Update on Third-Party Apps

We promised that we would continue to improve the security and reliability of our service and today we’re announcing a change in the way we treat third-party applications.
சில வாரங்களுக்கு முன் Snaps களை சேமிப்பதற்கு வழங்கப்பட்ட ஒரு மூன்றாம் தரப்பு செயலி சமரசம் செய்யப்பட்டபோது மூன்றாம் தரப்பு செயலிகளைப் பற்றி நாங்கள் கடைசியாக எழுதினோம். அப்போது எங்கள் சேவையின் பாதுகாப்பையும் நம்பகத்தன்மையையும் தொடர்ந்து மேம்படுத்துவோம் என்ற உறுதியை அளித்தோம், இன்று மூன்றாம் தரப்பு பயன்பாடுகளை நாங்கள் கையாளும் முறையில் மாற்றத்தை அறிவிக்கிறோம்.
Snapchat ஐ சிறப்பாக்குவதற்காக வடிவமைப்பாளர்கள் முயற்சிக்கும் சில வழிமுறைகளை நாங்கள் விரும்புகிறோம். துரிதிருஷ்டவசமாக சில வடிவமைப்பாளர்கள் Snapchat பயனர்களை ஏமாற்றி அவர்களின் கணக்குகளைச் சமரசம் செய்யும் சேவைகளை உருவாக்குகின்றனர்.
எங்கள் சமூகத்தில் அவ்வாறு நிகழாமல் தடுக்க விரும்புகிறோம். இன்று முதல் Snapchat பயனர்கள் மூன்றாம் தரப்பு செயலிகளைப் பயன்படுத்துவதைக் கண்டறிந்தால் அதனை அவர்களுக்குத் தெரிவிப்போம், மேலும் அந்த Snapchat பயனர்களின் கடவுச்சொல்லை மாற்றவும், அங்கீகாரமற்ற செயலிகளைப் பயன்படுத்துவதை நிறுத்தவும் கேட்டுக்கொள்வோம்.
பெரும்பாலானோர் உங்கள் Snapchat அனுபவத்தில் இன்று எந்த வித்தியாசத்தையும் காணமாட்டீர்கள். அற்புதமான புதிய விடயங்கள் வரவிருக்கின்றன.
Snap செய்து மகிழ்க!
Back To News