Third-Party Applications and the Snapchat API

Over the past few days we’ve fielded a number of questions about our API and third-party applications after a website that offered to save Snaps indicated that their database had been breached. We are grateful that the service provider acknowledged that Snapchat was never compromised, but we wanted to use this as an opportunity to reiterate the unfortunate threats these third-party applications can pose to our community.
Snaps-ஐ சேமிக்க முன்வந்த வலைத்தளம் ஒன்று அவற்றின் தரவுத்தளம் தகர்க்கப்பட்டதாக குறிப்பிட்ட பிறகு கடந்த சில நாட்களில், எங்கள் API மற்றும் மூன்றாம் நபர் செயலிகளைப் பற்றி பல கேள்விகளை நாங்கள் களமிறக்கியுள்ளோம், Snapchat -இன் பாதுகாப்பில் எந்தவொரு சமரசமும் செய்யப்படவில்லை என்பதைச் சேவை வழங்குநர் ஒப்புக் கொண்டதற்கு நாங்கள் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம், ஆனால் இந்த மூன்றாம் தரப்பு செயலிகள் எங்கள் சமூகத்திற்கு ஏற்படுத்தக்கூடிய துரதிர்ஷ்டவசமான அச்சுறுத்தல்களை மீண்டும் வலியுறுத்துவதற்கான வாய்ப்பாக இதைப் பயன்படுத்த விரும்பினோம்.
எங்கள் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுப் பராமரிக்கப்படாமல், Snapchat API -ஐ அணுகும் எந்தவொரு செயலியும் மூன்றாம் தரப்பு செயலி எனப்படும். Snapchat புகழ் மற்றும் எங்கள் சமூகத்தின் அளவைக் கருத்தில் கொண்டு, Snapchat பயனர்களுக்குக் கூடுதல் சேவைகளை வழங்கச் சிறிய அளவிலான செயலி தயாரிப்பாளர்கள் தோன்றியதில் ஆச்சரியமில்லை. துரதிர்ஷ்டவசமாக, இந்தச் செயலிகள் பெரும்பாலும் Snapchat -இன் உள்நுழைவு சான்றுகளைக் கேட்கின்றன, மேலும் அவற்றை snap -களை அனுப்பவோ அல்லது பெறவோ மற்றும் கணக்கு தகவல்களை அணுகவும் பயன்படுத்துகின்றன.
மூன்றாம் தரப்பு செயலிக்கு உங்கள் உள்நுழைவு சான்றுகளை நீங்கள் வழங்கும்போது, ஒரு வடிவமைப்பாளர், மற்றும் அநேகமாக ஒரு குற்றவாளியை, உங்கள் கணக்கு தகவல்களை அணுகவும், உங்கள் சார்பாகத் தகவல்களை அனுப்பவும் அனுமதிக்கிறீர்கள்.
வெளிப்படையான மற்றும் நம்பகமான மூன்றாம் தரப்பு செயலியின் சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்க நேரமும், நிறைய வளங்கள் தேவை. அதனால்தான் நாங்கள் வடிவமைப்பாளர்களுக்கு ஒரு பொது API -ஐ வழங்கவில்லை, மேலும் எங்கள் சேவையை வழங்க நாங்கள் பயன்படுத்தும் தனிப்பட்ட API -ஐ அணுகுவதையும் தடை செய்கிறோம். எங்களைத் தவறாக எண்ணாதீர்கள் - Snapchat இயங்குதளத்திற்காக உருவாக்குவதற்கான உங்கள் ஆர்வத்தால் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் - ஆனால் அதைச் சரி செய்வதற்கு நாங்கள் நேரத்தை எடுத்துக்கொள்ளப் போகிறோம். அதுவரை, எங்களுடையது அல்லாத ஏதாவது செயலி Snapchat சேவைகளை வழங்குவதாகக் கூறுகிறது என்றால் அது எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை மீறுகிறது மற்றும் அதை நம்ப முடியாது என்று பொருள்.
Snapchat எப்போதும் நண்பர்களுடன் Snap -களை பகிர்ந்து கொள்ள ஒரு வேடிக்கையான இடமாக இருந்து வருகிறது. பாதுகாப்பு எதிர் நடவடிக்கைகள் மற்றும் பகுத்தறிவு ஆகியவற்றின் கலவை, எங்கள் சமூகத்தைப் பாதுகாப்பாக வைத்திருப்பதற்கான சிறந்த வழி ஆகும். Snapchat -இன் பாதுகாப்பை மேம்படுத்துவதன் மூலமும், எங்கள் API -ஐ அணுகும் மூன்றாம் தரப்பு செயலிகளை அகற்றுமாறு Apple மற்றும் Google -இடம் கூறுவதன் மூலமும் நாங்கள் தொடர்ந்து எங்கள் பங்கை ஆற்றுவோம். மூன்றாம் தரப்பு செயலிகளைப் பயன்படுத்துவதைத் தவிர்ப்பதன் மூலம் நீங்கள் எங்களுக்கு உதவலாம்.
Back To News