We’re Sorry

We’ve been working day and night to accommodate the massive increases in traffic on the Snapchat service and prepare for a major product update. With millions of snaps sent every day, sometimes our servers are slower than we’d like. To address that problem we developed a faster way to write data to our servers. Unfortunately, this morning, when we pushed that change, some account data was corrupted. This affected 0.3% of our users.
Snapchat சேவையில் தரவுப் போக்குவரத்தின் பாரிய அதிகரிப்பிற்கு இடமளிப்பதற்கு இரவு பகலாய் உழைத்து வருவதுடன் பெரிய தயாரிப்புப் புதுப்பிப்பிற்கும் தயாராகி வருகிறோம். ஒவ்வொரு நாளும் மில்லியன் கணக்கான snapகள் அனுப்பப்படுவதால், சில நேரங்களில் எங்கள் சேவையகங்கள் நாங்கள் விரும்புவதைக் காட்டிலும் மெதுவாய் உள்ளன. அந்தப் பிரச்சினையைச் சரிசெய்வதற்காக எங்கள் சேவையகங்களில் தரவுகளை எழுதுவதற்கான விரைவான வழியை வடிவமைத்துள்ளோம். துரதிஷ்டவசமாக இன்று காலை நாங்கள் அந்த மாற்றங்களை உந்தியபோது சில கணக்குத் தரவுகள் சிதைந்தன. இது எங்கள் பயனர்களில் 0.3% ஐப் பாதித்தது.
Snapchat செயலற்றுப் போகும்போது எவ்வளவு எரிச்சலேற்படும் என்பதை நாங்கள் அறிகிறோம். நண்பர்களுடன் இணைப்பிலிருக்கவும் ஒருவருக்கொருவர் சிரிப்பூட்டவும் நமக்குப் பிடித்த வழி இது. எங்கள் அற்புதமான snap பயனர்கள் அனைவருக்கும் எங்கள் சேவையை வழங்க முடியாத போது வருத்த மேற்படுகிறது.
Twitter, மின்னஞ்சல் வழியாக, Facebook இல் உங்கள் ஆதரவை மிகவும் மெச்சுகிறோம். பாதிக்கப்பட்டுள்ள அனைவரையும் தொடர்பு கொண்டு வருகிறோம், இதன் மூலம் அந்தக் கணக்குகளுக்கான அணுகலை மீட்டெடுக்கும் செயல்முறையை எங்களால் தொடங்க முடியும். நீங்கள் தொடர்ந்து சிக்கல்களை எதிர்கொண்டால் எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள்: support@snapchat.com
சில உற்சாகமூட்டும் தயாரிப்பு அறிவிப்புகள் வரவிருக்கின்றன – காத்திருங்கள், snap செய்து மகிழுங்கள்! இன்று உங்களைக் கைவிட்டோம் என்பதில் மிகவும் வருந்துகிறோம்.
Back To News