Story Playlist

Starting today for select Snapchatters in our Android community and rolling out soon across all Android and iOS, the Auto Advance feature will be removed to give you control of your Story viewing experience once again!
நாங்கள் முதன் முதலில் ஆட்டோ அட்வான்ஸை உருவாக்கியபோது, உங்கள் எல்லா கதைகளையும் சமீபத்திய புதுப்பிப்புகளில் ஒன்றன் பின் ஒன்றாக பிளே செய்வதன் மூலம் உங்கள் நண்பர்களுடன் எளிதாக இணைந்திருக்க விரும்பினோம்.
துரதிர்ஷ்டவசமாக, இந்த மாற்றம் எந்தக் கதையைப் பார்க்க வேண்டும் என்பதைத் தனித்தனியாகத் தேர்வுசெய்வதை இயலாததாக்கியது. சில நேரங்களில் நாம் நம் நெருங்கிய நண்பர்கள் அல்லது குடும்பத்தினர் என்ன செய்கிறார்கள் என்பதைப் பார்க்க விரும்புகிறோம் - ஆனால் அனைத்து நண்பர்களையும் குறித்து அல்ல - மேலும் ஆட்டோ அட்வான்ஸ் அதைத் தடுத்தது.
இன்று தொடங்கி எங்கள் Android சமூகத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட Snapchat பயனர்களுக்கும், மேலும் அனைத்து Android மற்றும் iOS -இல் விரைவில் வெளிவர இருப்பதிலும், மீண்டும் ஒரு முறை உங்கள் கதை பார்க்கும் அனுபவத்தின் கட்டுப்பாட்டை உங்களிடமே ஒப்படைப்பதற்காக ஆட்டோ அட்வான்ஸ் அம்சம் அகற்றப்படும்!
கதையைக் காண அதன் மீது தட்டினால் போதும். சமீபத்திய புதுப்பிப்புகளில் உங்களை நாங்கள் அடுத்த கதைக்குத் தானாக முன்னெடுத்துச் செல்ல மாட்டோம்.
நண்பர்களின் வாழ்க்கை நிகழ்வுகளை அறிந்துகொள்வதை எளிதாக்கும் இந்த யோசனையை நாங்கள் முற்றிலுமாகக் கைவிடவில்லை - எனவே ஆட்டோ அட்வான்ஸிலிருந்து நாங்கள் கற்றுக்கொண்டவற்றை எடுத்துக் கதை பிளேலிஸ்ட்டை உருவாக்கினோம்.
கதை பிளேலிஸ்ட் என்பது நீங்கள் பார்க்க விரும்பும் கதைகளைத் தேர்ந்தெடுத்து, அவற்றை நீங்கள் தேர்ந்தெடுத்த வரிசையில் முழுத் திரையில் தடையின்றிப் பார்ப்பதற்கான ஒரு சுலபமான வழியாகும்.
உங்கள் பிளேலிஸ்ட்டில் உங்கள் நண்பரின் கதையைச் சேர்க்க அவரது பெயரின் இடதுபுறத்தில் உள்ள கதை தம்ப்நெயிலைத் தட்டவும். பார்ப்பதற்கு, திரையின் அடிப்பகுதியில் உள்ள பிளே பொத்தானை அழுத்தவும்!
Back To News