்கையான மற்றும் பயனுள்ள வழி ஆகும். Snapchat பயனர்கள் ரன் ஃபார் ஆஃபிஸிற்கு நண்பர்களை பரிந்துரைக்கலாம் மற்றும் உள்ளூர் பதவிகளை ஆராயலாம், அவர்கள் கவலைக் கொள்ளும் சிக்கல்களின் அடிப்படையில் வரிசைப்படுத்தலாம் - அனைத்தும் மையப்படுத்தப்பட்ட ஒரு பிரச்சார டேஷ்போர்டு.

4 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் ஏற்கனவே ரன் ஃபார் ஆஃபிஸ் மினி பயன்படுத்தியுள்ளனர். எங்கள் கூட்டாளர்களில் ஒருவருடன் 25,000 பதிவுகளுக்கு பிறகு, Snapchat பயனர்கள் ஏற்கனவே தங்கள் பிரச்சாரங்களை படிப்படியாக தொடங்க ஏற்கனவே தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

Snapchat சமூகம் மற்றும் எங்கள் கூட்டாளர் அனைவரின் ஆர்வம், படைப்பாற்றல் மற்றும் நம்பிக்கையின் மூலம் நாங்கள் மிகவும் ஈர்க்கப்பட்டுள்ளோம். ஒளிமயமான எதிர்காலத்தினை உருவாக்க நாங்கள் ஒன்றிணைந்து செயல்படுவதால், உங்கள் அனைவருக்கும் ஒத்துழைப்பினை நல்குவதில் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறோம்.

1. 2022 Snap Inc. ஆல் அறிமுகப்படுத்தப்பட்ட ஆல்டர் முகவர்கள் ஆய்வு

2. Snap Inc. ஆல் commissioned செய்யப்பட்ட Purchase ஆய்வுகளுக்கான 2021 Goodques பாதை

Back To News