Who Can View My Snaps and Stories

Two questions we get a lot are “do you keep all of the Snaps?” and “do you look at them?” An earlier blog post detailed how Snaps are stored and when they are deleted, so now with the introduction of Stories, we’d like to share a bit about access.
எங்களிடம் அதிகம் கேட்கப்படும் இரண்டு கேள்விகள் "அனைத்து Snap -களையும் நீங்கள் வைத்துக்கொள்வீர்களா?" மற்றும் "நீங்கள் அவற்றைப் பார்ப்பீர்களா?"என்பவை ஆகும். Snap -கள் எவ்வாறு சேமிக்கப்படுகின்றன மற்றும் அவை எப்போது நீக்கப்படுகின்றன என்பதைப் பற்றி ஒரு முந்தைய வலைப்பதிவு இடுகை விவரித்துள்ளது, எனவே இப்போது கதைகளின் அறிமுகத்துடன், நாங்கள் அணுகலைப் பற்றி கொஞ்சம் பகிர விரும்புகிறோம்.
சேமிப்பு
எங்கள் முந்தைய வலைப்பதிவு இடுகையில் குறிப்பிட்டுள்ளபடி, எங்கள் சேவையகங்களிலிருந்து Snap-கள் அவற்றின் பெறுநர்களால் திறக்கப்பட்ட பின்னர் அவை நீக்கப்படும். எனவே அவை திறக்கப்படும் முன் அவற்றுக்கு என்ன ஆகும்? Snapchat-இன் பெரும்பாலான உள்கட்டமைப்பு Google-இன் கிளவுட் கம்ப்யூட்டிங் சேவையான ஆப் எஞ்சினில் ஹோஸ்ட் செய்யப்பட்டுள்ளது. திறக்கப்படாத Snap-கள் உட்பட எங்கள் தரவுகள் பெரும்பாலானவை நீக்கப்படும் வரை ஆப் எஞ்சினின தரவுத்தளத்தில் வைக்கப்படுகின்றன.
மீட்டெடுப்பு
டேட்டாஸ்டோரிலிருந்து திறக்கப்படாத Snap-களை மீட்டெடுக்க Snapchat திறன் உள்ளதா? ஆம் —டேட்டாஸ்டோரிலிருந்து Snap-களை மீட்டெடுக்க முடியாவிட்டால், அனுப்புநர் விரும்பிய பெறுநர்களுக்கு அவற்றை வழங்க முடியாது. சாதாரண சூழ்நிலைகளில் நாங்கள் கைமுறையாக மீட்டெடுத்து Snap-களைப் பார்க்கிறோமா? இல்லை. Snap-களை அவற்றின் பெறுநர்(கள்)க்கு அனுப்பும் சாதாரண செயல்முறை தன்னியக்கமானது.
ஒரு Snap இன்னும் திறக்கப்படவில்லை என்று கருதி அதை கைமுறையாக மீட்டெடுக்கும் போதான சூழ்நிலை என்ன? எடுத்துக்காட்டாக, பிற மின்னணு தகவல் தொடர்பு சேவை வழங்குநர்களைப் போலவே, தகவல்களையும் அணுகவும் வெளிப்படுத்தவும் சட்டத்தால் சில சமயங்களில் நாங்கள் அனுமதிக்கப்படுகிறோம், சில சமயங்களில் கட்டாயப்படுத்தப்படுகிறோம். உதாரணத்திற்கு, Snap -களின் உள்ளடக்கங்களுக்காகச் சட்ட அமலாக்கத்திடமிருந்து நாங்கள் ஒரு தேடல் ஆணையைப் பெற்றால் மற்றும் அந்த Snap -கள் இன்னும் எங்கள் சேவையகங்களிலிருந்தால், மின்னணு தகவல்தொடர்பு தனியுரிமை சட்டம் (ECPA) என்று அழைக்கப்படும் ஒரு கூட்டாட்சி சட்டம் Snap -களை கோரும் சட்ட அமலாக்க முகமைக்கு அவற்றை வழங்க எங்களைக் கடமைப்படுத்துகிறது. மேலும் தகவல்களுக்கு, நாங்கள் தகவல்களை எந்தச் சூழ்நிலைகளின் போது வெளியிடுவோம் என்பது பற்றி விவாதிக்கும் எங்கள் தனியுரிமைக் கொள்கைப் பகுதியைப் பார்க்கவும்.
