தலைமை
நிர்வாகக் குழு

அஜித் மோகன்
தலைமை வணிக அதிகாரி
அஜித் மோகன் பிப்ரவரி 2025 முதல் தலைமை வணிக அதிகாரியாகப் பணியாற்றி வருகிறார், இதற்கு முன்பாக ஜனவரி 2023 முதல் எங்களது APAC தலைவராக இருந்தார். Snap நிறுவனத்திற்கு முன்பாக, Meta இந்தியாவிற்கான துணைத் தலைவராகவும் நிர்வாக இயக்குநராகவும் நான்கு ஆண்டுகளுக்கு இருந்தார். இவர் ஹாட்ஸ்டார் நிறுவனத்தின் முதல் CEOஆகவும் இருந்தார், ஹாட்ஸ்டார் நிறுவனத்தைத் தொடங்கி அதனை இந்தியாவின் #1 உயர் மதிப்பு காணொளி ஸ்ட்ரீமிங் தளமாக உருவாக்கினார். அஜித் அவரது தொழில் வாழ்க்கையின் ஆரம்ப கட்டத்தில் McKinsey & Company மற்றும் Arthur D. Little நிறுவனத்தில் பல்வேறு பொறுப்புகளில் ஆசியா, வட அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் இலத்தீன் அமெரிக்காவைச் சேர்ந்த ஊடகம் மற்றும் தொலைத்தொடர்புத் துறை வாடிக்கையாளர்களுடன் பணியாற்றினார்.