
AR படைப்பாளர்கள் மற்றும் டெவலப்பர்கள் வெகுமதி பெறுவதற்கும் வெற்றியடைவதற்கும் புதிய வழிகளை அறிமுகப்படுத்துகிறோம்
உலகிலேயே டெவலப்பர்களுக்கு மிகவும் நட்பான தளமாக இருக்கவும் அற்புதமான லென்ஸசை உருவாக்குதில் முதலீடு செய்ய டெவலப்பர்களுக்கு அதிகாரமளிக்கவும் நாங்கள் விரும்புகிறோம்
Snapஇல், உலகில் கிட்டத்தட்ட ஒவ்வொரு நாட்டில் இருந்தும் 375,000க்கும் அதிகமான எங்கள் AR படைப்பாளர்கள், டெவலப்பர்கள் மற்றும் குழுக்களுக்குப் பணமாக்கல் வாய்ப்புகளில் இருந்து Spectacles உடன் புதுமைபடைத்தல், Snapஇன் அதிநவீன தொழில்நுட்பம் வரை ஆதரவளிக்க உறுதிபூண்டுள்ளோம். இன்று, சவால் டேக்குகள், பிளஸ் கல்விநிலையக் கட்டணம் மற்றும் Spectaclesக்கான சிறப்பு மாணவர் தள்ளுபடி போன்றவற்றை அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சியடைகிறோம், இது லென்ஸசை உருவாக்குவதை இன்னும் எளிமையானதாக மாற்றுகிறது.

சவால் டேக்குகளை அறிமுகப்படுத்துகிறோம்
Snap AR டெவலப்பர்கள் அவர்களின் படைப்புத்திறனுக்காக வெகுமதி பெற புதிய வழிகளை அறிமுகப்படுத்துவதில் உற்சாகமடைகிறோம்: சவால் டேக்குகள். இப்போது, செயலில் உள்ள சவால் டேக்குகளைப் பயன்படுத்தி லென்ஸசைச் சமர்பிப்பதன் மூலம் டெவலப்பர்கள் பணப் பரிசுகளை வெல்லலாம். இதில் அவர்களின் அசல்தன்மை, தொழில்நுட்பத்திறன், தீம் ஃபோகஸ் போன்றவை மதிப்பிடப்படுகின்றன.
அது வேலை செய்யும் விதம் இதோ: இதற்காக Lenslist AR மார்க்கெட்டிங் பிளாட்ஃபார்ம் உடன் நாங்கள் கூட்டணி அமைத்துள்ளோம், இதன்மூலம் உலகெங்கிலும் உள்ள 100க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த AR டெவலப்பர்கள் இதில் பங்கேற்க முடியும் – அவர்கள் முதல்முறையாக Snap ARஐக் கண்டறிபவர்களோ எங்கள் சமூகத்தில் ஏற்கனவே அங்கம் வகிப்பவர்களாகவோ இருக்கலாம்.
AR டெவலப்பர்கள் ஒவ்வொரு சவாலுக்கும் பதிவுசெய்து, எங்கள் AR படைப்புக் கருவியான Lens Studioவைப் பயன்படுத்தி லென்ஸை உருவாக்கலாம், அதனைப் பரிசுக்குக் கருத்தில் கொள்வதற்காக லென்ஸ் வெளியிடும் செயல்முறையின்போது சவால் டேக்கைச் சேர்க்கலாம். ஒவ்வொரு மாதமும் அறிவிக்கப்படும் புதிய சவால்களில் பங்கேற்று, மொத்தப் பரிசுத் தொகையில் உங்கள் பங்கினைப்பெற வாய்ப்பினைப் பெறுங்கள்.
முதல் சவால் டேகின் தீம் "ஹியூமர்" ஆகும், இது ஜனவரி 31 வரை பங்கேற்பிற்காகத் திறந்திருக்கும். இதன் மொத்தப் பரிசுத்தொகை $10,000 ஆகும், முதல், இரண்டாம், மூன்றாம் வெற்றியாளர்களுக்கான பரிசுத்தொகைகள் முறையே $2,500, $1,500, $1,000 ஆகும், இவை தவிர இருபது லென்ஸ்களுக்குச் சிறப்புப் பரிசாக $250 வழங்கப்படும். வெற்றிபெறும் லென்ஸஸ் பிப்ரவரி 14 அன்று அறிவிக்கப்படும்.
Spectaclesக்கான புதிய கல்வி நிலையக் கட்டணம் மற்றும் மாணவர் சிறப்புத் தள்ளுபடி
Spectaclesஐ அறிமுகப்படுத்தியதிலிருந்து, உலகெங்கிலும் உள்ள கல்லூரிகள், பல்கலைக்கழகங்களிலிருந்து மாணவர்கள், ஆசிரியர்கள், ஊழியர்களின் அபரிமிதமான ஆதரவைப் பெற்றுள்ளோம். இந்தச் சமூகத்தில் உள்ள அனைவரும் Spectaclesஐ அணுகுவதை உறுதிப்படுத்துவதற்காக, மாதத்திற்கு $49.50 அல்லது €55 என்ற சந்தாக் கட்டணத்தில் கல்வி நிலையக் கட்டணம் மற்றும் மாணவர் சிறப்புத் தள்ளுபடியை அறிமுகப்படுத்துகிறோம்.
Spectacles கிடைக்கும் எல்லா நாடுகளிலும் நீங்கள் எங்கள் கல்விநிலையக் கட்டணம் மற்றும் மாணவர் தள்ளுபடியைப் பெறலாம், இதில் அமெரிக்கா, பிரான்சு, ஜெர்மனி, ஸ்பெயின், இத்தாலி, ஆஸ்திரியா, நெதர்லாந்து ஆகிய நாடுகளும் அடங்கும். இந்த நாடுகளில் உள்ள அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் படிக்கும் மாணவர்கள் அல்லது பணியாற்றும் ஆசிரியர்கள் அனைவரும் இதற்குத் தகுதிபெறுவர்.
உங்கள் .edu அல்லது கல்வி நிறுவன மின்னஞ்சல் முகவரியைப் பயன்படுத்தி Spectacles டெவலப்பர் திட்டத்திற்கு விண்ணப்பியுங்கள், உருவாக்கத் தொடங்குங்கள் 1!