மே 2013 முதல், எங்களுக்கு கிடைத்த ஒரு டஜன் தேடல் ஆணைகள், சட்ட அமலாக்கத்திற்கு திறக்கப்படாத புகைப்படங்களை சமர்ப்பிப்பதில் முடிவடைந்தன. அது ஒவ்வொரு நாளும் அனுப்பப்படும் 350 மில்லியன் Snap-களில் உள்ளடங்கியது.
Snap-களுக்கான தேடல் ஆணையைவழங்கலாமா என்பதை சட்ட அமலாக்கம் தீர்மானிக்கும் போது.சட்ட அமலாக்க கோரிக்கைகளின் படி சிலகாலத்திற்கு Snap-களை நாங்கள் பாதுகாக்க வேண்டும்.
திறக்கப்படாத Snap-களை கைமுறையாக மீட்டெடுப்பதற்கான கருவியை தற்போது நிறுவனத்தில் இரண்டு பேர் மட்டுமே அணுக முடியும், எங்கள் இணை நிறுவனர் மற்றும் சி.டி.ஓ, பாபி (அதை குறியிட்டவர்) மற்றும் நான்.
சரி, கதைகளுக்கு என்ன ஆகும்?
கதைகள் மற்றும் Snap-களுக்கு இடையிலான மிகப்பெரிய வித்தியாசம் என்னவென்றால், பயனரால் நீக்கப்படாவிட்டால், கதைகள் 24 மணிnநேரத்திற்கு தக்க வைக்கப்படுகின்றன மேலும் அந்த நேரத்தில் மீண்டும் மீண்டும் பார்க்க முடியும். திறக்கப்படாத Snap-கள் போலல்லாமல், பார்க்கும் வரை அல்லது திறக்கப்படாவிட்டால் 30 நாட்களுக்கு சேமிக்கப்படும், உங்கள் கதைகளில் சேர்க்கப்பட்ட Snap-கள் 24 மணி நேரத்திற்குப் பிறகு எங்கள் சேவையகங்களிலிருந்து நீக்கப்படும். மேலே Snap-களுக்கு விவரிக்கப்பட்டபடி கதைகள் அணுகலுக்கும் வெளிப்படுத்தலுக்கும் ஒரே சட்டத் தேவைகளுக்கு உட்பட்டவை.
சமூக வழிகாட்டுதல்கள்
எங்கள் பயன்பாட்டு விதிமுறைகள் மற்றும் சமூக வழிகாட்டுதல்கள் Snapchat -ஐ பயன்படுத்துவதற்கான விதிகளை உங்களுக்குத் தெரியப்படுத்தும். ஒரு பயனர் விதிகளை மீறுகிறார் என்ற புகாரை நாங்கள் பெற்றால், அவர்கள் பதிவிட்ட கதையை நாங்கள் மதிப்பாய்வு செய்து தகுந்த நடவடிக்கை எடுக்கலாம். கதையை நீக்குதல், கணக்கில் எச்சரிக்கையைக் காண்பித்தல் அல்லது கணக்கை மூடுதல்ஆகியவை இதில் அடங்கும்.
எங்கள் தனியுரிமைக் கொள்கையில் எங்கள் நடைமுறைகளைப் பற்றிய கூடுதல் தகவல்கள் உள்ளன. நாங்கள் எவ்வாறு வேலை செய்கிறோம் என்று இந்தப் பதிவு உங்களுக்கு விளக்கியிருக்கும் என்று நம்புகிறோம். உங்கள் படைப்பாற்றல் மற்றும் உற்சாகத்தைப் பார்த்து நாங்கள் எப்போதும் வியப்படைக்கிறோம். ஒரு அற்புதமான சமூகத்தை கட்டமைத்ததற்கு நன்றி.
Back To News