Our Biggest Update Yet: v4.0 Phantom

It’s been a busy couple of months at Snapchat. With over 50 million snaps shared every day, we’ve had to do a lot of work to make sure our service can continue to support a growing community of snappers. Today, we’re thrilled to announce a major update to our iPhone application – video snaps!
சில மாதங்களாக Snapchat இடையராது இயங்கி வருகின்றது. ஒவ்வொரு நாளும் 50 மில்லியனுக்கும் அதிகமான snapகளைப் பகிரும், வளர்ந்து வரும் snap பயனர் சமூகத்தினை எங்கள் சேவைகள் தொடர்ந்து ஆதரிப்பதை உறுதிப்படுத்துவதற்காக நாங்கள் அதிகமாகப் பணியாற்றி வருகிறோம். இன்று எங்கள் iPhone செயலிக்கான முக்கியப் புதுப்பிப்பு வீடியோ snaps ஐ அறிவிப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறோம்!
Snapchat நிகழும் தருணங்களை அப்போதே பகிர்வதற்கானது அத்தருணங்களைப் பிடிக்கச் சிறந்த வழி வீடியோவாகும். துரதிருஷ்டவசமாக பெரும்பாலான கேமரா செயலிகளில் நீங்கள் ஸ்டில் கேமராவிலிருந்து வீடியோ கேமராவிற்குச் செல்லத் தயாராகும் நேரத்தில் அத்தருணங்கள் கடந்து விடுகின்றன. இது மிகவும் எரிச்சலூட்டுவதாகும். எனவே நாங்கள் வித்தியாசமான ஒன்றை உருவாக்கியுள்ளோம் - இது பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறோம்.
புகைப்படம், வீடியோ அமைப்புகளுக்கிடையே முன்னும் பின்னும் நிலைமாறுவதற்குப் பதிலாக நாங்கள் அவற்றை ஒரே பொத்தானாக இணைத்துள்ளோம். நீங்கள் புகைப்படம் எடுக்க விரும்பினால் பொத்தானைத் தட்டுங்கள். நீங்கள் வீடியோ எடுக்க விரும்பினால் பொத்தானைக் கீழ்நோக்கி நிறுத்தி வையுங்கள். பதிவு செய்து முடித்ததும் உங்கள் விரலை எடுங்கள். மிகவும் எளிமையானது. வீடியோ snapகள் பத்து வினாடிகள் நீண்டவை, புகைப்பட snapகளைப் போலவே செயலியில் ஒருமுறை மட்டுமே பார்க்க முடியும்.
அது மட்டுமில்லை - இந்தப் புதுப்பிப்பில் சிறந்த விடயங்கள் நிறைய உள்ளன. முழுத் திரை முன்காட்சியுடன் படம்பிடித்தல், அனுப்புதலை விரைவாக்கியுள்ளோம், அகலவாக்குத் தலைப்புகளைச் சேர்த்துள்ளோம் (உங்கள் iDevice ஐத் திருப்புங்கள்!) உங்களுக்கு snapகளை யார் அனுப்பலாம் என்பதை நிர்வகிக்க உதவும் புதிய அமைப்புகள் பக்கமும் உள்ளது.
எப்போதும் போல தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன! உதவி தேவை என்றாலோ ஹாய் சொல்ல விரும்பினாலோ தயக்கமின்றி மின்னஞ்சல் அனுப்புங்கள்: support@snapchat.com
Back To News